
சொற்களின் பின்னே ஒளிந்துக் கொண்டு
பொய்களின் முலாம் பூசிய
நமக்கிடையேயான சொல்லாடல்களில்
எந்நேரத்திலும் வந்துவிடக்கூடுமென
காத்திருந்தேன்
சேதியை சுமந்து வரும் வினாடிக்கு...
வினாடியாய் வரைந்த கவிதையை
நெஞ்சோடு நிறுத்தி வைத்தேன்
கரை புரண்டு ஓடிவிடுமென,
சுமை இறக்கும் நேரத்தில்
பரிசளிக்க..
சுமையாய் விரைந்த நொடிகளுக்கிடையே
இதோ வந்துவிட்டதென
நான் மலரும் நொடிகளெல்லாம்
காற்றோடு கரைந்துப் போயின
கானல் நீரினும் வேகமாய்..
கானல் நீரென தெளிந்து
இனி எப்போதும் வாராதென
நெஞ்சோடு புதைத்து வைத்தேன்
உனக்காக எழுதிய
பொய்கள் நீக்கப்பட்ட அக்கவிதையை..
புதைந்த கவிதையின் முழு உருவமாய்
உன் விழி நோக்கி விடைபெற்ற நேரத்தில்
திக்குமுக்காடிப் போனேன்
சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்..

19 comments:
எனக்கு புரியக்கூடாதுன்னே கவிதை எழுதுவீங்களோ??? :((((((((((
ஹாய் வேதா,
//காத்திருந்தேன்
சேதியை சுமந்து வரும் வினாடிக்கு...//
சூப்பர். என்னை ரொம்ப பாதிக்குது வேதா.
ஹாய் வேதா,
//சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்..//
நான் இத கொஞ்சம் எடுத்துக்கலாமா?என்ன சொல்றதுன்னே தெரியலை.simply superb
இதை பலமுறை படித்து விட்டேனுங்க வேதா...
சோக கவிதைகள் தான் மனதை மிகவும் பாதிக்கும் என்ற பொதுவான கருத்தை உடைத்தெறிந்து விட்டது இந்த கவிதை...
படிக்கும் போது ,கவிதையில் சொல்லப்பட்ட எதிர்பார்ப்பு, ஏக்கம்,சுய ஆறுதல்,இன்ப அதிர்ச்சி எல்லா உணர்வுகளையும் நாமும் அனுபவிப்பது போல ஒரு ஃபீலிங்கு... எப்படித்தான் தோணுதோ உங்களுக்கு.. பாராட்டுக்கள்...
// சுமையாய் விரைந்த நொடிகளுக்கிடையே
இதோ வந்துவிட்டதென
நான் மலரும் நொடிகளெல்லாம்
காற்றோடு கரைந்துப் போயின
கானல் நீரினும் வேகமாய்.. //
// வினாடியாய் வரைந்த கவிதையை
நெஞ்சோடு நிறுத்தி வைத்தேன்
கரை புரண்டு ஓடிவிடுமென,//
கானல் நதிக்கரையின் இரண்டு ஓரங்களில்
இருக்கறவிங்களுக்கும் ஒரே மாதிரி தோணியிருக்குமோ?..
// கானல் நீரென தெளிந்து
இனி எப்போதும் வாராதென
நெஞ்சோடு புதைத்து வைத்தேன்
உனக்காக எழுதிய
பொய்கள் நீக்கப்பட்ட அக்கவிதையை..//
ஒருவேளை கவிதையை இத்தோடு நிறுத்தியிருந்தால்
இவ்வளவு மன திருப்தியை கொடுக்கும் வலிமை இல்லாமல் போயிருக்கலாம்
இந்த கவிதைக்கு...
//புதைந்த கவிதையின் முழு உருவமாய்
உன் விழி நோக்கி விடைபெற்ற நேரத்தில்
திக்குமுக்காடிப் போனேன்
சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்..//
இது சூப்பரேய்ய்ய்...
ரொம்பவே ரசித்தேனுங்க வேதா இந்த வரிகளை,
கவிதையின் கோணத்தையே கலக்கலா மாற்றிய வரிகள்.. புது பரிணாமம். ரொம்ப நல்லாயிருக்கு..
தொடருங்க...
