Tuesday, 27 November, 2007

புதிர் உடையும் நேரம்..
மாபெரும் ரகசியமாய்
விரவிக்கிடந்த கடலின்
கரை அமர்ந்து தவங்கிடந்தேன்
புதிர் உடையும் நேரத்திற்காய்..

கடலுக்காய் கரையிடம்
தூது வந்த அலை
விஷமச் சிரிப்போடு
கால்களை உரசியபடி சொன்னது
பலநூறு யுகங்களாய்
சொல்லத்துடிக்கிற சேதி ஒன்றை..

கால்களே செவிகளாக
மூளைக்கெட்டிய ரகசியத்தை
மனதோடு பூட்டி வைத்தேன்
உன்னிடம் உடைக்க..

எளிதில் கரையாத
அந்த இரவில்
அலை நுரையெல்லாம்
அள்ளியெடுத்து செதுக்கி வைத்தேன்
நம் முழுநிலவை..

துணைக்காய் விதைத்து வைத்தேன்
சில விண்மீன்கள்
ஆழத்து முத்துக்களை
முழுகியெடுத்து..

சிரத்தையாய்
நான் படைத்த உலகத்தில்
ஒரே உயிராய் நான்
சாட்சியாய் இந்த சமுத்திரம்
தோழியாய் கடலலை,
அவள் ரகசியம் எனக்குமாய்
என் ரகசியம் அவளுக்குமாய்..

விடியத்துவங்கும் வினாடிகளில்
வந்ததோர் சேதி
வினாடிப்பொழுது
கண்ணயர்ந்த நேரத்தில்
நீ வந்து சென்றதாய்...

விட்டுவிட்டேனடி என பதைத்த
நேரத்தில் அலைத்தோழி கால்களை
உரசியபடி கொண்டு சேர்த்தாள்
சில நல்முத்துக்கள்..

ஏந்திய கைகளில் பளப்பளத்தன
உன் விழிநீர்த்துளிகள்..

புதிர் உடைந்த இன்பத்தில்
அமைதியாய் ஆர்ப்பரித்தது கடல்..

24 comments:

J K said...

தேடிய நல்முத்து கிடைச்சுடுச்சா...

சந்தோசம்...

கீதா சாம்பசிவம் said...

விட்டுவிட்டேனடி என பதைத்த
நேரத்தில் அலைத்தோழி கால்களை
உரசியபடி கொண்டு சேர்த்தாள்
சில நல்முத்துக்கள்..

ஏந்திய கைகளில் பளப்பளத்தன
உன் விழிநீர்த்துளிகள்..

புதிர் உடைந்த இன்பத்தில்
அமைதியாய் ஆர்ப்பரித்தது கடல்..

"எதுக்கு????" இதானா புதிர்???? இதுதானா உடைஞ்சது???? ம்ஹும், கொஞ்சம் சேர்த்தே வச்சிருக்கலாமே??? ஏன் எப்பவுமே சோகம்? சோகம் தான் கவிதை தருமோ???? :((((((

G3 said...

எப்பொழுதும் போல் புரிந்தும் புரியாமலும் நான் ;))

நாகை சிவா said...

//G3 said...
எப்பொழுதும் போல் புரிந்தும் புரியாமலும் நான் ;))//

நீங்க அப்படியா.. நான் எப்படினா..

எப்பொழுது போல் அறிந்தும் அறியாமலும் நான் ;)

நாகை சிவா said...

//புதிர் உடைந்த இன்பத்தில்
அமைதியாய் ஆர்ப்பரித்தது கடல்..//

அமைதியும் ஆர்ப்பரித்தும் ஒரே நேரத்தில் நடக்குமா...?

கீதா - வழிமொழிகிறேன்.

கட்டத்தை விட்டு வெளியே வாங்க வேதா

கோபிநாத் said...

கன்பியூசனில் நான்.... ;))

தலைவி, புலி சொல்லறதை வழிமொழிகிறேன்.

\\ஏன் எப்பவுமே சோகம்? சோகம் தான் கவிதை தருமோ???? :((((((\\

நல்ல கேள்வி தலைவி...இந்த கேள்விக்கு பதிலாக அடுத்து ஒரு சந்தோஷமான கவிதை வரும்...என்ன வேதா நான் சொல்லறது சரி தானே!?. ;))

கீதா சாம்பசிவம் said...

@புலி, @கோபிநாத், ரிப்பீஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஎ!!!!!!!!

வேதா said...

@ஜேகே,
:)

@கீதா,
நான் எங்க பிரிச்சு வைச்சேன்?:) கண்ணீர் சோகத்தில் மட்டும் தான் வருமா என்ன? :)

@காயத்ரி,
புரியலியா? :(

@சிவா,
ஒன்னும் சொல்றதுக்கில்ல :)

@கோபி,
அவ்வ்வ்வ்வ் அப்ப இது சந்தோஷமான கவிதையா தெரியலியா? :) இதுக்கே இவ்ளோ கொலவெறியாகிட்டீங்க ;D

@கீதா,
என்ன ரிப்பிட்டே? என் வலைப்பக்கத்துக்கு வந்தாலே எல்லாரும் இத தான் சொல்றீங்க ;)

The last adam said...

அழகான கவிதை. எண்ண ஓட்டம் ரொம்ப தெளிவு!

ரசிகன் said...

// தோழியாய் கடலலை,
அவள் ரகசியம் எனக்குமாய்
என் ரகசியம் அவளுக்குமாய்....//

ஓ..சாரி.. ரெண்டு லேடிஸ் ரகசியமா ஏதோ பேசிக்கிட்டிருக்கும்போது.. குறுக்க வந்து கமெண்ட் அடிக்கிறது அம்புட்டு நல்லாயிருக்காதில்ல... நா அப்புறமா வந்து பாக்கிறேனுங்க...

