
எனக்கான நியாயங்களை வகுத்து
நான் மட்டுமே பயணிக்கும்
என் பாதையில்
மலர்வனங்களோடு முட்வேலிகளும்
என்னை களிப்பூட்ட,
திகைக்க வைப்பவை
நான் அறியா திசைகளிலிருந்தும்
நான் அறியா மனங்களிலிருந்தும்
முட்பாணங்களாய்ப் பாய்ந்து வரும்
ஆயிரம் கேள்விகளே..
மாபெரும் யுத்தங்களில் உயிர்கொண்ட
ஆயுதங்களையே வெல்லும் ஆபத்தான
இக்கேள்விகளுக்குள்
மீண்டும் மீண்டும் புகுந்து சென்று
எதையென்று தெரியாமல்
தேடத்தான் முயல்கிறேன்..
அவரவர்கான கேள்விகளுக்கு
அவரவர் தீர்மானித்த விடைகளையே
எதிர்நோக்குமிடத்தில்
என் தேடலின் பயன் தானென்ன?
எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர...

22 comments:
ஏனுங்க வேதா.. "என்னோட A.T.M கார்டுலருந்த பணமெல்லாம் என்னாச்சு "ன்னு,உங்க அப்பா கேட்ட ஒரு கேள்விக்கு ,இவ்வளவு ஃபிலிங்ஸ் தேவையா..?..ஹிஹி..
// அவரவர்கான கேள்விகளுக்கு
அவரவர் தீர்மானித்த விடைகளையே
எதிர்நோக்குமிடத்தில்
என் தேடலின் பயன் தானென்ன?
எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர...//ஆழமான அர்த்தம். very nice.
ஏனுங்க வேதா.. "என்னோட A.T.M கார்டுலருந்த பணமெல்லாம் என்னாச்சு "ன்னு,உங்க அப்பா கேட்ட ஒரு கேள்விக்கு ,இவ்வளவு ஃபிலிங்ஸ் தேவையா..?..ஹிஹி..
ரிப்பீட்டேஏஏஏஏஏஏ
//நான் அறியா திசைகளிலிருந்தும்
நான் அறியா மனங்களிலிருந்தும்
முட்பாணங்களாய் பாய்ந்து வரும்
ஆயிரம் கேள்விகளே..//
கவிதை அருமை. எளிமையான சொற்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு அவைகள் எதிர் நோக்கும் பதில்கள் என்னுடைய பதில்களுடன் ஒத்துப்போகத நிலையில் என் பதில்க்களை நானே வைத்துக்கொள்கிறேனெ !!
//எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர... //
கவிதை அருமை....
//ஏனுங்க வேதா.. "என்னோட A.T.M கார்டுலருந்த பணமெல்லாம் என்னாச்சு "ன்னு,உங்க அப்பா கேட்ட ஒரு கேள்விக்கு ,இவ்வளவு ஃபிலிங்ஸ் தேவையா..?..ஹிஹி..//
LOL!
//மலர்வனங்களோடு முட்வேலிகளும்
என்னை களிப்பூட்ட,//
Enna vendru solla !!
//எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர//
Rasippatha illai varutthapaduvadha ena puriyavillai
TC
CU
@ரசிகன்,
ஏனுங்க நான் பீல் பண்ணி எழுதியது உங்களுக்கு காமெடியா இருக்கா? இதுக்கு உங்க தமிழ் ஆசிரியை வேற பின்னாடியே வந்து ரிப்பீட் கொடுக்கறாங்க :)
/ஆழமான அர்த்தம். very nice./
இப்டியும் சொல்றீங்க அப்டியும் சொல்றீங்க ஏதோ உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி நன்றி :D
@கீதா,
தலைவி ரிப்பீட்டா கொடுக்கறீங்க இருங்க உங்களுக்கு இருக்கு ;)
@சீனா,
ரொம்ப அழகா புரிஞ்சுக்கிட்டீங்க நன்றி:)
@ட்ரீம்ஸ்,
/கவிதை அருமை..../
ரொம்ப அடக்கிதான் வாசிக்கற நன்றி :D
@cu,
வருத்தப்பட ஒன்றுமேயில்ல ரசித்தால் போதும் நன்றி :)
ஒன்னும் சொல்றதுக்கில்ல..
இது போல தேட முனைந்ததின் விளைவு தான் "ஏன் இப்படி".
:(
\\எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர... \\
சேம் பிளேட்...:(
@காயத்ரி,
/ஒன்னும் சொல்றதுக்கில்ல/
அவ்ளோ மோசமாவா இருக்க??..
@சிவா,
/இது போல தேட முனைந்ததின் விளைவு தான் "ஏன் இப்படி"./
ரெம்ப யோசிட்டோமோ? :(
@கோபி,
/சேம் பிளேட்...:(/
உங்களுக்குமா?
நிறைய பேரோட சோகத்தை கிளறிவிட்டுட்டேனோ? :(
after a long time i am in your page in fact blog world. the poem you wrote is very amazing infact very similiar to my own questioning. if i have your skill of penning the expression i would write better. - i envy you.
