
குத்திக் கிழித்தன
உன் வார்த்தைகள்,
என் இதயத்தில்
இறங்கிய கத்தியாய்.
புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது
கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை
விட்டுச் சென்றது,
என் கண்ணீர் துளிகள் அல்ல,
கிழிந்த என் இதயத்தின்,
ரத்த துளிகள்...
இன்று
காலம் பறந்து
நினைவுகள் கடந்து
சுவடுகள் மறைந்தாலும்
என் மீதான உன் புரிதலை
உலகுக்கு
நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..
பி.கு : இது ஒரு மீள்கவிதை, போன வருடம் எழுதியது. இறுதி பத்தி மட்டும் இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.

35 comments:
Wonderful meaning in a single line
"அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை.."
Excellent.. Hatsoff..
வேதா,
முதல் முறை வருகை இங்கே. நல்ல கவிதைகள் புழங்குமிடம் என்பது தெளிவாகப் புரிகிறது..
//குத்திக் கிழித்தன
உன் வார்த்தைகள்,
என் இதயத்தில்
இறங்கிய கத்தியாய்.
//
அடடா.. வலியின் வேதனை வரிகளில் தெரிகிறது.
மருந்தில்லாக் காயங்களே இல்லை என்பதை மனதிற் கொள்க!
//புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது
கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை
விட்டுச் சென்றது,
என் கண்ணீர் துளிகள் அல்ல,
கிழிந்த என் இதயத்தின்,
ரத்த துளிகள்...//
முதலிரண்டு வரிகள் ஆழம் நிரம்பிய அர்த்தம் பொதிந்த அருமையான வரிகள்.
பெரும்பாலான இடங்களில் பிரச்சினைகளின் பிறப்பிடமே அதுதான்!
சத்தமே இல்லாமல் வரும் ரத்தம்..
இருப்பினும் நிற்பதில்லை யுத்தம்...
//இன்று
காலம் பறந்து
நினைவுகள் கடந்து
சுவடுகள் மறைந்தாலும்
என் மீதான உன் புரிதலை
உலகுக்கு
நீ உரத்து சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துக்கின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..//
சூப்பர் போங்க.. நல்ல முத்தாய்ப்பு.
சில திருத்தங்கள். சரி செய்தால் அது இன்னும் மெருகூட்டும்.
//நீ உரத்து சொல்லும்// என்பது உரத்துச் சொல்லும் என்றிருக்க வேண்டும்.
//நினைவுப்படுத்துக்கின்றது// என்பதில் அந்த 'க்' தேவையில்லை.
//பி.கு : இது ஒரு மீள்கவிதை, போன வருடம் எழுதியது. இறுதி பத்தி மட்டும் இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.
//
மீள்கவிதை மீளட்டும் இன்னும்...
மீள்கவிதை என்பது தொடர்கவிதை எனும் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதா இங்கே?
வாழ்த்துக்கள்..
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
உண்மையான புரிதல் எங்கேயுமே இல்லையோ?
@கீதா சாம்பசிவம்,
//உண்மையான புரிதல் எங்கேயுமே இல்லையோ?//
நிச்சயமாக இருக்கின்றது.
சிற்சில இடங்களில் அது புல்நுனியில் பனிபோலவும் வெகு சில இடங்களில் அது ஆலமர விழுதுகள் போலவும் விரவிக்கிடக்கின்றது என்பது என் தாழ்மையான எண்ணம்.
@vg,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
@itsraghs,
கவிதைகள் புழங்குமிடம் தான் ஆனால் நல்ல கவிதைகளா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் நன்றி :)
@இராகவன்,
/மருந்தில்லாக் காயங்களே இல்லை என்பதை மனதிற் கொள்க!/
உண்மை தான் காயங்கள் ஆறினாலும் சில வடுக்கள் இருக்கத்தானே செய்யும்..
/சத்தமே இல்லாமல் வரும் ரத்தம்..
இருப்பினும் நிற்பதில்லை யுத்தம்.../
ரெண்டே வரிகளில் அசத்திட்டீங்க :)
/சில திருத்தங்கள். சரி செய்தால் அது இன்னும் மெருகூட்டும்./
நிச்சயமாக சரி செய்கிறேன் எனக்கிருக்கும் ப்ரச்னையே இந்த சந்திப்பிழை(ப் வருமா?):) தான் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
/மீள்கவிதை என்பது தொடர்கவிதை எனும் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதா இங்கே?/
முன்பே இந்த வலைப்பக்கத்தில் எழுதிய கவிதை அதனால் மீள்கவிதை என்று சொன்னேன், தவிரவும் இறுதியில் சில வரிகள் இம்முறை தான் சேர்த்துள்ளேன்.
