Wednesday, 3 October, 2007

முதல் நொடி...நினைவுகளுள் ஒளிந்துள்ள
அந்த நொடியை தேடுகிறேன்...

விண்ணுடன் ஊடல் கொண்டு மண் சேர்ந்த
மழைத்துளியினை ரசித்த பொழுதா?
குட்டைத் தண்ணீரில் தன்னழகை கண்டுகளித்த
அம்புலியின் செய்கையில் மயங்கிய பொழுதா?

நினைத்த பொழுதினில்
நினைத்தது நிகழாத பொழுதா?
காற்றில் மிதந்து வந்த இசையினை
என்னுள் நுகர்ந்த பொழுதா?

உறவுசூழ் வெளியில்
தனித்து நின்ற பொழுதா?
களங்கமில்லா தொடுதல்களின்
நெறி தவறிய பொழுதா?

முதல் நேசத்தின்
கள்ள சந்திப்புகளின் பொழுதா?
அதுவே கானல் நீரென
மறைந்த பொழுதா?

சர்வமும் அறிந்த தோழியிடம்
சொல்லாமல் மறைத்த சொற்கள் முட்களாய்
மனதை துளைத்த பொழுதா?

நிகழ்வுகளை சொற்களின் மாலையாக்கி
எனக்கு நானே கவிதையாய் சூட்டிக்கொண்ட
அந்த முதல் நொடியை தேடுகிறேன்...

20 comments:

நாகை சிவா said...

பார்த்த முதல் நாளில் பாடல் வரிகளை டக்னு நினைவு கொள்ள வைக்கிறது....

நாகை சிவா said...

//உறவுசூழ் வெளியில்
தனித்து நின்ற பொழுதா?
களங்கமில்லா தொடுதல்களின்
நெறி தவறிய பொழுதா? //

நன்று

//விண்ணுடன் ஊடல் கொண்டு மண் சேர்ந்த
மழைத்துளியினை ரசித்த பொழுதா? //

அழகு...

நல்லா தேடுங்க... விரைவில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன்....

நம்பிக்கை தான் வாழ்க்கை....

நாகை சிவா said...

//பார்த்த முதல் நாளில் பாடல் வரிகளை டக்னு நினைவு கொள்ள வைக்கிறது....//

அதுக்குனு அந்த பாட்டு மாதிரி இருக்கு என்று அர்த்தம் இல்லை... எனக்கு தோனுச்சு என்ற தான் சொன்னேன்....

Anonymous said...

arumai . azhu..

//நிகழ்வுகளை சொற்களின் மாலையாக்கி
எனக்கு நானே கவிதையாய் சூட்டிக்கொண்ட
அந்த முதல் நொடியை தேடுகிறேன்.../

theduthal thodarattum.

innumoru thedalil

matrumoru azakagana kavithai

pirasavikka koodum...

-prakash

G3 said...

Super kavidhai veda.. asathiteenga.. [unga kavidhai pakkathukku vandha en default commenta idhu vandhududhey.. edhaavadhu vasiyam kisiyam vechirukkeengala inga :( ]

G3 said...

//அம்புலியின்// - ambulina ennanu marandhu pochey. konjam explain please

G3 said...

//நிகழ்வுகளை சொற்களின் மாலையாக்கி
எனக்கு நானே கவிதையாய் சூட்டிக்கொண்ட
அந்த முதல் நொடியை தேடுகிறேன்...//

ending topu :D

கோபிநாத் said...

அருமை.... ;-)

\\நினைத்த பொழுதினில்
நினைத்தது நிகழாத பொழுதா?
காற்றில் மிதந்து வந்த இசையினை
என்னுள் நுகர்ந்த பொழுதா?\\

சூப்பர்...

Dreamzz said...

ம்ம்ம்!! எனக்கு என்னமோ புரியுது! நான் ஒன்னும் சொல்லலப்பா!

Compassion Unlimitted said...

Nijatthai kavithai aakki vitteergal..Athan Aazham Vinnai thodumo !Bhoomiyai piladu kondu appuram sendru vinnai thodumo endren !
Vaazhga

CU

G3 said...

Neenga soldradhukkulla naanae kandubidichiten.. ambulina nila dhannu :)

வேதா said...

@சிவா,
/நல்லா தேடுங்க... விரைவில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன்..../
அந்த நம்பிக்கையில தான் நானும் இருக்கேன் :)

@ப்ரகாஷ்,
/innumoru thedalil

matrumoru azakagana kavithai

pirasavikka koodum.../

சரியா சொன்னீங்க அப்டி வந்த கவிதை தான் இது :)

@காயத்ரி,
/edhaavadhu vasiyam kisiyam vechirukkeengala inga :(/
இதெல்லாம் ஓவர் சொல்டேன் ;)

/ending topu :D/
நன்றி :)

@கோபி,
வாங்க இந்த பக்கம் முதல் தடவை வரீங்கன்னு நினைக்கறேன் நன்றி :)

@ட்ரீம்ஸ்,
தம்பி நீ ரொம்ப பேசற ;) உனக்கு இத படிச்சவுடன வேற ஏதாவது தோணிச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல :)

@cu,
/Nijatthai kavithai aakki vitteergal../
உண்மை தான் நன்றி :)

@காயத்ரி,

/. ambulina nila dhannu :)/

:)

Sumathi. said...

ஹாய் வேதா,

//முதல் நேசத்தின்
கள்ள சந்திப்புகளின் பொழுதா?
அதுவே கானல் நீரென
மறைந்த பொழுதா?//

சூப்பர். அருமை.

Sumathi. said...

ஹாய்,

//நிகழ்வுகளை சொற்களின் மாலையாக்கி
எனக்கு நானே கவிதையாய் சூட்டிக்கொண்ட
அந்த முதல் நொடியை தேடுகிறேன்...//

too gud, excellent.

Compassion Unlimitted said...

சூட்டிக்கொண்ட
அந்த முதல் நொடியை தேடுகிறேன்...//

Choodikkoduttha sudar kodiye !!

CU

வேதா said...

@sumathi,
நன்றிம்மா :)

@cu,
ஆகா ஆண்டாளோடு ஒப்பிடுகிறீர்களே? :)

Raji said...

NICE one :)

Ravi said...

//உறவுசூழ் வெளியில்
தனித்து நின்ற பொழுதா?
களங்கமில்லா தொடுதல்களின்
நெறி தவறிய பொழுதா?

முதல் நேசத்தின்
கள்ள சந்திப்புகளின் பொழுதா?
அதுவே கானல் நீரென
மறைந்த பொழுதா? //

truly faboulous veda ..
read it for the 6th time ...
am still counting ..

comment'a unga kavithai fulla copy panna vendaam .. nu dhaan romba pudicha varigala mattum pottane .... motha kavithayum ... vairamai .. minnum .. varigal ... certainly glitering .. the sweetness of life ..

u blog has certainly became my regular visits .. that i cud even miss my yahoo mails .. not urs.. anymore ...

Arunkumar said...

romba naalaiku aprom inga varen..
kavidhai as usual TOP CLASS.

காரூரன் said...

அவளை பற்றி எழுதும் போது வரிகளில் ஆழம் தெரிகின்றது. கவிதைகளின் பிறப்பிடம் காதல் போலும்.
கலைஞரின் வார்த்தைகள்,
புலி மானை வேட்டையாடுவது காட்டில்,
மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில்,

இது பின்னாளில், பா. விஜய்யின் பாடலில் இவ்வரிகள் புகுந்து கொண்டது.

கவிதை வரிகளை யாரும் உரிமை கோர மாட்டார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.