காலத்திற்கும் மனதிற்குமான
ஓட்டத்தில் மனம் முந்திச் சென்றது
சிறகுகள் படப்படக்க
கனவுகள் கண்களிலேந்தி..
மெல்ல கரைந்து வந்த காலம்
பின்னோக்கி இழுத்தது மனதை
எம்முயற்சிக்கினும் தடுக்கவியலா
சில காட்சிகள் அரங்கேறி
அங்கேயே முடிந்தது நாடகம்..
கால வெளியின் கனந்தாங்காமல்
சிறகுகள் ஒடிந்து
கீழே வீழ்ந்த மனம்
அதிர்ந்தே போனது
சிலுவையில் அறையப்பட்ட
கணத்தில்..
உயிர்த்தெழ தேவை
மீண்டும் காலமும்
சிறிது நம்பிக்கையும்..
தவறாய்ப் போன
சில காலடிச்சுவடுகள்
முள்ளாய் உறுத்தியது
உண்மையென்றாலும்
சில
நியாயப்படுத்துதல்களின் தேவையின்றி
தொடர்கிறது பயணம் வேறோர் பாதையில்..
Wednesday 16 January 2008
Subscribe to:
Post Comments (Atom)

13 comments:
ennanga achu...
ippadi oru sogam
:(
//தவறாய்ப் போன
சில காலடிச்சுவடுகள்
முள்ளாய் உறுத்தியது
உண்மையென்றாலும்
சில
நியாயப்படுத்துதல்களின் தேவையின்றி
தொடர்கிறது பயணம்//
நல்ல முடிவு.....எல்லாவற்றையும் எல்லோருக்கும் நியாயப்படுத்த முடியாது, அவசியமும் இல்லை. :-)
ஏன் ஏன் இப்படி எல்லாம் :((
//மெல்ல கரைந்து வந்த காலம்
பின்னோக்கி இழுத்தது மனதை
எம்முயற்சிக்கினும் தடுக்கவியலா
சில காட்சிகள் அரங்கேறி
அங்கேயே முடிந்தது நாடகம்..
//
சோகத்தை அழகாய் சொல்லி இருக்கீங்க!
//சில
நியாயப்படுத்துதல்களின் தேவையின்றி
தொடர்கிறது பயணம் வேறோர் பாதையில்..//
அதே! Life doesnt end at any incidents :)
Yatharthamane kavithai...
//தவறாய்ப் போன
சில காலடிச்சுவடுகள்
முள்ளாய் உறுத்தியது...//
ஒரு குரங்கு எவரும்
காணாதபோது
வீட்டினுள் நுழைந்து
பூசைக்காக
வைத்திருந்த மலர்க்கொத்தை
பிய்த்துப்போட்டது. வாழைப்பழத்தை
எடுத்துச்சென்றது.
குரங்கைக் குறை கூறுவது சரியா?வீட்டு வாயிலை நாமல்லவோ தாளிட்டுவைத்திருக்கவேண்டும்.
மனம் ஒரு குரங்கு.
சுப்புரத்தினம்.தஞ்சை.
@டிடி,
என்னக்கா புதுசா கேட்கறீங்க இந்த பக்கத்துல பாதி நேரம் சோக கவிதைகள் தான?
@காயத்ரி,
:(
@மதுரையம்பதி,
/எல்லாவற்றையும் எல்லோருக்கும் நியாயப்படுத்த முடியாது, அவசியமும் இல்லை. :-)/
நமக்கு நாமே நியாயப்படுத்திக்கறதுன்னு ஒன்னு இருக்கு இல்ல?
@கோபி,
என்ன பண்றது விதி வலியது :)
@ட்ரீம்ஸ்,
நீயும் அதை தான செய்யற? :)
/அதே! Life doesnt end at any incidents :)/
ஆமாப்பா சரியா சொன்ன
@மைதிலி,
யதார்த்தம் தான் வலி சுமந்த யதார்த்தம்
@சூரி,
/மனம் ஒரு குரங்கு/
இந்த ஒரு வரியே எல்லாம் சொல்லி விட்டது..
கவிதை ரொம்பவே நல்லாயிருக்குங்க வேதா... வாழ்த்துக்கள்.
எப்படிப்பட்ட மன வருத்தத்திற்க்கும்
காலம் ஒரு அற்புத மருத்துவன்ன்னு சும்மாவா சொன்னாங்க...
டாக்டர் பீஸ்லாம் குடுக்க வேணாமுங்கோ..ஹிஹி..:P
:))))))
///எல்லாவற்றையும் எல்லோருக்கும் நியாயப்படுத்த முடியாது, அவசியமும் இல்லை. :-)/
நமக்கு நாமே நியாயப்படுத்திக்கறதுன்னு ஒன்னு இருக்கு இல்ல?//
அதாங்க வேதா முக்கியம். அடுத்தவங்களுக்கு ஞாயப்படுத்தணும்ன்னு நினைக்கிறத விட, நமக்கு எது ஞாயம்ன்னு மனதார தோன்றுகிறதோ அத பண்ணிட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்.
@ரசிகன்,
ஆமாங்க காலம் தான் மருந்து :) நன்றி :)
@மதுரையம்பதி,
/நமக்கு எது ஞாயம்ன்னு மனதார தோன்றுகிறதோ அத பண்ணிட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்/
சரியா தான் சொல்றீங்க :) என்ன?மத்தவங்கள அது பாதிக்கக்கூடாது என்பது தான் என்னுடைய கவலையாக இது வரை இருந்திருக்கிறது.இனி நாம தான் மாத்திக்கணும் போலிருக்கு நன்றி :)
Post a Comment