Monday, 3 December, 2007

சகிப்பு..
மிச்சமென ஒதுக்கி வைத்த
எச்சில் பண்டங்களும்
அலட்சியமாய்த் தூக்கி எறிந்த
உடைந்த கண்ணாடித் துண்டங்களும்
மக்காத பாலிதீன் பைகளும்
படித்துக் கிழித்த காதல்கடிதங்களும்
சுத்தம் செய்த மாமிசத்தின்
துர்நாற்றமெடுக்கும் மிச்சங்களும்
ஊர் கூடி வாழ்த்திய திருமண பந்தியில்
இடமில்லாமல் வந்து விழுந்த
எச்சில் இலைகளால்
பிச்சை உண்போரின்
அன்னதானக் கூடமென
நாற்றம் சுமக்கும்
குப்பைத் தொட்டிக்கு
சகிப்பு அதிகமென
விட்டுச் செல்கின்றனர்
சில சிசுக்களையும்...

25 comments:

ரசிகன் said...

வேதா.. சமுகத்தின் அவலத்தை தெளிவா காட்டுற அருமையான கவிதைங்க..
மறுபடி படிக்கனுன்னு தோனுது.. வேலைக்கு போகும் அவசரத்துல இருக்கிறதால...
வந்து படிக்கிறேன்..

பாச மலர் said...

நல்ல கவிதை..குப்பத்தொட்டியின் சகிப்புத்தன்மை அருமை...

நாகை சிவா said...

வாரே வா!

உங்களோட மாஸ்டர் பீஸ் ல இதுவும் ஒன்னும் சொல்லும் அளவுக்கு இருக்கு.

:)

கீதா சாம்பசிவம் said...

மனதைத் தொட்ட கவிதை!

ambi said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு,

இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை சுருக்கி இருக்கலாம். (சரி, சரி, உன்னைய யாரு இங்க உள்ளா விட்டா?னு கத்த கூடாது) :p

G3 said...

:((

The last adam said...

அடேங்கப்பா! வார்த்தைகளில் எவ்வளவு ஆழம்! Simple but very effective. Hats off வேதா!

ரசிகன் said...

// படித்துக் கிழித்த காதல்கடிதங்களும் //

காதல் கடிதங்களை யாரும் கிழிப்பதில்லை..மறைந்த துணைவியின் கடிதத்தை 30 வருடமா உயிரைப் போல பழைய இரும்புப்பெட்டியில் பத்திரமா பாத்துகாத்து வரும் முதியவரை தெரியும் எனக்கு.லட்சம் முறை
படித்திருப்பாரா அதை..அலுக்க வில்லை இப்பவும் அவருக்கு.
ஓ நீங்க ஃபிரபோசல் கடிதத்தை சொல்லறிங்களா?..

ரசிகன் said...

வயிற்றில் சுமந்த மனம் குப்பைத்தொட்டியாகிவிட்டதால்..
குப்பைத்தொட்டிகள் சுமக்க ஆரம்பித்துவிட்டன..குழந்தைகளை.

அவிங்க செஞ்ச தப்புக்கு,தெரு நாய்களுக்கு
குழந்தைகளை விட்டுக்கொடுப்பது எத்தனை கொடுமை?.
நெனைக்கவே கோவமா வருதுங்க...
கவிதை அல்ல இது .. மனிதாபிமானத்தின் கண்ணீர்.

ரசிகன் said...

// குப்பைத் தொட்டிக்கு
சகிப்பு அதிகமென
விட்டுச் செல்கின்றனர்
சில சிசுக்களையும்...//

சாட்டை அடி வரிகள்..
வைரமாய் வரிகளை வடித்தெடுத்த உங்களை பாராட்டுவதா..
இல்லை சமுகத்தின் இந்த அவல நிலையை எண்ணி வருத்தப்படுவதா.
தெரியவில்லை எனக்கு..

ரசிகன் said...

தொட்டில் குழந்தை திட்டத்திற்க்கு காரணமான புண்ணியவான் யாராயிருந்தாலும்
அவருக்கு என்னோட கிராண்ட் சல்யுட்.
வாழ்த்துக்கள் வேதா.

ரசிகன் said...

கவிதை அருமையா இருக்கு...

கோபிநாத் said...

எக்ஸலன்ட் வேதா...;)

பின்னிட்டிங்க..

ஜி said...

//விட்டுச் செல்கின்றனர்
சில சிசுக்களையும்...//

:((( இன்னமும் அது நடக்கிதுங்றத நெனச்சாலே கஷ்டமாத்தான் இருக்குது

Dreamzz said...

