
எவ்வளவு முயற்சித்தும்
எழுத முடியவில்லை
யாரையும் காயப்படுத்தா ஓர் கவிதையை..
வரையப்படும் வார்த்தைகளின்
ஒவ்வோர் எழுத்தும்
யாரோ ஒருவரின்
வலியாக அங்கீகரிக்கப்படும் நேரத்தில்
எழுதுபவரின் வலியும்
அதில் தொனிந்திருக்கும்
வாய்ப்புகள் அறியப்படாமலே போய் விடுகிறது..
இருப்பினும் நிற்பதில்லை
முயற்சியும் கவிதையும்..

29 comments:
இந்த கவிதையை பதிந்த பின் தான் பார்த்தேன் இந்த வலைப் பக்கத்தில் என்னுடைய 51வது பதிவு இது.. இரண்டு வருடங்களில் நான் எழுதியவை குறைவே என்றாலும் என் உணர்வுகளின் வடிகாலாக பல சமயங்களில் இந்த வலைப்பக்கம் இருந்திருக்கிறது, இனியும் இருக்கும். என்னுடைய முதல் பதிவு கவிதை இல்லை(ஒரு வேளை ஒன்றன் கீழ் ஒன்றாக வரிகளைப் போட்டிருந்தால் அதையும் கவிதைன்னு சொல்லிக்கலாமோ?:)) அதனால இது என்னுடைய 50வது கவிதைன்னு சொல்லிக்கறேன் :) எதிர்பாராவிதமா இதுவும் சோகமா அமைஞ்சிடுச்சு, இனி அடுத்து வருபவை அப்படி இருக்காது என்று நம்புகிறேன் அதனால தொடர்ந்து தைரியமா வந்து படிச்சு ஆதரவு கொடுங்க :)
51 க்கு வாழ்த்துகள்...கவிதையும் முயற்சியும் நிற்கவேண்டாம்..
கவிதை அருமை!
//(ஒரு வேளை ஒன்றன் கீழ் ஒன்றாக வரிகளைப் போட்டிருந்தால் அதையும் கவிதைன்னு சொல்லிக்கலாமோ?:))///
கண்டிப்பாக சொல்லிக்கலாம் இதில் சந்தேகமே இல்லை!
50-aavadhu kavidhaikku vaazhthukkal :))
// இனி அடுத்து வருபவை அப்படி இருக்காது என்று நம்புகிறேன் //
சூரியன் ஒரு நாள் மேற்கில் உதிக்கும்னு நம்புங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு. இருந்தாலும் குரு சொல்லிட்டீங்க. நம்பாட்டியும் நம்பிட்டேன்னு ஒரு வார்த்தைய சொல்லிக்க வேண்டியது சிஷ்யையோட கடமை இல்லயா? அதனால
நம்பிட்டேன் :D
வேதா முதலில் 51பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))
\\ஒரு வேளை ஒன்றன் கீழ் ஒன்றாக வரிகளைப் போட்டிருந்தால் அதையும் கவிதைன்னு சொல்லிக்கலாமோ?:)) \\\
நாங்க அப்படி தான்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம்.! ;)))
\\எதிர்பாராவிதமா இதுவும் சோகமா அமைஞ்சிடுச்சு\\
நம்பிட்டோம்..;)))
வாவ் :) சூப்பர்.
கவிதை சோகமாய் இருக்கலாம் தப்பில்லை :)
அதுவும் இந்த கவிதை சூப்பரு :)
யக்கா,
51க்கு வாழ்த்துக்கள்....
//எழுதுபவரின் வலியும்
அதில் தொனிந்திருக்கும்
வாய்ப்புகள் அறியப்படாமலே போய் விடுகிறது..//
ஹலோ, ஹலோ....ஏதோ சோகம்ன்னு அறிந்தாலும், அதனை எப்படிங்க கேட்க முடியும்....உங்களுடைய பல பதிவுகளில் பலரும் பின்னூட்டத்துல ஏனிந்த சோகமுன்னு கேட்டிருக்காங்க...மறந்துட்டீங்களா?
ஹாய் வேதா,
அட அம்பதா..வாவ். வெரிகுட்.வெரிகுட். வாழ்த்துக்கள்.
//இருப்பினும் நிற்பதில்லை
முயற்சியும் கவிதையும்..//
எதற்கு நிக்கனும்? நீ பாட்டுக்கு எழுதுப்பா நாங்கல்லாம் படிக்கறோம்.
ஹாய் ,
அட சோகமே என்றாலும்
உன் போல எழுத முடியுமா...
(சும்மா ஒரு ஜாலிக்கு..)
