என்றும் நினைத்துப் பார்த்ததில்லை
இப்படி நினைப்பேனென்று!
நினைக்காத வரை செய்யாத ஒன்றை
நினைத்ததும் செய்ய விழைவதேன்?
விழைந்ததும் செய்யாத ஒன்றை
இன்று நினைத்ததும் செய்வதேன்?
செய்தலின் காரணமாய்
சொல்வதற்கு ஏதுமில்லையெனில்
ஏன் நினைத்தேன்?
ஏன் செய்தேன்?
வினாவிற்கு விடையாய்
என் நினைத்தலுக்கும் செய்தலுக்குமான
இடைவெளியில்
உன் இருப்பை உறுதி செய்தது
என்னைக் கடந்து சென்ற
உன் சுவாசம் சுமந்த மென்தென்றல்...

26 comments:
ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாதமாதிரியும் இருக்கு.....
நீங்க என்ன சொல்லுறீங்க? :)
@ மதுரையம்பதி
:)
அவங்களுக்கு புரிந்ததை அடுத்தவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் புரியாத மாதிரி எழுதி இருக்காங்க...
காலம் கனிந்தால் எல்லாம் கனியே வேண்டியது தானே :)
வேதாக்கா எத்தனை வாட்டி நினைச்சாங்க எத்தனை விஷயம் செஞ்சாங்க / எத்தனை விஷயம் நினைச்சாங்க எத்தனை வாட்டி செஞ்சாங்கன்னு சரியா சொன்னா நீங்க நினைச்சதை எங்க வேதாக்கா செய்வாங்க :P
குருவே உங்க சிஷ்யைன்னு ப்ரூவ் பண்ணிட்டேனா?
மொத வரிய படிச்சுட்டு ஏதோ புரியுதேனு இரண்டாவது வரியையும் படிச்சேன். ஒன்னும் புரியலையேனு தனி தனி வார்த்தையா மட்டும் படிச்சு நிறுத்தினேன். எல்லாம் புரிஞ்சது. ஆனா....
.
.
.
கடைசில மொத்தமா ஒன்னுமே புரியல...
\\\நாகை சிவா said...
காலம் கனிந்தால் எல்லாம் கனியே வேண்டியது தானே :)\\
சகா உனக்கு புரிஞ்சிடுச்சி போல இருக்கே ! !? :)
என்ன சொல்ல வருகிறீர்கள்..நினைப்பிற்கும், விழைதலுக்கும் தொடர்பில்லை என்றா????..ஆனாலும் ஒரு நல்ல தமிழுக்கு வாழ்த்துக்கள்
@மதுரையம்பதி,
நான் என்ன சொல்றது :) புரிஞ்சா புரிஞ்சதுன்னு அர்த்தம் இல்லையென்றால் புரியலேன்னு அர்த்தம் :)
@சிவா,
/அடுத்தவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் புரியாத மாதிரி எழுதி இருக்காங்க.../
இப்ப என்ன புரியுதுன்னு சொல்றீங்களா இல்ல புரியலேங்கறீங்களா? :)
/காலம் கனிந்தால் எல்லாம் கனியே வேண்டியது தானே :)/
என்ன சொல்ல வரீங்க? :)
@காயத்ரி,
ஹிஹி நல்லா நிரூபிச்சிட்ட :)
@ஜேகே,
இதுக்கு தான் ரொம்ப ஆராய கூடாதுங்கறது :D
@கோபி,
என்னது சிவாக்கு புரிஞ்சிடுச்சா?!! :D
@கிருத்திகா,
/நினைப்பிற்கும், விழைதலுக்கும் தொடர்பில்லை என்றா????../
இல்லை நம் நினைப்பும் கூட காலத்துக்கு ஏற்ப மாறுபடும் என்கிறேன். நாம் நினைத்துக்கூட பார்க்காத சில விஷயங்களை காலம் மாறும் போது நினைக்கவும் செய்கிறோம் அதை செய்ய விழையவும் செய்கிறோம் இல்லையா? :)
நன்றி :)
கவிதை புரிஞ்சவங்க யாராச்சும் எனக்கு புரியுற மாதிரி சொல்லுங்களேன்.... :D
KONJAM OVER HEAD TRANSMISSION..puriyale..Nalla velai,enakku munbu nanbargal sila pala kelvigal kettu neeyum badhil koori irundhadhal thappinen..oralavu purindhadhu..irundhalum innum konjam purindirundhal nimmadhiyaga irunduirukkum..hmm..enna seyya..en mandela avvalavu dhan masala
TC
CU
// என்றும் நினைத்துப் பார்த்ததில்லை
இப்படி நினைப்பேனென்று!//
சரிதானுங்க.. நாங்கூட நமக்கா இப்பிடியெல்லாம்
தோனுது? ன்னு பல சமயத்துல வியந்ததுண்டு.