//சகிப்பு அதிகமென
விட்டுச் செல்கின்றனர்
சில சிசுக்களையும்...//

vedhanaiyaana aanal unmaiyaana vaarthai.. hmmm!

மதுரையம்பதி said...

நல்ல சமூக பிரஞ்ஞை. அருமையா எழுதியிருக்கீங்க... அதாவது எனக்கெல்லாம் கூட புரியறமாதிரி இருக்கு.... :)

ரசிகன் said...

அவ்வ்வ்வ்வ்..... ஒரு கவிதை எழுதிட்டு மூணு நாள் லீவு விடறதெல்லாம் அநியாயம். வந்தவிங்களுக்கெல்லாம் வரவேற்ப்பு கூட சொல்லலை?:P

Anonymous said...

சொல்ல வார்த்தைகள் இல்லை :(

வேதா said...

@ரசிகன்,
நன்றி நீங்க திரும்ப வந்து படிச்சு கமெண்டும் போட்டு 4 நாள் ஆகுது :D நான் தான் தாமதமா நன்றி சொல்றேன் :)

@பாசமலர்,
ஆமாங்க இப்பல்லாம் குப்பத்தொட்டிக்கு இருக்கற சகிப்புத்தன்மை கூட மனுசங்களுக்கு இருக்க மாட்டேங்குது :(

@சிவா,
ஆகா நன்றி குரு :) வசிட்டர் வாயால் ப்ரும்ம ரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்கு(கட்டம்,வட்டம்,சதுரம் எல்லாத்தையும் விட்டு வெளில வந்துட்டேனா?;))

@கீதா,
நன்றி தலைவி :)

@அம்பி,
நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கறீங்க :D இன்னும் சுருக்கமா சொல்லியிருக்கலாம் தான் அடுத்த முறை முயற்சி செய்யறேன் நன்றி :)

வேதா said...

@காயத்ரி,
:((

@last adam,
நன்றி :)

@ரசிகன்,
/லட்சம் முறை
படித்திருப்பாரா அதை..அலுக்க வில்லை இப்பவும் அவருக்கு./
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் :)

/ஓ நீங்க ஃபிரபோசல் கடிதத்தை சொல்லறிங்களா?../
அவ்வ்வ்வ்வ்வ் எப்டியெல்லாம் யோசிச்சு கேள்வி கேட்கறாங்கப்பா ;D

/வயிற்றில் சுமந்த மனம் குப்பைத்தொட்டியாகிவிட்டதால்..
குப்பைத்தொட்டிகள் சுமக்க ஆரம்பித்துவிட்டன..குழந்தைகளை./
உண்மை தான் :(

/தொட்டில் குழந்தை திட்டத்திற்க்கு காரணமான புண்ணியவான் யாராயிருந்தாலும்
அவருக்கு என்னோட கிராண்ட் சல்யுட்./
ரிப்பிட்டே..

நன்றி :)

@கோபி,
நன்றி :)

@ஜி,
ஆமா வருத்தத்தை அளிக்கும் விடயம் தான் :(

@ட்ரீம்ஸ்,
:( உண்மைகள் சில சமயங்களில் வேதனையும் அளிக்கத் தான் செய்கின்றன..

@மதுரையம்பதி,
நன்றி :)

/அதாவது எனக்கெல்லாம் கூட புரியறமாதிரி இருக்கு.... :)/

ஆகா இப்டி ஒரு உள்குத்தா? :)

@ரசிகன்,
வரவேற்பு கொஞ்சம் தாமதம் தான், சில பல காரணங்கள் மன்னிச்சு விட்ருங்க :D

@துர்கா,
ஆமா மனதை பாரமாக்கும் அவலம் இன்னும் நடக்கின்றது :(

@

Compassion Unlimitted said...

kallukkul kooda eeramundu ena kelvi patten.. kanneeril pirandha indha kuzhandhai kalukku kuppai thotti than thottil ena ninaikkum podhu enna vendru solvadhu..
indha soozhnilaiyai kandu kanneerum vatri vidugirathu..
paarattukkal indha pirachinayyai ellor munnilum arumaiyaga vaitthadarku

tc
cu

Rasiga said...

\\குப்பைத் தொட்டிக்கு
சகிப்பு அதிகமென
விட்டுச் செல்கின்றனர்
சில சிசுக்களையும்...\\

மறுக்கமுடியாத உண்மை.

குப்பைத் தொட்டிக்கு செல்லும் சிசுக்கலின் அவலத்தை, குப்பைத் தொட்டியின் சகிப்பாக கூறியிருக்கும் விதம் அருமை.

Known Stranger said...

i was always a fan of your poems but today i find in every poem of yours a face of bharathidasan and bharathi

Arunkumar said...

touching...

விஜய் said...

அருமையான கவிதை.