@பாசமலர்,
நன்றி, நிற்காதென்ற நம்பிக்கை என்றும் இருக்கு :)
@குசும்பன்,
நன்றி :)
/கண்டிப்பாக சொல்லிக்கலாம் இதில் சந்தேகமே இல்லை!/
இதுல ஏதும் உள்குத்தில்லையே :)
@காயத்ரி,
நன்றிம்மா :)
குரு சொன்னால் நம்பணும் கண்ணா :)
@கோபி,
/நாங்க அப்படி தான்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம்.! ;)))/
ஹிஹி அப்டியா இத்தன நாளா தெரியாம போச்சே :)
@ட்ரீம்ஸ்,
/கவிதை சோகமாய் இருக்கலாம் தப்பில்லை :)/
நீ சொல்லிட்டா அப்பீல் ஏது? :)
/அதுவும் இந்த கவிதை சூப்பரு :)/
நன்றி :)
@மதுரையம்பதி,
நன்றிங்கன்னா :) ஆனாலும் என்னை யக்கான்னு கூப்பிட்டது ரொம்ப ஓவரு :)
/....உங்களுடைய பல பதிவுகளில் பலரும் பின்னூட்டத்துல ஏனிந்த சோகமுன்னு கேட்டிருக்காங்க...மறந்துட்டீங்களா?/
சேசே மறக்கவே இல்ல :) அதுவும் நீங்க போன கவிதைல சொன்னீங்க பாருங்க அத நான் மறக்கவே மாட்டேன் :)
@சுமதி,
/எதற்கு நிக்கனும்? நீ பாட்டுக்கு எழுதுப்பா நாங்கல்லாம் படிக்கறோம்/.
நன்றி :) அந்த நம்பிக்கையில தான ஓடுது :)
//அதுவும் நீங்க போன கவிதைல சொன்னீங்க பாருங்க அத நான் மறக்கவே மாட்டேன் :)//
ஏங்க?, ஏதானும் தப்பாச் சொல்லிட்டேனா?. அப்படியான மன்னாப்பு கேட்டுக்கறேன்... :)
@மதுரையம்பதி,
ஹாஹா நீங்க சரியா சொன்னீங்க அத தான் அப்டி சொன்னேன் :)
//வரையப்படும் வார்த்தைகளின்
ஒவ்வோர் எழுத்தும்
யாரோ ஒருவரின்
வலியாக அங்கீகரிக்கப்படும் நேரத்தில்
எழுதுபவரின் வலியும்
அதில் தொனிந்திருக்கும்
வாய்ப்புகள் அறியப்படாமலே போய் விடுகிறது..//
உண்மைதான்.பலசமயங்களில் நமக்கு இதை சிந்திக்கும் திறனில்லாமல் போய்விடுகிறது.
கவிதை அருமையா இருக்குங்க வேதா...
//எதிர்பாராவிதமா இதுவும் சோகமா அமைஞ்சிடுச்சு, இனி அடுத்து வருபவை அப்படி இருக்காது என்று நம்புகிறேன் அதனால தொடர்ந்து தைரியமா வந்து படிச்சு ஆதரவு கொடுங்க :)//
வாழ்த்துக்கள்.. இனி சந்தோஷக் கவிதைகள் மட்டுமே பூக்க... கலக்குங்க..
மதுரையம்பதி said...
//அதுவும் நீங்க போன கவிதைல சொன்னீங்க பாருங்க அத நான் மறக்கவே மாட்டேன் :)//
ஏங்க?, ஏதானும் தப்பாச் சொல்லிட்டேனா?. அப்படியான மன்னாப்பு கேட்டுக்கறேன்... :)//
ஹா..ஹா..நீங்க சொன்ன தத்துவம், உங்களுக்கே..மறந்துடுச்சுங்களா,மதுரை சார்?.. நான் வேணுமின்னா ஞாபகப்படுத்தட்டுமா?..:))))))))))
//மதுரையம்பதி said...
அடுத்தவங்களுக்கு ஞாயப்படுத்தணும்ன்னு நினைக்கிறத விட, நமக்கு எது ஞாயம்ன்னு மனதார தோன்றுகிறதோ அத பண்ணிட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்.//
ரொம்ப சூப்பருங்க மதுரை சார்.. நல்லாயிருங்க....:)))))))))))
//Sumathi. said...
ஹாய் வேதா,
அட அம்பதா..வாவ். வெரிகுட்.வெரிகுட். வாழ்த்துக்கள்.
எதற்கு நிக்கனும்? நீ பாட்டுக்கு எழுதுப்பா நாங்கல்லாம் படிக்கறோம்.//
ரிப்பீட்டேய்...
@ரசிகன்,
/வாழ்த்துக்கள்.. இனி சந்தோஷக் கவிதைகள் மட்டுமே பூக்க... கலக்குங்க.. /
வாழ்த்துக்கு நன்றி :)
kavidai ellam supera iruku..
aapu padivu potachu vanthu parkavum
ஏங்க ரசிகன், நான் என்ன சொன்னேன்னா கேட்டேன்?, இல்ல மறந்துட்டேன்னு சொன்னேனா?. ஏங்க கஷ்டப்பட்டு முந்திய பதிவுக்குப் போயி கட்/பேஸ்ட் எல்லாம் பண்ணிக்கிட்டு?.
