
கரை தேடும் அலையென
நிழல் தேடும் மரமென
நீர் தேடும் நெருப்பென
உனை தேடும் மனம்
அறிந்திருக்கவில்லை
இயற்கை வகுத்திருக்கும்
சாத்தியக்கூறுகளின் எல்லைக்கோடுகளை...
அலையில் மிதந்து வரும் இலையாய்
வெயிலில் மிகுந்து வரும் வெம்மையாய்
தழலில் வளர்ந்து வரும் ஒளியாய்
இயல்பை மீறி
நீண்டுக்கொண்டிருக்கிறது
என் தேடல்...
எல்லைத் தாண்டி
உனைத் தீண்ட...

18 comments:
me first?
எல்லைத் தாண்டி
உனைத் தீண்ட...
//
//எல்லை தாண்டி
உனைத் தீண்ட...//
தீவிரவாதியாய்
ஆயிடுவீங்களா?
யெஸ்.,. நானே முதல் . என்ன கேக்கலாம்... ?
சூண்டல் வேண்டாம்
Pஉலியொஅதரி வேண்டாம்
வெற என்ன?
பர்கர் பிளீஸ்...
இறுதி வரிகள் மிக அழகானவை. வாழ்த்துக்கள்.
hehe.. ellai kodu podaradhae adha meeri puratchi panna dhaanae.. nadathunga nadathunga :)
நல்லா இருக்குங்க...
ரொம்ப இயல்பாய், சாதாரண வார்த்தைகளை கொண்டு...
Athu en elloroda kavalaiyum andha ellai kodu mele irukku..mandai kudayude!!
menmaiyaga irukku indha kavidhai
TC
CU
வார்த்தைகளில் விளையாடி இருக்கிங்க...நல்லாயிருக்கு ;-)))
@ப்ரகாஷ்,
/me first?/
நீங்களே தான் :)
/தீவிரவாதியாய்
ஆயிடுவீங்களா?/
ஏனிந்த கொலவெறி? ;)
/சூண்டல் வேண்டாம்
Pஉலியொஅதரி வேண்டாம்
வெற என்ன?
பர்கர் பிளீஸ்/
உங்களுக்கு பர்கர் அனுப்பியாச்சு, சரி கவிதையை பத்தி ஒண்ணையும் சொல்லக்காணோம் உங்களுக்கு புரியலியா இல்ல பிடிக்கலியா? :)
@லட்சுமணராஜா,
எனக்கு அந்த இறுதி வரிகள் தான் ரொம்ப பிடிச்சிருந்தது நன்றி :)
@காயத்ரி,
/ellai kodu podaradhae adha meeri puratchi panna dhaanae.. /
சரி ஓகே உனக்கு கவிதை புரிஞ்சுடுச்சுன்னு நான் ஒத்துக்கறேன் ;)
@சிவா,
ரொம்ப நன்றி :)
@cu,
/menmaiyaga irukku indha kavidha/
ரொம்ப நாள் கழிச்சு ஒரு மென்மையான கவிதைன்னு நான் நினைக்கறேன் :) நன்றி :)
@கோபி,
அப்ப உங்களுக்கு கவிதை புரியுதுன்னு சொல்றீங்க :) நன்றி :)
ஹாய் வேதா,
//இயல்பை மீறி
நீண்டுக்கொண்டிருக்கிறது
என் தேடல்...
எல்லைத் தாண்டி
உனைத் தீண்ட...//
வாவ்..EXCELLENT.
அது சரி இது மாதிரி சொல்லிகிட்டு பார்டர் பக்கம் போயிடாதீங்க அம்மனி.
ரொம்ப நல்லாயிருக்கு SIMPLE AND GUD.
நல்லா இருக்கு ஹே!!
Hello veda,
//அலையில் மிதந்து வரும் இலையாய்
வெயிலில் மிகுந்து வரும் வெம்மையாய்
தழலில் வளர்ந்து வரும் ஒளியாய்//
- I like this three lines, uvamai roomba iyalba irrukku.Thodarattum ungal kavithai payanam.
Regards,
Ganeshan
@சுமதி,
/ இது மாதிரி சொல்லிகிட்டு பார்டர் பக்கம் போயிடாதீங்க அம்மனி./
ஆகா நீங்களுமா? :)
@கார்த்தி,
நன்றி ஹை :)
@கணேசன்,
வாங்க வாங்க கணேசன், அம்பியோட தம்பி தான
நீங்க வந்து பாராட்டற அளவுக்கு இந்த கவிதை இருக்கறதுல எனக்கு மகிழ்ச்சி தான் :) நன்றி :)
கவிதை நல்லா இருக்கு :)
புதிதாக பிளாக் உலகத்தில் நுழைந்திருக்கிறேன் ...கொஞ்சம் என் ஏடு வள்ளுவத்தைப் புரட்டிப் பாருங்களேன்.கொஞ்சம் வேதாந்தம் கொஞ்சம் நக்கல் ,கொஞ்சம் ஆன்மீகம் என்று காணலாம்.
@ட்ரீம்ஸ்,
நன்றி :)
@ரோகிணி,
கண்டிப்பா வந்து பார்க்கறேன், நன்றி :)
alagiya thedal
nicely written
அட உங்களுக்கு கவித கூட எழுத தெரியுமா?..இப்பத்தேன் எனக்குத் தெரியும். நல்லாதேன் இருக்கு.
'' அலையில் மிதந்து வரும் இலையாய்
வெயிலில் மிகுந்து வரும் வெம்மையாய்
தழலில் வளர்ந்து வரும் ஒளியாய ''
நல்ல உவமை/உருவகம்..(எதுன்னு தெர்ல,எதுக்குன்னு ரெண்டயும் போட்டுடேன்.தப்பா சொன்னாக்கா.. எங்க தமிழ் டீச்சர் வீடு பூந்து திட்டுவாய்ங்கல்ல...). புடிச்சிருந்துது..
"கரை தேடும் அலையென" - பொருத்தம்
"நீர் தேடும் நெருப்பென"-எதிர்இன கவர்ச்சி ,இதுவும் ok.
ஆனா.. பாருங்க வேதா..
"நிழல் தேடும் மரமென"- அப்பிடி ஒரு மரமிருக்கான்னு எனக்கு "குண்டக்க மண்டக்க " தோனுதே..
எதுக்கு தங்கிட்ட உருவாகரதயே தேடனும்.ஒரு வேள வெயில் அதிகமாயிட்டதால(?) அப்புடி தேடுதா?..மரத்ததாங்க சொன்னேன் ஹி ஹி ...
இப்புடி தாங்க வந்த எடத்துல ஒழுங்கா பாராட்டிட்டு இருப்போமினாக்கா.. வாய் சும்மாயிருக்கரதில்ல..அதனால "திருஷ்டி பொம்மை -ன்னெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு. சரி சரி ..தோழிகிட்ட தான.. போனாப் போவுது..
Post a Comment