
சோம்பலுடன் எழும்பும்
சூரியனின் ஸ்பரிசம் படாமல்
வில்லாய் வளைந்து
சீராய் புள்ளிகள் விதைத்து
பழக்கப்பட்ட பாதையில்
பயணிக்கும் கால்களைப் போல்
வளைந்து நெளிந்து
கோடுகள் இழுத்து
தரையில் ஓவியமாய் வரைந்த கோலத்தை
அழகு பார்த்த நேரத்தில்
சட்டென எழுந்தது ஓர் சந்தேகம்
கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?

12 comments:
இதுல என்ன சந்தேகம்!
//கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?//
சிக்கியது புள்ளி தான்..
விளக்கம் வேணுமா?
சிக்கியது யாருனு ஒரு முடிவுக்கு வந்துடலாம் ;)
நல்லா இருக்கு.
குட் கொசின்.
// சோம்பலுடன் எழும்பும்
சூரியனின் ஸ்பரிசம் படாமல்//
அதிகாலை கோலம,வர்ணனை அருமையா இருக்குங்க வேதா..
// பழக்கப்பட்ட பாதையில்
பயணிக்கும் கால்களைப் போல்
வளைந்து நெளிந்து
கோடுகள் இழுத்து
தரையில் ஓவியமாய் வரைந்த கோலத்தை///
ரொம்பவே கவித்துவமா இருக்கு..
சூப்பர்.....
// சட்டென எழுந்தது ஓர் சந்தேகம்
கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?//
வாவ்... என்னை ரொம்பவே கவர்ந்த வரிகள்..
கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள் வேதா..
என்னமா சிந்திக்கிறாய்ங்கல்ல..:)
//சட்டென எழுந்தது ஓர் சந்தேகம்
கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?//
aaaaha aaaaha! nalla sandhegam..
kolathildamum pulligalidamum mothathil sikkiyathu neenga.. unga kavithaila sikkinathu naanga :D
\\கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?\\
எப்படியோ சிக்கியது ஒருவகையில் நன்மை தானே...ஒரு துணை கிடைக்குது இல்ல..;))
\\ Dreamzz said...
//சட்டென எழுந்தது ஓர் சந்தேகம்
கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?//
aaaaha aaaaha! nalla sandhegam..
kolathildamum pulligalidamum mothathil sikkiyathu neenga.. unga kavithaila sikkinathu naanga :D\\
நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க...;))
@சிவா,
/சிக்கியது புள்ளி தான்../
அப்படியா? :)
நீங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டு அப்புறம் என்ன சிக்கியது யாருனு முடிவுக்கு வரலாங்கறீங்க :)
இதுல விளக்கம் வேறயா?
சரி அந்த விளக்கத்தையும் வந்து விளக்கிடுங்க :)
@ஜேகே,
நல்ல கேள்வி தான்! பதில் உங்களுக்கு தெரியுமா? :)
@ரசிகன்,
/அதிகாலை கோலம,வர்ணனை அருமையா இருக்குங்க வேதா../
அட அப்ப நான் வர்ணித்தது உங்களுக்கு புரிஞ்சுடுச்சா? யாரும் அந்த வரிகளை கவனிக்கலையேன்னு நினைச்சேன் :)
/கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள் வேதா.. /
நன்றி :)
/என்னமா சிந்திக்கிறாய்ங்கல்ல..:)/
ஆமா இப்டியெல்லாம் சிந்திச்சா தான நீங்க எல்லாரும் ரசிக்க முடியும் :)
@ட்ரீம்ஸ்,
/kolathildamum pulligalidamum mothathil sikkiyathu neenga.. unga kavithaila sikkinathu naanga :D/
ஹிஹி :):)
@கோபி,
/எப்படியோ சிக்கியது ஒருவகையில் நன்மை தானே...ஒரு துணை கிடைக்குது இல்ல..;))/
நல்லா சொன்னீங்க :):)
unusually for a guy, i love to do sikal kollam on roads during markhazi month. Some how had a competition with sister who was good at it. i tried to red do the sikal kollam you posted and i enjoyed making it in first attempt. and the point you made is wonderful. vazhkaiyenum sikal kolathil nam nagarum pulikgal
calendar mani thaan nyabagam vandhaaru indha kavidhai padichi :)
சரிதான், நீங்களும் குழம்பி, எல்லாரையும் குழப்பியாச்சா? :P
\\கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?\\
Wonderful lines.
romba romba azhaga vaarthaigalai korthirukireenga,liked it.
Post a Comment