
ஆசைகள் ஊற்றி வளர்த்த
இதயச்செடி
பருவத்தில் சிலிர்த்து படைத்தது
கனவு ரோஜாக்கள்..
சுகந்தமாய் மணம் பரப்பி
தித்திக்கும் தேன் ஏந்தி
மிதப்போடு நின்ற மலர்களை
சற்றே தீண்டிய பொழுது
நிமிடத்தில் வெட்கித்து
பலவண்ணம் கொண்டு
பறந்துச் சென்றன
வண்ணத்துப்பூச்சிகளாய்,
தீண்டிய விரல்களில்
ரத்தம் பூசி..
சில சமயங்களில்
மறந்து தான் போகின்றது
மலர்களோடு,
முட்களும் இருக்கும் என்கிற நிதர்சனம்..

33 comments:
//சில சமயங்களில்
மறந்து தான் போகின்றது
//
வயசானாலே இப்படித்தான் ஞாபக மறதி எல்லாம் வரும். மெமரி ப்ளஸ் டாப்லெட் வேணா டரை பண்ணி பாருங்களேன் :))
முன்னாடி போட்டது சும்மா.. கும்மிக்காக..
ஒரிஜினல் கமெண்டு :
கவிதை சூப்பர்.. [எனக்கு புரிஞ்சிடுச்சில்ல :))) ]
எல்லா மலரோடு முட்கள் இருக்குமா என்ன? முட்களுக்கு நடுவில் இருக்கும் மலர்களை தீண்ட நினைத்தால் முட்கள் இருப்பது நிதர்சனம் தான்..
ஆமாங்க எல்லா நேரமும் நிதர்சனம் தெரிந்து இருந்துட்டா, நாம மனிதர்கள் இல்லை, தேவர்களாயிடுவோம்.
//கவிதை சூப்பர்.. [எனக்கு புரிஞ்சிடுச்சில்ல :))) ]//
G3, இப்படியெல்லாம் சொன்னா விட்டுடுவோமா?, என்ன புரிஞ்சுது, சொல்லுங்க பார்க்கலாம் அப்படின்னு வேதா கேட்க மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை இல்ல?. :)
எனக்கும் கவிதை புரிஞ்சிடுச்சே! :)
முட்களுக்கு நடுவே பூக்கள் இருக்கே!னு நினைக்கலாம் இல்ல.
//சில சமயங்களில்
மறந்து தான் போகின்றது
மலர்களோடு,
முட்களும் இருக்கும் என்கிற நிதர்சனம்..//
superu kavidhai!
//முட்களுக்கு நடுவே பூக்கள் இருக்கே!னு நினைக்கலாம் இல்ல.//
repeatu!
நான் வரலை, இந்த விளையாட்டுக்கு, கொஞ்ச நாளா "கவுஜ" னாலே பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ இருக்குங்கோவ்!
// சில சமயங்களில்
மறந்து தான் போகின்றது
மலர்களோடு,
முட்களும் இருக்கும் என்கிற நிதர்சனம்..//
முட்கள் மலரை காயப்படுத்தன்னு மலர் நெனச்சா தப்பில்லையா?..
மலருக்கு சின்ன உறுத்தல் இருந்தாலும்,பின்னாடி மலருக்கு பாதுகாப்பாய் அந்த முட்கள் தான் அமையுமின்னு தோனுது..
அவ்வ்....ரொம்ப தத்துவமாகிடுச்சோ?
// ஆசைகள் ஊற்றி வளர்த்த
இதயச்செடி
பருவத்தில் சிலிர்த்து படைத்தது
கனவு ரோஜாக்கள்..//
அடடா.. வார்த்தைகள் அமக்களம்..
// தித்திக்கும் தேன் ஏந்தி
மிதப்போடு நின்ற மலர்களை//
சூப்பர்...
//நாகை சிவா said...
எல்லா மலரோடு முட்கள் இருக்குமா என்ன? முட்களுக்கு நடுவில் இருக்கும் மலர்களை தீண்ட நினைத்தால் முட்கள் இருப்பது நிதர்சனம் தான்..//
ஏனுங்க புலி மாம்ஸ்... விட்டாக்கா முள்ளே இல்லேன்னு , பருத்திப்பூவை தலையில வச்சுக்கிட்டு அலையசொல்லுவிங்க போல..ஹிஹி...