Yea the tamil poem is written by me.
Ela
Nice to read...
Nice to read...
Really Good one..
வேதா,
என்னுள்ளும் சில கேள்விகள்.அதற்கான விடைகள் என்னுள்ளே இருக்கிறது, இருந்தாலும் எழும் வினாக்களை கட்டுபடுத்த முடியுமா என்ன?
//நான் அறியா திசைகளிலிருந்தும்
நான் அறியா மனங்களிலிருந்தும்
முட்பாணங்களாய் பாய்ந்து வரும்
ஆயிரம் கேள்விகளே//
எல்லா கேள்விகளும் முட்பாணங்களாகவே வருமா என்ன?
//அவரவர்கான கேள்விகளுக்கு
அவரவர் தீர்மானித்த விடைகளையே
எதிர்நோக்குமிடத்தில்///
ஏன் இப்படி எல்லாருமே நினைக்கின்றோம். நானே இருந்தாலும் என்விடையைத்தானே எதிர் பார்க்கிறேன், ஏன் இப்படி
என்னமொ இந்த கவிதை என்ன ரொம்ப நேரம் யோசிக்க வைக்குது................
-prakash
/என்னமொ இந்த கவிதை என்ன ரொம்ப நேரம் யோசிக்க வைக்குது................/
என்னையும் தான் ப்ரகாஷ்..
நல்ல கவிதைத் தலைப்பு..
//மலர்வனங்களோடு முட்வேலிகளும்
என்னை களிப்பூட்ட,//
நிதர்சனம்.. அருமை.
//திகைக்க வைப்பவை
நான் அறியா திசைகளிலிருந்தும்
நான் அறியா மனங்களிலிருந்தும்
முட்பாணங்களாய் பாய்ந்து வரும்
ஆயிரம் கேள்விகளே..
//
முட்பாணங்களாய்ப் பாய்ந்து வரும் - 'ப்' சேர்த்துக் கொள்க..
சில சமயங்களில் நாம் 'நான்' என்ற சுயத்தை விட்டு சற்றே வெளியே வந்து சிந்தித்துப் பார்த்தோமேயானால் பாணம் நல்ல பானமாய் இருக்குமே! சரியா?
//மாபெரும் யுத்தங்களில் உயிர்கொண்ட
ஆயுதங்களையே வெல்லும் ஆபத்தான
இக்கேள்விகளுக்குள்
மீண்டும் மீண்டும் புகுந்துச்சென்று
எதையென்று தெரியாமல்
தேடத்தான் முயல்கிறேன்..//
முதலிரண்டு வரிகளில் நல்ல உருவகம் பண்ணியிருக்கீங்க..
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.."
எனவே உங்கள் தேடலின் தீவிரம் அதிகரிக்க வாழ்த்துக்கள்!
//
அவரவர்கான கேள்விகளுக்கு
அவரவர் தீர்மானித்த விடைகளையே
எதிர்நோக்குமிடத்தில்
என் தேடலின் பயன் தானென்ன?//
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. எல்லோருக்கும் அவரவர் வகுத்த வட்டம் மட்டுமே வனப்பாய் இருக்க, உடனிருப்போர் சில சமயங்களில் உவர்ப்பாகவே இருப்பது உண்மை...
//எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர...
//
அருமை.. சில சமயங்களில் பகிர்ந்து கொள்ளுதலில் இன்னும் ஆழப்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் சொற்பமே.
நல்லதொரு கவிதை!
வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
சொல்ல மறந்துட்டேனுங்க..
//மீண்டும் மீண்டும் புகுந்துச்சென்று//
இதில் 'ச்' வேண்டாமே..
@வைஷ்ணவ்,
ரொம்ப நாள் கழித்து நம்ம வலைப்பக்கம் வந்துருக்கீங்க நன்றி :) சில விஷயங்களில் பொறாமைபடுவதில் தவறில்லை ஆனாலும் என்னை பார்த்து சொன்னீங்க பாருங்க அது தான் கொஞ்சம் ஓவர் :)
@இளங்கோவன்,
ரொம்ப நன்றி :)
@இராகவன்,
/நாம் 'நான்' என்ற சுயத்தை விட்டு சற்றே வெளியே வந்து சிந்தித்துப் பார்த்தோமேயானால் பாணம் நல்ல பானமாய் இருக்குமே! சரியா?/
சரி தான் இனி முயற்சித்து பார்ப்போம் :)
/அருமை.. சில சமயங்களில் பகிர்ந்து கொள்ளுதலில் இன்னும் ஆழப்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் சொற்பமே. /
உண்மையான புரிதலும் யதார்த்தமும் நிறைந்தவர்களோடு தான் பகிர்ந்துக்கொள்ளலாம் ஆனா அதற்கான வாய்ப்புகள் சொற்பமே என்று நீங்களே சொல்லிட்டீங்களே :)
நீங்க சொன்ன திருத்தங்களை எடுத்துக்கொண்டேன் நன்றி இராகவன் :)
Post a Comment