@காயத்ரி,
அடிப்பாவி இது கூட உனக்கு புரியலியா? :(
@சுமதி,
/நான் இத கொஞ்சம் எடுத்துக்கலாமா?என்ன சொல்றதுன்னே தெரியலை.simply superb/
ஓ தாராளமா எடுத்துக்கோங்க :) நன்றி ஹை :)
@ரசிகன்,
/கவிதையில் சொல்லப்பட்ட எதிர்பார்ப்பு, ஏக்கம்,சுய ஆறுதல்,இன்ப அதிர்ச்சி எல்லா உணர்வுகளையும் நாமும் அனுபவிப்பது போல ஒரு ஃபீலிங்கு.../
உண்மை தான் எழுதும் போதே எனக்கு அனுபவித்தது போல ஒரு பீலிங்க், படிக்கற உங்களுக்கு தோணியது என்றால் எனக்கு மகிழ்ச்சி தான் :)
/ எப்படித்தான் தோணுதோ உங்களுக்கு.. பாராட்டுக்கள்.../
ஏதோ தோண்றது தான் நன்றி :)
/கானல் நதிக்கரையின் இரண்டு ஓரங்களில்
இருக்கறவிங்களுக்கும் ஒரே மாதிரி தோணியிருக்குமோ?../
கானல் நீரே பொய்யெனும் போது அதற்கு கரைகள் என்ற உங்க கற்பனையும் நல்லா தானிருக்கு :) தோணியிருக்கலாம் தான் :)
/ஒருவேளை கவிதையை இத்தோடு நிறுத்தியிருந்தால்
இவ்வளவு மன திருப்தியை கொடுக்கும் வலிமை இல்லாமல் போயிருக்கலாம்
இந்த கவிதைக்கு.../
அத்தோடு நிறுத்தலாம்னு தான் இருந்தேன், ஆனா எல்லாரும் எப்பவும் சோகத்தையே எழுதறியேன்னு சொன்னதால இறுதியில இத சேர்த்தேன் :)
நன்றி :)
//புதைந்த கவிதையின் முழு உருவமாய்
உன் விழி நோக்கி விடைபெற்ற நேரத்தில்
திக்குமுக்காடிப் போனேன்
சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்../
அடடா! அடடா! சூப்பரு! புத்தாண்டுல நல்லது நடந்தா சரி! பாத்து.. ரொம்ப இழுத்திட போது!
///கானல் நதிக்கரையின் இரண்டு ஓரங்களில்
இருக்கறவிங்களுக்கும் ஒரே மாதிரி தோணியிருக்குமோ?../
கானல் நீரே பொய்யெனும் போது அதற்கு கரைகள் என்ற உங்க கற்பனையும் நல்லா தானிருக்கு :) தோணியிருக்கலாம் தான் :)//.
naan sonnatthu.. antha ponnukku thooniya thayakkam ,intha payanukkum thoni irukkaalaamilaiyaa?
athaanunga...
கவிதை நல்லாயிருக்கு...;))
\\புதைந்த கவிதையின் முழு உருவமாய்
உன் விழி நோக்கி விடைபெற்ற நேரத்தில்
திக்குமுக்காடிப் போனேன்
சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்..\\
யப்பா சந்தோஷமாக முடிச்சிட்டிங்க...சந்தோஷம் ;)
வேதா, கவிதை மிகவும் அருமை, ரசித்தேன்!
முடிவு வரிகளில் இருக்கும் வார்த்தையைக் கொண்டு அடுத்த வரிகள் ஆரம்பித்து எழுதியிருப்பது , அழகோ அழகு!!
அருமையான உணர்வுக்கலவை வேதா..அழகான கவிதை..வாழ்த்துகள்
@ட்ரீம்ஸ்.
/அடடா! அடடா! சூப்பரு! புத்தாண்டுல நல்லது நடந்தா சரி!/
நன்றி ஹை! எல்லாம் உன்னை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் :D
/ பாத்து.. ரொம்ப இழுத்திட போது!/
அதெல்லாம் நாங்க உஷாரா இருப்போமில்ல ;D
@ரசிகன்,
ஏங்க நானென்ன கதையா சொல்றேன்? :) அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே தோணியிருக்கலாம் என்று :)
@கோபி,
/யப்பா சந்தோஷமாக முடிச்சிட்டிங்க...சந்தோஷம் ;)/
:):):)
@திவ்யா,
நன்றி :)
/முடிவு வரிகளில் இருக்கும் வார்த்தையைக் கொண்டு அடுத்த வரிகள் ஆரம்பித்து எழுதியிருப்பது , அழகோ அழகு!!/
அது திடீர்னு அப்டி ஒரு ஐடியா வந்தது அப்டியே டெவலப் பண்ணிட்டேன் :)
@பாசமலர்,
நன்றி :)
Kavithail nalla viruviruppu..mudivum putthaandu pol inidagha irundhadhu
As usual,ungal stylil oru kavidhai,mudivai thavira...he he
TC
CU
Arumaiyana kavithai...
@cu,
./.mudivum putthaandu pol inidagha irundhadhu/
புத்தாண்டிற்காவது ஒரு இனிப்பான கவிதையா எழுதலாம்னு தான் :)
/As usual,ungal stylil oru kavidhai,mudivai thavira...he he/
ஹாஹா நன்றி :)
@மைதிலி
நன்றி :)
நல்ல கவிதை வாழ்த்துக்கள்,
தினேஷ்
:)) ரசித்தேன் !!
Post a Comment