நாகையில ரோஜாப்பூ கெடைக்கறதில்லையா?.. அத ஒரு முறை மணந்து பாருங்க..
பின்ன முள்ளாவது லொள்ளாவது..
:))))
// ambi said...
எனக்கும் கவிதை புரிஞ்சிடுச்சே! :)
முட்களுக்கு நடுவே பூக்கள் இருக்கே!னு நினைக்கலாம் இல்ல.//
பாஸிட்டிவ் மைண்டட்.. கிளாப்..
G3
// வயசானாலே இப்படித்தான் ஞாபக மறதி எல்லாம் வரும். மெமரி ப்ளஸ் டாப்லெட் வேணா டரை பண்ணி பாருங்களேன் :))//
ஹா..ஹா... விவிசி...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........
// G3 said...
[எனக்கு புரிஞ்சிடுச்சில்ல :))) ]//
என்னன்னு புரிஞ்சிடுச்சி? எத்தனை முறை படிச்சாலும் உங்களுக்கு புரியப் போகறதில்லேன்னா?..
ஹிஹி..
nijam endraalum konjam overdose of sogam of late..nijatthhai marakka thane pala neram inge varugirom..hm
vaarthaigaludan konjam vilayaadi irukke ma..
vaazhthukkal
tc
cu
\\சற்றே தீண்டிய பொழுது
நிமிடத்தில் வெட்கித்து
பலவண்ணம் கொண்டு
பறந்துச் சென்றன
வண்ணத்துப்பூச்சிகளாய்,\\
நல்லாயிருக்கு...;))
Ippadiyum yosikkalaam..Mutkalal than malargalai kaapatha mudiyum ena..romba yosikka aarambichhu vittenungo !
TC
CU
//சுகந்தமாய் மணம் பரப்பி
தித்திக்கும் தேன் ஏந்தி
மிதப்போடு நின்ற மலர்களை
சற்றே தீண்டிய பொழுது
நிமிடத்தில் வெட்கித்து
பலவண்ணம் கொண்டு
பறந்துச் சென்றன
வண்ணத்துப்பூச்சிகளாய்,//
ஏனுங்க வேதா ...
விரல்கள் பட்டதும்,ரோஜாவின் இதழ்கள் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளாய் மாறி பறக்க..ன்னு கனவுல
வர்ர மாதிரி நல்லாத்தானே இருக்கு. ஆனா கடைசி வரில விரல்களில் ரத்தம், அது,இதுன்னு எழுதி இதை கொலைவெறி கவிதையாக்கலேன்னாக்கா.. ஒங்களுக்கு தூக்கமே வராதே..
அவ்வ்வ்வ்.......
அழகு வர்ணனைகள் வேதா..
வர்ர மாதிரி நல்லாத்தானே இருக்கு. ஆனா கடைசி வரில விரல்களில் ரத்தம், அது,இதுன்னு எழுதி இதை கொலைவெறி கவிதையாக்கலேன்னாக்கா.. ஒங்களுக்கு தூக்கமே வராதே..
அவ்வ்வ்வ்.......
rippiiiiiiiiiteeeeeeyyyyyyyyyyyy
@காயத்ரி,
/ மெமரி ப்ளஸ் டாப்லெட் வேணா டரை பண்ணி பாருங்களேன் :))/
உங்கள மாதிரி பெரியவங்க சரியா தான் சொல்லுவீங்க எல்லாம் அனுபவம் தானே? நோட் பண்ணிக்கறேன் :)
/கவிதை சூப்பர்.. [எனக்கு புரிஞ்சிடுச்சில்ல :))) ]/
கவிதை சூப்பர்னு சொல்றியா இல்ல உனக்கு புரிஞ்சுடுச்சுன்னு சொல்றியா? ;)
@சிவா,
நீங்க அப்டி கேட்பீங்கன்னு தெரிஞ்சு தானே ஒரு உவமைக்காக ரோஜான்னு போட்ருக்கேன் :)
@மதுரையம்பதி,
/ எல்லா நேரமும் நிதர்சனம் தெரிந்து இருந்துட்டா, நாம மனிதர்கள் இல்லை, தேவர்களாயிடுவோம்./
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க :)
காயத்ரி பாவம் விட்ருங்க ஏதோ தெரியாம சொல்லிட்டா :)
@அம்பி,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :):)
@ட்ரீம்ஸ்,
நன்றி :)
@கீதா,
தலைவி நீங்களே இப்டி சொல்லிட்டா அப்புறம் நானெல்லாம் என்ன பண்றது? :D
@ரசிகன்,
/மலருக்கு சின்ன உறுத்தல் இருந்தாலும்,பின்னாடி மலருக்கு பாதுகாப்பாய் அந்த முட்கள் தான் அமையுமின்னு தோனுது..
