
உன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்
முளை விட்டு அறுக்கிறது
என் நெஞ்சத்தை!
தொண்டை வற்றி பாலையில் திரியும் நாட்களில்
அமுதமென நீரில் மிதந்து வருகிறது
உன் காதல்!
உன் உயிர்மூச்சை சுமந்து வரும் காற்று
வருட மறுக்கிறது இலைகள் தாங்கிய பனித்துளிகளை
என் மேனியை தழுவுதலே
முதல்பணியென்று!
ஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்
உன் அன்பு வாரி அணைக்கிறது
என் அண்ட சராசரங்களையும்!
தீயில் மெழுகாய் உருகினாலும்
நாற்புறமும் பிரகாசிக்கிறது
உன் இருப்பு!
என் எல்லா திசைகளிலும் நிறைந்து
தாளாத நேசத்துடன்
இதயத்தை கீறும்
உன் அன்பெனும் வாளை
சற்றே இறக்கி வை
நான் அழுது விட்டு வருகிறேன்!

20 comments:
Ennavendru solla..arumai..irundaalum ivvalavu sogam koodathu ena ninakkiren
CU
arumaiyana kavithai
//உன் அன்பெனும் வாளை
சற்றே இறக்கி வை
நான் அழுது விட்டு வருகிறேன்!
//
புரியலையே! எதுக்கு அழனும்?
சரி, இதெல்லாம் பெரியவங்க சமாசாரம். நமக்கு எதுக்கு வம்பு! :p
ஹாய் வேதா,
//ஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்
உன் அன்பு வாரி அணைக்கிறது
என் அண்ட சராசரங்களையும்!//
அப்பா.... என்னமா இருக்கு வரிகள்..
ஹாய்,
அருமை!! ரொம்ப நல்லாயிருக்கு...
simply superb...
ஹாய்,
அருமை!! ரொம்ப நல்லாயிருக்கு...
simply superb...
ரொம்ப அழுவாதீங்க...
ஜல்ப் பிடிக்கும்...
//புரியலையே! எதுக்கு அழனும்?//
ஆனந்த கண்ணீர்......
போல... ஆனந்த அழுகை...
:(((((((((((((
Naan oru kavuja podalaamnu nenachen.. ungaludha padichappuram naan adha drop panniten :((((
"உன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்
முளை விட்டு அறுக்கிறது
என் நெஞ்சத்தை!"
இது கொஞ்சம் இடிக்குதோ? மற்றவற்றோடு சேர்த்துப் பார்த்தால் விளங்கலியே? ம்ம்ம்ம்ம்.,
@cu,
/ivvalavu sogam koodathu ena ninakkiren/
அதீதமான அன்பு கூட வலியை தரும் இல்லையா? :) நன்றி.
@டுடி,
நன்றி அக்கா :)
@அம்பி,
ஹலோ யாருப்பா உங்கள உள்ள விட்டது இந்த பக்கமெல்லாம் வரமாட்டீங்களே? :)
@சுமதி,
ரொம்ப நன்றி அக்கா :)
@சிவா,
வேணாம் அவ்ளோ தான் சொல்வேன்:(
@காயத்ரி,
ஏன்??????????
@கீதா,
இல்லியே எல்லாம் சரியா தான் இருக்கு :)
எனக்கு மரமண்டை என்பதால் அங்கே முளைக்கலையோ? :P
@கீதா,
ஹிஹி நான் எதுவும் சொல்றதுக்கில்ல ;)
//எனக்கு மரமண்டை என்பதால் அங்கே முளைக்கலையோ?//
துடிக்கிறது என் வாய், அதை அடக்கு! அடக்கு! என்கிறது உங்களது வயது. :p
Kavithai nalla irukunga!!
ipodhaan unga matha kavithaikalai m padichen.. semmaya ezhudhareenga!
நல்ல கவிதை.
ஆனா அழாதிங்க!
veetha...
putu template ..neriya kavithagal...
ellam putusa irukku
neriya irukku..
anbenum vaal enakkum puriyal..
enakku eppothu than thamiz puriyumo?????
-prakash
////எனக்கு மரமண்டை என்பதால் அங்கே முளைக்கலையோ?//
துடிக்கிறது என் வாய், அதை அடக்கு! அடக்கு! என்கிறது உங்களது வயது. :p////
ambiiiii.. eppadipa ipppadi ellam,,,,,,
:)))))))))))))))))
-maniprakash
ப்ரகாஷ் வாங்க எப்டி இருக்கீங்க? மெதுவா எல்லா கவிதைகளையும் படிச்சு பாருங்க :) உங்க தங்கமணி எப்டி இருக்காங்க?
Post a Comment