பரபரவென கரைந்துப் போகும் வினாடிகளுக்கு மத்தியில்
தொடர் ஓட்டமாய் விரையும் நாளின் முடிவில்
நீங்காமல் இழையோடும் காதலோடு
தேடித்தேடி கோர்த்த வார்த்தைகளை வைத்து
இன்றும் எழுதத் தான் நினைத்தேன உன்னை...
தொடர் ஓட்டமாய் விரையும் நாளின் முடிவில்
நீங்காமல் இழையோடும் காதலோடு
தேடித்தேடி கோர்த்த வார்த்தைகளை வைத்து
இன்றும் எழுதத் தான் நினைத்தேன உன்னை...
நித்தமும் நித்தரையில் உன் ஆக்ரமிப்பை
நிசத்தில் உன் அன்பை
சற்றே கோபித்துக்கொள்ளேன் எனும் உன் ஆசையை
எந்நிலையிலும் கோபித்துக் கொள்ளவியலா உன் நடத்தையை
திடகாத்திரமான உன்னுள் மறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை
சொல்லவியலா எண்ணங்கள் சுற்றி வரும் உன் விருப்பத்தை
என்றும் என்றென்றும் எனக்கேயான உன்னை...
எழுதத் தான் நினைத்தேன்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
முடிவிலியாய்....

9 comments:
ஹலோ வேதாக்கா,
என்ன செளக்கியமா இருக்கியளா? கண்ணாலத்துக்கு அப்பரம இப்ப தான் வரீங்க போல. வாழ்க்கை எப்படி போகுது?
சரி விசயத்துக்கு வர்ரேன். ஆருக்கு இந்த மிரட்டல் லாம்?ஆனாலும் நல்லாதேன் இருக்கு. இப்படியே ஏதாச்சும் அடிக்கடி மிரட்டிட்டே இருங்க.வாழ்த்துக்கள்.
:)))))))))))
vanakkam Vedha...
romba nalla iruku :)
//எந்நிலையிலும் கோபித்துக் கொள்ளவியலா உன் நடத்தையை
திடகாத்திரமான உன்னுள் மறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை
சொல்லவியலா எண்ணங்கள் சுற்றி வரும் உன் விருப்பத்தை
என்றும் என்றென்றும் எனக்கேயான உன்னை...//
so nice :)
//ஹலோ வேதாக்கா,
என்ன செளக்கியமா இருக்கியளா? கண்ணாலத்துக்கு அப்பரம இப்ப தான் வரீங்க போல. வாழ்க்கை எப்படி போகுது?
சரி விசயத்துக்கு வர்ரேன். ஆருக்கு இந்த மிரட்டல் லாம்?ஆனாலும் நல்லாதேன் இருக்கு. இப்படியே ஏதாச்சும் அடிக்கடி மிரட்டிட்டே இருங்க.வாழ்த்துக்கள்.//
rippteettuu :-)
embuttu naal atchu inga vandhu...yemmaa thangachi vaira mookkuthi vandhu serndhuthaa.. :-)
Varugha..Mirattalaa ille aekkamanu puriyale..
nanna irukkukeengala ?
TC
CU
@ சுமதி
என்னது நான் உங்களுக்கு அக்காவா? ரொம்ப ஓவர் :) நான் நல்லா இருக்கேன் நன்றி :) இது மிரட்டல் எல்லாம் இல்ல அக்கா ;)
@காயத்ரி
என்ன சிரிப்பு? ;)
@ஷாலினி
பாராட்டுக்கு நன்றி :)
@சியாம்
நான் ரொம்ப நாளா இருக்கேன் நாட்டாமை :) சரி மூக்குத்தி வரவே இல்ல நீங்களும் வரல :)
@cu,
இது மிரட்டலும் இல்ல ஏக்கமும் இல்லை :) நான் ரொம்ப நல்லா இருக்கேன் நன்றி :)
//நித்தமும் நித்தரையில் உன் ஆக்ரமிப்பை
நிசத்தில் உன் அன்பை
சற்றே கோபித்துக்கொள்ளேன் எனும் உன் ஆசையை
எந்நிலையிலும் கோபித்துக் கொள்ளவியலா உன் நடத்தையை
திடகாத்திரமான உன்னுள் மறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை
சொல்லவியலா எண்ணங்கள் சுற்றி வரும் உன் விருப்பத்தை
என்றும் என்றென்றும் எனக்கேயான உன்னை...//
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்???? :)))))))) வாழ்த்துகளுடன்
//எழுதத் தான் நினைத்தேன்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
முடிவிலியாய்.... //
ரொம்பவும் நல்லா இருக்குங்க!
Post a Comment