அவ்வ்....ரொம்ப தத்துவமாகிடுச்சோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ் ரெம்ப :)
/நாகையில ரோஜாப்பூ கெடைக்கறதில்லையா?.. அத ஒரு முறை மணந்து பாருங்க..
பின்ன முள்ளாவது லொள்ளாவது../
சிவா நல்லா கேட்டுக்கோங்க :D
/என்னன்னு புரிஞ்சிடுச்சி? எத்தனை முறை படிச்சாலும் உங்களுக்கு புரியப் போகறதில்லேன்னா?..
ஹிஹி../
ஹாஹா ரிப்பிட்டே.. :)
@cu,
என் கவிதை உங்கள ரொம்ப பாதிச்சுடுச்சோ மன்னிச்சுடுங்க :(
@கோபி,
ரொம்ப நன்றி :)
@ரசிகன்,
என்ன பண்றது சில விடயங்கள் இப்டி எழுதியே பழக்கமாயிடுச்சு :) இனி வன்முறைய குறைச்சுக்க முயற்சி செய்யறேன்
@கீதா,
என்ன ரிப்பிட்டு ஒரு முடிவோட தான் திரியறீங்க போல..
@பாசமலர்,
நன்றி வருகைக்கும், விமர்சனத்துக்கும் :)
கவித... கவித...
//என் கவிதை உங்கள ரொம்ப பாதிச்சுடுச்சோ மன்னிச்சுடுங்க //
Idhu enna vamba pochu..mannippada..kavithai gal Baadhippadarkku thane ezhudapadugindrana!!illiya ?
வேதா , நீங்க இவ்வளவு அருமையா கவிதை எழுதுற ஒரு கவிஞரா?? எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சே, எல்லா கவிதையும் படிச்சுட்டு பின்னூட்டம் போடுகிறேன்!
\\ஆசைகள் ஊற்றி வளர்த்த
இதயச்செடி
பருவத்தில் சிலிர்த்து படைத்தது
கனவு ரோஜாக்கள்..\\
இதயத்திலுள்ள ஆசைகள் சிலிர்த்து கனவு ரோஜாக்களை படைக்குமா???
எப்படி இப்படியெல்லாம்......கற்பனை! வாவ்!!!
நல்லாயிருக்குங்க வேதா உங்க கவிதை! கடைசி வரிகளையும் ரசித்தேன்!
கவிதை போட்டி அறிவிப்பு
புகுந்து ஆட அழைக்கிறேன்.
@ஜே.கே,
/கவித... கவித.../
ஓ அப்ப இதுக்கு பேரு தான் கவிதையா? :)
@cu,
அப்ப சரி :)
@திவ்யா,
வாங்க முதல் தடவையா வர்ரீங்க, நேரம் கிடைக்கும்போது மெதுவா வந்து படிச்சுப்பாருங்க :) நன்றி
@சிறில்,
அழைப்புக்கு நன்றி :)
//
நிமிடத்தில் வெட்கித்து
பலவண்ணம் கொண்டு
பறந்துச் சென்றன
வண்ணத்துப்பூச்சிகளாய்,
தீண்டிய விரல்களில்
ரத்தம் பூசி..
//
ரோம்ப நல்லா இருக்குங்க...
நேரம் கிடைக்கும் போது அனைத்து கவிதைகளையும் படிப்பேன்...
ஆஹா,இப்புடி அல்லாரும் கவுஜய பிரிச்சு மேய்றீங்களே,பாப்பா பாவம் இல்லையா??????
// பாப்பா பாவம் இல்லையா??????//
அவ்வ்வ்வ்வ்வ்.......
வேதா.., பாப்பாவா?..
ஆஹா... எனக்கு மயக்க,மயக்கமா வருது..யாராவது என்னிய பிடிங்களேன்..:))
enbathil padarnthirukum thunbathai pola, pukalum mutkalundan
Post a Comment