:-)
ஓ! நான் சொன்ன தத்துவதை மனசில பதிய வச்சுக்கறதுக்காக திருப்பி ஒருதரம் படிச்சு எல்லாருக்கும் சொல்லுரீங்களா...சரி, சரி :-)
அவ்வ்வ்வ்....அதுக்குள்ள பதிலா?.. சூப்பருங்க மதுரை சார்..ஹிஹி...உங்க பின்னூட்டத்துக்கு வேதா போட்ட பதிலுக்கும் ஒரு பின்னூட்டம்.அதுக்கு நான் போட்ட பின்னூட்டத்துக்கும் ஒருபதில்.. அவ்வ்வ்வ்வ்...கலக்கிட்டிங்க போங்க.
////மதுரையம்பதி said...
ஏங்க கஷ்டப்பட்டு முந்திய பதிவுக்குப் போயி கட்/பேஸ்ட் எல்லாம் பண்ணிக்கிட்டு//
அதைப் பத்தி நீங்க எதுக்குங்க சார் ஒர்ரி படறிங்க?.. மத்தவங்க கஷ்டப்பட்டா நமக்கென்னன்னு நல்ல தத்துவம்ல்லாம் சொல்லியிருக்கிங்கல்ல..ஹிஹி..
//ஓ! நான் சொன்ன தத்துவதை மனசில பதிய வச்சுக்கறதுக்காக திருப்பி ஒருதரம் படிச்சு எல்லாருக்கும் சொல்லுரீங்களா...சரி, சரி :-)////
ஹிஹி.. மறுபடியும் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க..:)) ..உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது,எனக்கு ஞாயமா பட்டுச்சு..நீ எப்படியான்னா எனக்கென்னன்னு யாராவது சிம்பிளா சொல்லும் போது,இதே தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வரனுமின்னு தான் ஞாபகப் படுத்துனேன்..:P
சரி சரி மறுபடியும் நீங்க சண்டைக்கு வர்ரதுகு முன்னாடி நான் எஸ் ஆகிக்கறேன்..ஹிஹி...:))))))))))))
ரசிகரே,
நான் எதிர்பார்த்த மாதிரித்தான் நீங்க புரிஞ்சுட்டு இருக்கீங்க.... நல்லவேளை நீங்க என் கடைசி பின்னூட்டத்த பார்த்து பதில் குடுத்ததால உங்க புரிதலும் எனக்கு தெளிவாயிடுச்சு.
முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், நான் மத்தவங்க கஷ்டத்த பத்திக் கவலைப்பட வேண்டாம்ன்னோ, இல்லை கவலைப்படக் கூடாதுன்னோ சொல்லை. ஒரு சில நேரங்களில் நமது எல்லா செய்கைகளையும் மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டியதில்லை, ஆனா நம்மால முடிந்தவரையில் ஞாயமாக/சரியாக இருத்தல் முக்கியம், அது இருந்தால் போதுங்கற விதத்துலதான் சொன்னேன்.
எனிவே, நான் வேதாவிடம் போனிலும் பேசிவிட்டேன், அவங்க நான் சொன்னதை சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்காங்க. நீங்க எதற்கும் முந்தைய பதிவு, மற்றும் அதன் கமெண்டை நல்லா ஒருதரம் படித்து உள்வாங்கிட்டு அப்பறமா இதற்கு பதில் சொல்லுங்கன்னு கேட்டுக்கறேன். :-)
ஹலோ இப்டி மாறி மாறி நீங்க பேரும் பேசிக்கிட்டு இருந்தா நான் பின்னூட்டம் வெளியிட தான் நேரம் சரியா இருக்கும் :) அதனால பட்டிமன்றம் முடிஞ்சுப்போச்சு போதும் :)(தீர்ப்பா? அதெல்லாம் அவங்கவங்களுக்கு எது சரியோ அது தான் ஹிஹி பட்டிமன்ற தீர்ப்பு இப்டி தான இருக்கும்:))
//ஹலோ இப்டி மாறி மாறி நீங்க பேரும் பேசிக்கிட்டு இருந்தா நான் பின்னூட்டம் வெளியிட தான் நேரம் சரியா இருக்கும் :) //
என்னங்க வேதா இப்படி சலிச்சுகறீங்க....
சரி, சரி ரசிகரே போன் நம்பர் குடுங்க....போன்ல பேசலாம்
என்ன கொடுமை இது? நான் சலிச்சுக்கவே இல்ல நீங்க என் கிட்ட சொன்னதை நான் புரிஞ்சுக்கிட்டேன் அவ்ளோ தான் மேட்டர் ஓவர் :)
ஓகே, ஓகே....
Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க ella kavithaiyum nice.
Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா
good one! ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்! :)
Vaazhthukkal..
Pirakkum podhu kuzhandhai azhudhu konde than pirakkiradhu..sogatthil..indha ulagil pirandhu vittom endru..
neengal indrum innum sogatthil irukkireergal endral enna artham..
kuzhandhai paruvatthill innum irukkereergal endru thane
sari sari..adikka varathukkulla odidaren
tc
cu
Post a Comment