
மரித்துப் போன நினைவுகள் படிந்த
இலையுதிர் காலத்துச் சருகுகள்
இடறிக்கொண்டே இருந்தன என் காலடியில்..
வசந்தம் வந்த நேரத்தில்
துளிர்த்தன புதிய இலைகள்..
கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..
பச்சையும் பழுப்பும்
சண்டையிட்டு கொண்டாலென?
காலத்தின் கட்டாயத்தில் இலையுதிர்தல்
மீண்டும் துளிர்ப்பதற்கே...
மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
மனத்தீ வளர்த்து சருகுகள் எரித்தேன்..
நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன
வாழ்வின் ரகசியத்தை..
வானவில்லின் வண்ணம் சுமந்து
வசந்தத்தின் பாதையில் அடிவைத்தேன்
இனி வண்ணங்கள் மட்டுமே...

18 comments:
//காலத்தின் கட்டாயத்தில் இலையுதிர்தல்
மீண்டும் துளிர்ப்பதற்கே...//
இதுதான் வாழ்க்கை..இந்த முறை சோகம் இல்லையென்று அனைவரும் உங்கள் கவிதையைப் பற்றிக் கூறுவார்கள்..
kavithai romba nalla iruku...
he he he..
enaku thaan onnume puriyala
//கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..//
//மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
மனத்தீ வளர்த்து சருகுகள் எரித்தேன்..
நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன
வாழ்வின் ரகசியத்தை..//
kalakiteenga yakkov! super :) yatharthamaana innoru valkai kavithai :)
appada.ungal vaazhvil vasandam vandadirku naangalum santhosappadugirom..vasanthama illai meendum vasanthama !!
tc
CU
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க..:)
//வானவில்லின் வண்ணம் சுமந்து
வசந்தத்தின் பாதையில் அடிவைத்தேன்
இனி வண்ணங்கள் மட்டுமே...//
இது டாப்பு...சூப்பரா இருக்குங்க...
யதார்த்தமான கவிதை...கலக்கல் வேதா ;))
\\நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன
வாழ்வின் ரகசியத்தை..\\
ரசித்தேன் ;)
வாழ்க்கையின் யதார்த்ததை
கவிதையின் அழகான வரிகள் உணர்த்தின!!
சூப்பர்,பாராட்டுக்கள் வேதா!
நல்லாயிருக்குங்க..
//கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..//
சூப்பர்.
@பாசமலர்,
இந்த முறை சோகம் இல்லை தான் :)
நன்றி :)
@டுடி,
என்ன அநியாயம் இது? நல்லாயிருக்கு ஆனா புரியலியா? :D
@ட்ரீம்ஸ்,
நன்றி தம்பி யதார்த்தம் புரிந்துக்கொண்டதால் தான் இந்த கவிதை :)
@cu,
ஆனாலும் நீங்க ரொம்ப அநியாயத்துக்கு கேள்வி கேட்கறீங்க :) வசந்தம் வரும் போகும் :)
@ரசிகன்,
நன்றி :)
@கோபி,
நன்றி :)
@திவ்யா,
ஆமா வாழ்வின் யதார்த்தம் புரிந்துக்கொள்ள வேண்டிய சமயம் வந்தாச்சு :) அதனால கவிதையும் அதே மாதிரி வந்தாச்சு :)
@மதுரையம்பதி,
ரொம்ப நன்றி அண்ணே :D
உங்களோட 2 வலைப்பூக்களையும் நெருப்பு நரி கொண்டு வாசிக்க முடியவில்லை. தயை கூர்ந்து டெம்ப்ளெட் மாத்துங்க சாமியோவ். :(
//SanJai said...
உங்களோட 2 வலைப்பூக்களையும் நெருப்பு நரி கொண்டு வாசிக்க முடியவில்லை. தயை கூர்ந்து டெம்ப்ளெட் மாத்துங்க சாமியோவ். :(//
அவ்வ்வ்.ஏன்ப்பா சஞ்ஞய்..அடிக்கடி போரடிச்சா டாம்லெட் மாத்தி விளையாடுற அவங்களே ,கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்காங்க...
ஆரம்பிச்சி வைச்சுடாதேப்பா.. :)))))
நாம பிரவுசர் சேஞ்ச் பண்ணிக்கிட்டா போச்சு :P
//காலத்தின் கட்டாயத்தில் இலையுதிர்தல்
மீண்டும் துளிர்ப்பதற்கே...//
மிக அருமையான யதார்த்தம்!
இதுபோல் எழுத எனக்குள்ளும் ஆர்வம் எழுகிறது :))
வசந்தம் வரும் போகும் :)
Kuzhappam innum adhigam aayudutthe enakku !!
TC
CU
ada photo .. kalakkala irukunga:)
//மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
மனத்தீ வளர்த்து சருகுகள் எரித்தேன்..
நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன
வாழ்வின் ரகசியத்தை..//
super varigal..nallavey rasichu ezhuthi irukeenga :)
//வசந்தம் வந்த நேரத்தில்
துளிர்த்தன புதிய இலைகள்..
கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..//
semma varigal ithu..
romba etharthama iruku..
vaazhthukkal :)
//மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
காரணம் கேட்டு வாடி சகி.
வண்ணங்கள் மட்டுமே இருக்க வாழ்த்துகள். நல்லதொரு கவிதையைத் தேடி வந்தேன், ரொம்பவே தாமதமாய்! :))))))
Post a Comment