Sunday, 23 December, 2007

பூக்களில் உறங்கும் மெளனங்கள்...

பிரித்தறிய இயலா வண்ணம்
விரல்களாய் ஒன்றிவிட்ட தீக்குச்சிகள்
எட்டாப் படிப்பை எண்ணி எண்ணி
கணக்குத் தீர்க்கும் விரல்கள்..
வீட்டோடு இலவசக் கணக்குப் பாடம்!

வானம் மறைத்து கூரை வேய
மகிழ்ச்சி மறுத்து மண் பிசையும் பிஞ்சுக் கால்களும்,
சுட்டெடுக்கும் ரேகை தேய்ந்த உள்ளங்கைகளும்..

வண்ணம் பொழியும் வானவேடிக்கைகளில்
சிதறி விழுகின்றன வண்ணம் பார்த்திரா
இவர்தம் விழிநீர்த் துளிகள்..

வியர்வை மழையில் நித்தமும் நனைந்து
பருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்
பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...
பி.கு : இக்கவிதை சிறில் அலெக்ஸ் நடத்தும் கவிதைப் போட்டிக்காக..

23 comments:

ரசிகன் said...

// பூக்களில் உறங்கும் மெளனங்கள்...//

தலைப்புக்கு மிகப்பொருத்தமான கருத்து.. புது வருடம் ஆரம்ப கொண்டாட்ட வேளையில் ,குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு..
உங்க சமுக அக்கரைக்கு ஒரு சபாஷ்..

cheena (சீனா) said...

போட்டிக்கவிதை என்பதால் முடிவுக்குப் பின்னர் தான் விமர்சனம்.

ரசிகன் said...

நாம் தீபா"வளி"யில் பட்டாசுக்களை "கொளுத்தி "மகிழ்வதற்க்காக..எங்கோ பட்டாசு தொழிற்சாலையில்.. பிஞ்சு உள்ளங்கள் "வலி"யில் "கருகிக்"கொண்டிருப்பதை மறந்து விடுகிறோம். போட்டிக்காக எழுதினாலும் ,.. அதில் ஒரு சமுக விழிப்புணர்வை கலந்து தரும் பாணி பாராட்டுக்கு உரியது..

ரசிகன் said...

// வியர்வை மழையில் நித்தமும் நனைந்து
பருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்
பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...//

மனதை உறுத்தும் நிதர்சனம்....அருமையா சொல்லியிருக்கிங்க..

ரசிகன் said...

புத்தாண்டு துவக்கத்தில் ஏதாவது உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள் .. இனி,"படிக்க வேண்டிய வயதில்,குழந்தை தொழிலாளர்களாய் பிஞ்சு பூக்களை நசுக்குவதற்க்கு ஆதரவு தர மாட்டோம்" என உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை நினைவுப்படுத்தும் உங்கள் கவிதை, போட்டியில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்..

கோபிநாத் said...

அருமையான கவிதை வேதா..;)


\\வியர்வை மழையில் நித்தமும் நனைந்து
பருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்
பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...\\

அழமான வரிகள்...
அந்த பிஞ்சுகளின் மெளனத்தை எப்படி மற்றுவது என்பது தான் தெரியவில்லை..:(

போட்டிக்கு வாழ்த்துக்கள் ;)

சிறில் அலெக்ஸ் said...

என்ன சொல்றது...
தலைப்பை முழுவதும் உள்வாங்கி ஒரு சமூக கருத்த ரெம்ப இலாவகமா பொருத்தி சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

Dreamzz said...

//பிரித்தறிய இயலா வண்ணம்
விரல்களாய் ஒன்றிவிட்ட தீக்குச்சிகள்
எட்டாப் படிப்பை எண்ணி எண்ணி
கணக்குத் தீர்க்கும் விரல்கள்..
வீட்டோடு இலவசக் கணக்குப் பாடம்!//
wow! asathalaana kavidhai.. aazhamaana varigal.. :)
nalla irukku veda.

Dreamzz said...

//போட்டிக்காக எழுதினாலும் ,.. அதில் ஒரு சமுக விழிப்புணர்வை கலந்து தரும் பாணி பாராட்டுக்கு உரியது..//
repeatu!

பிரியமுடன் பிரித்தி said...

'பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்.பூக்களில் உறங்கும் மெளனங்கள்...'

இந்த வரிகள் என்னை கவர்கின்றன.

'உங்க சமுக அக்கரைக்கு ஒரு சபாஷ்..'

மறுமொழிகிறேன்.

வேதா said...

மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி. தற்போது இணையத்தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும் :)

குட்டிபிசாசு said...

வித்யாசமாக யோசிச்சி இருக்கிங்க! வாழ்த்துக்கள்!!

Sudhakar said...

Nice kavidai.

Known Stranger said...

felt like reading bharathidhasan patu.

Arunkumar said...

உங்க கதைல இருந்த "நச்" விட உங்க கவிதைல செம "நச்" !!!
தலைப்புக்கு ஏத்த கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Arunkumar said...

//
வானம் மறைத்து கூரை வேய
மகிழ்ச்சி மறுத்து மண் பிசையும் பிஞ்சுக் கால்களும்,
//

//
வியர்வை மழையில் நித்தமும் நனைந்து
பருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்
பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...
//

அதுனால தான் நீங்க குரு !!!

Arunkumar said...

Wish you,your family and all fellow bloggers, a very HAPPY NEW YEAR 2008

கீதா சாம்பசிவம் said...

மனதைத் தொட்ட கவிதை!

sathish said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நித்யா!!

ரசிகன் said...

// sathish said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நித்யா!!//

ஏனுங்க வேதா.. எப்போ பேர் மாத்திக்கிட்டிங்க சொல்லவேயில்லை..:P

மங்கை said...

அருமையான சமூக அக்கறை தொனிக்கும் வார்த்தைகள்..வாழ்த்துக்கள்

தினேஷ் said...

விழ்ப்புணர்வுடன் வியக்கவைக்கிறது உங்கள் கவிதை...

தினேஷ்

Raghavan alias Saravanan M said...

வேதா,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னை நினைவிருக்கும் என்று நினைவிருக்கிறேன்.

ஏற்கெனனவே உங்கள் கவிதைச் சாலையில் நடைபோட்ட ரசிகன் நான் :)

//// வியர்வை மழையில் நித்தமும் நனைந்து
பருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்
பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...////

நச்! தான் :) நல்ல சமூக சிந்தனை தொனிக்கிறது!

நல்ல கவிதை. நன்றி உங்களுக்கு. நானும் என் பங்களிப்பினை இதோ இங்கே இட்டிருக்கிறேன்.

http://kavithaikealungal.blogspot.com/2008/01/pookkalil-urangum-mounangal.html.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.