/இராகவன் என்ற சரவணன் மு./
நீங்க இராகவனா? இல்ல சரவணனா?இதுக்கு முன்பு வந்த பின்னூட்டமும் உங்களோடது தானா? எத்தன பெயர்களில் எழுதறீங்க :)
@கீதா,
உண்மையான புரிதல் என்று ஒன்று இருக்கிறதா என்ன?..
//கவிதைகள் புழங்குமிடம் தான் ஆனால் நல்ல கவிதைகளா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் நன்றி :)//
நிச்சயமாக. எடைபோடும் திறன் எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால கவிதைச்சாலைகளில் நடைபோடும் ஆர்வம் உண்டு. அவ்வளவே! :)
தொடர்வோம்...
//நீங்க இராகவனா? இல்ல சரவணனா?இதுக்கு முன்பு வந்த பின்னூட்டமும் உங்களோடது தானா? எத்தன பெயர்களில் எழுதறீங்க :)
//
இராகவன் பாதி..சரவணன் பாதி.. :)
இரண்டுமே என் பெற்றோர் இட்ட பெயர்.
எத்தனை பெயரா? எனக்குச் சுட்ட பெயர் எதுவும் இல்லைங்க... அது வேறு ஒரு ஜிமெயில் கணக்கில் இருந்து அதுவாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் வந்த குழப்பம். [It was taken from another gmail id of mine, thats why it happened to appear as 'itsraghz']
excellent last paththi:)
Hatts off:)
கவிதையை படிச்சவுடன் நீங்களும் காயத்ரி மாதிரி ஆகிட்டிங்க போலன்னு நினைச்சுட்டேன்...
டிஸ்கியை பார்த்த பிறகு கொஞ்சம் நிம்மதி ;)
கடைசியில கலக்கல் ;)
Kaadhal enbadhu kaalathirkkum appar pattadhu ena thelivai koori irukkireergal..unmai dhan..arumai..manathirku idhamai irukkiradhu..vaazhga
TC
CU
அப்ப உங்களைப் பார்த்துதான் காயத்ரி அப்படி அழுவாச்சி காவியம் வடிக்க ஆரம்பிச்சாங்களா?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
இந்தக் கவிதையைப் படிச்சவுடன் எனக்கும் அழுகாச்சி அழுகாச்சியா வந்துடுச்சு!
யக்கோவ், நீங்க எழுதின கவிதை... சொல்லவா வேனும்!
//நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..//
ஒரே நொடிதான்..
பொய்யானது
உன் புரிதலா?
நானா?
:D
ஹாய் வேதா,
//நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..//
வாவ்...எங்கயோ போயிட்டீங்கப்பா.
இந்த வரிகள் என்னை ரொம்பவே பாதிக்குது.என்ன தான் கவிதையா இருந்தாலும் சில சமயம் மனம் சிந்திக்கவும்தான் தோனுது.
எப்படி இப்படிலாம் முடியுது? நிஜமாவே இது கற்பனையா இல்ல அனுபவமா?
எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேனு சொல்ல வந்தேன்... டிஸ்கி போட்டுட்டீங்க...
:)
வேதா.. இந்த கவிதை ஏனோ
என்னை தொந்தரவு செய்கின்றது...
// கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை
விட்டுச் சென்றது,//
வரிகளை படிக்கும்போது என்மனமும்
தன் சுவடுகளை தடவிப் பார்த்துக்கொள்கின்றது..
படிப்பவன் மேல் பாதிப்பை உண்டாக்கும் கவிதை..
நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்..
// புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது//
இந்த கவிதையை படிக்கும் போது,நீங்கள் எழுதியதாக தோன்றவில்லை..எனது ஆழ்மனதின் நினைவுகளுக்கு வரிவடிவம் கிடைத்ததை போல உணர்கின்றேன்..
அதற்க்காக.. உங்களிடம் "கவிதை கருத்து உரிமை"கோறும் உத்தேசம் எதுவுமில்லை..
// இன்று
காலம் பறந்து
நினைவுகள் கடந்து
சுவடுகள் மறைந்தாலும்
என் மீதான உன் புரிதலை
உலகுக்கு
நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது//
ம்ம்.....nice
// அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..//
ஆனால்.. வாழ்க்கை என்பது ஒரு நொடி நிகழ்வை வைத்து
தீர்மானிக்க உகர்ந்தது அல்ல என்றே தோன்றுகிறது.