நல்லாயிருக்குங்க. வேதா..
மத்த வரிகள் ஏதோ கொஞ்சம் புரியுது..ஆனா அது நீங்க சொல்ல வந்த கருத்தான்னு தெரியலை..
அருமையான மார்டன்கவிதைப்பா.. (மார்டன் ஆர்ட்ஸ் மாதிரின்னும் சொல்லலாம்).
(எனக்கு அம்புட்டு ஞானம் பத்தலையோ?)
// சொல்வதற்கு ஏதுமில்லையெனில்
ஏன் நினைத்தேன்?
ஏன் செய்தேன்?//
ஒருவேளை நீங்க இந்த கவிதையை போட்டதைத்தேன்
அப்பிடி ஃபீல் பண்ணி சொல்லறிங்களோ?..
ஆங்..இப்பத்தேன் எனக்கு பிரிஞ்சிது..
எம்புட்டு சிம்பிளான கவிதை....
// என்றும் நினைத்துப் பார்த்ததில்லை
இப்படி நினைப்பேனென்று!
நினைக்காத வரை செய்யாத ஒன்றை
நினைத்ததும் செய்ய விழைவதேன்?
விழைந்ததும் செய்யாத ஒன்றை
இன்று நினைத்ததும் செய்வதேன்?//
நம்ம தோழி மொத மொதல்ல நேத்து சமையல் செய்யலாமுன்னு நெனச்சதத்தேன் சொல்றாங்க..ஏனுங்க வேதா.. நாஞ்சொல்லறத்து சரிதானுங்களே..ஹிஹி...:D
// //செய்தலின் காரணமாய்
சொல்வதற்கு ஏதுமில்லையெனில்
ஏன் நினைத்தேன்?
ஏன் செய்தேன்?/
//
வீட்டுல இருக்கிறவிங்களுக்கு..சோதனைக்காலமுன்னு ராசி பலன்ல போட்டுருக்கோ? என்னவோ?..:)))
// வினாவிற்கு விடையாய்
என் நினைத்தலுக்கும் செய்தலுக்குமான
இடைவெளியில்
உன் இருப்பை உறுதி செய்தது
என்னைக் கடந்து சென்ற
உன் சுவாசம் சுமந்த மென்தென்றல்...//
இதுவா?.. அப்பிடி சமையல் பரிசோதனைகளுக்கு இடையில அடிக்கடி வீட்டுலைருந்து யாரும் எஸ்கேப் ஆயிடலேன்னு "இருப்பை" உறுதி செஞ்சிக்கிட்டதைதேன் அங்கன சொல்லறாய்ங்க..ஹிஹி...:)))))
// உன் சுவாசம் சுமந்த மென்தென்றல்...////
ஒருவேளை வீட்டுல இருக்கறவிங்களோட பயம் கலந்த பெருமூச்சாயிருக்குமோ?..
ரசிகன் ஏனிந்த கொலவெறி கவிதைய இப்டி பிரிச்சு மேஞ்சுட்டீங்க :D
Enakku enna thondradhu na,neengale ovvoru varikkum explanation koduthhudalamnu..eppadi ennoda brilliant idea..lol
TC
CU
// ரசிகன் said...
// சொல்வதற்கு ஏதுமில்லையெனில்
ஏன் நினைத்தேன்?
ஏன் செய்தேன்?//
ஒருவேளை நீங்க இந்த கவிதையை போட்டதைத்தேன்
அப்பிடி ஃபீல் பண்ணி சொல்லறிங்களோ?..////
REPETAAAAAAAAAAAAAIIIII
ஹிஹிஹி, நல்லவேளையா அன்னிக்கு சாட்டிங்கிலேயே இதைப் பார்த்தேனோ, இன்னிவரை இங்கே வராமல் தப்பிச்சேனோ? எல்லாம் கொலைவெறியோட அலையறதைப் பார்த்தா, எங்கே இதுக்கும் நான் தான் விமரிசனம் எழுதினேன்னு நினைப்பாங்களோனு பயமா இருக்கு, கொஞ்ச நாள் தலை மறைவாவே இருந்துக்கறேன்.!!! :P :P
@சிவா, புலி, அது என்ன? "காலம் கனிந்தால் எல்லாம் "கனியே" வேண்டியது தானே? என்னங்க தமிழ் இது? சொல்லாதீங்க, இனிமே யாரும் என்னைத் தலைவினு சொல்லாதீங்க, மானத்தை வாங்கறீங்க எல்லாம். :P
இப்பிடி ஒரு மாடர்ன் ஆர்ட் கவிதையா? கண்ண கட்டுதுடா சாமி!!!!!!!!!!!!
enakku purinjithu!
unga site Vistala pakka supera irukku!
something is hitting hard in my head. sempatiyalla adicha mathiri irukku. apt to my present state.
Post a Comment