ரசிகன் said...

//எளிதில் கரையாத
அந்த இரவில் //

நல்முத்து..
இது ரொம்ப நல்லாயிருக்கு..

Dreamzz said...

//சிரத்தையாய்
நான் படைத்த உலகத்தில்
ஒரே உயிராய் நான்
சாட்சியாய் இந்த சமுத்திரம்
தோழியாய் கடலலை,
அவள் ரகசியம் எனக்குமாய்
என் ரகசியம் அவளுக்குமாய்..
//
adada! veda kavidhai veda kavidhai thaan! superu!

Compassion Unlimitted said...

Nandraga irundadhdhu..Kaadhalil vaadupavarum,Kaadalukkaga vaadupavarum unarakkoodiya varigal..Idarkku mele onnum sollakkoodathu..!!
TC
CU

Mythily said...

Your poems are too good. First time in ur blog :)

தி. ரா. ச.(T.R.C.) said...

எளிதில் கரையாத
அந்த இரவில்
அலை நுரையெல்லாம்
அள்ளியெடுத்து செதுக்கி வைத்தேன்
நம் முழுநிலவை..


அந்த நிலாவைப் பார்த்தேன் அது கரையவில்லை ஏன்?

Anonymous said...

புரிந்தும் புரியாமலும்,
படித்துவிட்டேன்.

கீதாம்மா, சில சமயங்களில் சோகமான எழுத்துக்கள் மிக தெளிவான வார்த்தை பிரயோகங்களை தரும் என படித்திருக்கிறேன்.

மெளலி.

பாச மலர் said...

வேதா மேடம்,

கவிதை வரிகள் மிகவும் அருமை..கடற்கரையில் அமர்ந்து இதை அனுபவித்து வந்தது போல் தோன்றியது..

மஞ்சூர் ராசா said...

அன்பு வேதா இந்த கவிதையை படிக்கும்பொழுது பாம்பாட்டி சித்தனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்ததை ஏனோ தடுக்க முடியவில்லை:

கடலின் கவிதைக்கு
கற்றலின் அவசியமில்லை
சாத்தியமான வெற்றிடம்
துளி மௌனத்துடன் அமர
கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை.

வேதா said...

@last adam,
முதல் வருகைக்கு நன்றி :)

@ரசிகன்,
நன்றி ரகசியம் புரிஞ்சுடிச்சு போலிருக்கு :)

@ட்ரீம்ஸ்,
ரொம்ப நன்றி தம்பி :)

@cu,
நீங்க சொல்றத பார்த்தா அடுத்து ஒரு காதல் கதை வரப்போகுது போலிருக்கு உங்க வலைப்பக்கத்துல ;D எப்படியோ பேய் கதைய விட்டா சரி தான் :)நீங்க என்ன ஊருக்கு போறதா சொல்லிட்டு இன்னும் இங்க உலாத்திக்கிட்டு இருக்கீங்க? :D

@மைதிலி,
வருகைக்கு நன்றி :)

@திராச,
அது எளிதில் கரையாத மனநிலவு :)

@மெளலி,
உங்களுக்காவது தெளிவா புரிஞ்சுதா? :)

@பாசமலர்,
புரிதலை விட உணர்தலை கொடுத்திருக்கிறதா என் கவிதை? நன்றி :)

@மஞ்சூர்,
/கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை./
அருமையான வார்த்தை ப்ரயோகம் :)
நன்றி :)

வேதா said...

@last adam,
முதல் வருகைக்கு நன்றி :)

@ரசிகன்,
நன்றி ரகசியம் புரிஞ்சுடிச்சு போலிருக்கு :)

@ட்ரீம்ஸ்,
ரொம்ப நன்றி தம்பி :)

@cu,
நீங்க சொல்றத பார்த்தா அடுத்து ஒரு காதல் கதை வரப்போகுது போலிருக்கு உங்க வலைப்பக்கத்துல ;D எப்படியோ பேய் கதைய விட்டா சரி தான் :)நீங்க என்ன ஊருக்கு போறதா சொல்லிட்டு இன்னும் இங்க உலாத்திக்கிட்டு இருக்கீங்க? :D

@மைதிலி,
வருகைக்கு நன்றி :)

@திராச,
அது எளிதில் கரையாத மனநிலவு :)

@மெளலி,
உங்களுக்காவது தெளிவா புரிஞ்சுதா? :)

@பாசமலர்,
புரிதலை விட உணர்தலை கொடுத்திருக்கிறதா என் கவிதை? நன்றி :)

@மஞ்சூர்,
/கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை./
அருமையான வார்த்தை ப்ரயோகம் :)
நன்றி :)

Compassion Unlimitted said...

valail vizhundorukku edhu vimochanam..conference bore adichhudhu..sarinu oru valam vanden ..thappa ?
TC
CU

Compassion Unlimitted said...

//நீங்க சொல்றத பார்த்தா அடுத்து ஒரு காதல் கதை வரப்போகுது போலிருக்கு உங்க வலைப்பக்கத்துல //
idhu peru dhan plate a thirupparadhu..kaadal kadhai unnoda valaila varumnu sonna namma pakkam thalli vidariye ma !!
TC
CU

Known Stranger said...

the best part of your poems is - the subtle pain of reality and it attracts me. izhaiyodiya sogam eppothum oru thakathai tharakudiyathu . i like your style

வீ. எம் said...

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
இல்லையெனின் என் இந்த
பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

அன்புடன்
வீ எம்