சூழ்நிலை காரணமாக ஒரு சில சமயங்களில் மனிதனாய் பிறந்த எல்லோருமே தவறு செய்வது இயல்பு.இதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.இல்லையென்றால் அது "புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது" ஆகிவிடும்.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் இதற்க்கு பொறுந்தாது.
எனவேதான் வள்ளூவரும் கூட "மிகை நாடி" என்றார்.
நமக்கு உண்மையிலேயே அப்படிப்பட்ட பாதிப்புக்கள் இருந்தால்,அது யாராக இருந்தாலும், நாம் மன்னிப்பதுதான் உத்தமம்.
// இது ஒரு மீள்கவிதை, போன வருடம் எழுதியது. இறுதி பத்தி மட்டும் இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.//
மாற்றங்கள் நல்லது தான்.நாளை இந்த கவிதையை படிக்கும் போது ஒருவேளை வேறு மனநிலையில் வேறு போல தோன்றவும் செய்யலாம்.
அதனால் தான் இப்போதே.."கொழுப்பு " நீக்கப்பட்ட சுத்தமான் பின்னூட்டத்தை அளித்திருக்கிறேன்.
@இராகவன்,
/ஆனால கவிதைச்சாலைகளில் நடைபோடும் ஆர்வம் உண்டு. அவ்வளவே! :)/
தங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையிலே என் கவிதைகள் அமைவதில் எனக்கு மகிழ்ச்சி :)
arumaiyaana varigal.... :)))
@ராஜி,
நன்றிம்மா ரொம்ப நாள் கழிச்சு வலைப்பக்கங்களில் உலவ ஆரம்பிச்சுருக்கீங்க போல :) நீங்க எதுவும் எழுதலியா?
@கோபி,
ஹாஹா அப்டியெல்லாம் நான் ரொம்ப நாளாவே இப்டி தான் எழுதிக்கிட்டு இருக்கேன் :)
நன்றி :)
@cu,
நன்றி :)
@சிபி,
அய்யோ அதுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்ல நான் அவள் இல்லை :)
@வருத்தப்படுபவன்,
இனிமே மறக்காம கைக்குட்டை எடுத்துட்டு வாங்க :)
@ட்ரீம்ஸ்,
;)/ஒரே நொடிதான்..
பொய்யானது
உன் புரிதலா?
நானா?/
கவிதை படிச்சா அனுபவிக்கனும் ஆராய கூடாது ;)
@சுமதி,
/நிஜமாவே இது கற்பனையா இல்ல அனுபவமா?/
முதலில் எழுதியது அனுபவித்து எழுதியது தான் கடைசியா சேர்த்த வரிகள் கற்பனை :)
@சிவா,
என் பழைய கவிதைகளெல்லாம் நினைவுல இருக்கா :) பல பேருக்கு தெரியாதில்ல அதான் டிஸ்கி :)
@
@ரசிகன்,
தங்களுடைய நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி :)
/நமக்கு உண்மையிலேயே அப்படிப்பட்ட பாதிப்புக்கள் இருந்தால்,அது யாராக இருந்தாலும், நாம் மன்னிப்பதுதான் உத்தமம்./
கண்டிப்பா அது தான் உத்தமம். இந்த கவிதையை நான் போன வருடம் எழுதிய பொழுது என் மனதில் இருந்த எண்ணங்கள் தற்போது மீண்டும் படித்துப் பார்க்கும் போது மாறியுள்ளது உண்மை தான். இறுதியாக சேர்த்த வரிகள் அனுபவித்தது இல்லை வெறும் கற்பனை தான் :)
நன்றி :)
@ஜி,
வாங்க ஜி நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துருக்கீங்க நன்றி :)
How could everyone write in tamil?
sathish pls refer the site "http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3"
it is nailing something hard in me . very worth and right to read at this present situation of mine. enjoyed this. dont know how many times i kept reading this. i do know you like to have the comments written in tamil. but it is easy for me to leave a comment in english. hope you dont mind - can i use this in my page with the link to your page for one of my blog post i am going to write. ?
@vaishnav,
u can comment in whatever mode u like no problem. u can always use my kavithai in ur blog posts :)
மீள்கவிதை - what does this mean? enaku tamilum arakora englipisum arakora.. what is மீள்கவிதை mean ?
Post a Comment