Wednesday, 10 September, 2008

என் அடையாளங்கள்..
நேற்று வரை எனதென்று
நான் நினைத்த சூழல்
காலத்தோடு கலைந்துப் போனதை
என் புலன் தட்டி உணர்த்தின
சுவேச்சையாய் காலடி பதித்த இடங்களில்
தயக்க கோலமிட்ட என் கால் விரல்கள்...

தரையில் புரண்டெழுந்து நடை பழகிய
என் வீட்டு புழக்கடையும்,
காற்றை விட சுதந்திரமாய் பறந்து திரிந்த
பரந்த முற்றமும்,
படையலுக்காய் காத்திருக்கும் பண்டங்களை
பாட்டியின் கண்படாமல்
திருட்டு ருசி பார்த்த
இருட்டு சமையலறையும்,
களைத்த பின் கண்ணயர
இன்னொரு தாய் மடியாய்
ஒய்யாரமாய் நடுகூடத்தில்
காற்றோடு நடனமாடும்
அழகிய ஊஞ்சலும்,

இன்னும்
அதிகாலை பூபாளமாய்
குருவியின் செல்ல கூச்சலும்,
சாப்பிடும் நேரமறிந்து
தவறாமல் வந்து நிற்கும்
காகமும்,
எந்நேரமும் பின்பாட்டாய்
ஒலிக்கும் ரயில் சத்தமும்
இவை போல் பலவும் அடங்கியுள்ள
என் வீடு
இனி எனதல்ல
என் தாய் வீடு..

ஆயினும் மழைக் காலத்து காளான்களாய்
அங்கங்கே முளைத்து விட்டுருக்கின்றன
நான் இங்கே வாழ்ந்ததற்கான
என் அடையாளங்கள்..

11 comments:

G3 said...

:))))))))

Compassion Unlimitted said...

Adayaalangal ,kalvettugal pol ,endrum maraya !!
TC
CU

கீதா சாம்பசிவம் said...

//ஒய்யாரமாய் நடுகூடத்தில்
காற்றோடு நடனமாடும்
அழகிய ஊஞ்சலும்,

இன்னும்
அதிகாலை பூபாளமாய்
குருவியின் செல்ல கூச்சலும்,//

வார்த்தைகள் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. அப்புறம் என்ன ஒண்ணுமே காணோமே?? :((((( ரொம்ப பிசியோ???

Known Stranger said...

nice one- after a long time am at your blog page

The last adam said...

know what? you are getting better and better with each post...this one is truly awesome! truly awesome!!!

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

சுந்தரா said...

மழைக்காலத்துக் காளானாய் அல்ல, மாறாத நிலைப்படியாய் எப்போதும் நிலைத்திருக்கும்.

கவிதை மிகவும் அழகாயிருக்கிறது.

gopi said...

en adiayalangal....unmaiyaga unga kavithai gnanathin adaiyalam.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Anonymous said...

வேதாவின் கவிதைகளை ரசிக்கும் பலரில் நானும் ஒரு தோழி.உங்கள் கவிதை பக்கம் எந்தக் காரணத்தான் தடைப் பட்டிருந்தாலும்,தயவு செய்து தொடருங்கள்.

எல்லோராலும் கவிதை படைக்க முடியாது.எல்லோராலும் எண்ணங்களை எழுத்துக்களால் வடித்து பகிர்ந்துக்கொள்ள முடியாது.அதை வரமாக பெற்றவர்கள் பயன்படுத்தாமலிருப்பதும் தவறுதான்.

குயிலை கட்டாயப்படுத்தி பாட சொல்ல முடியாது.ஆனால் இயற்கையாக மலரும் திறமையை உபயோகப்படுத்தாமலிருப்பது அந்த திறமையை குறைய செய்யும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல...

தயவு செய்து உங்கள் கவிதைப் பக்கம் மட்டுமல்ல கருத்துப் பக்கங்களையும் மீண்டும் தொடருங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.

லேகா,USA

logic said...

Hi Vedha..remember me :)
AM back on to blog world not sure if you still chk these pages but if yes plesae visit by