
உயிர்வாழ்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..
விரலிடுக்கில்
விரைந்தோடும் தண்ணீராய்
என் கடைசி இரவின்
கண்ணீர் கணங்கள்..
மூடிய விழிகளுக்குள்
தோற்றலுக்கான காரணங்கள்
செந்தழலாய் நடனமாட..
சாட்சியாய் நின்ற நிலவு
இறங்கி வந்து
முகம் துடைத்தது..
பன்னீர் துளிகளின்
சில்லென்ற தொடுகையில்
விழி திறந்தேன்
நிலவில் பிரதிபலித்தது
என் முகம்..
விண்மீன்கள்
வழி காட்ட
வானம் ஏறினேன்..
நிலவாய் நான்..
முகில் திரைகளை விலக்கி
நான் பார்த்த புவியெங்கும்
வியாபித்திருந்தது
என் இருப்பிற்கான அவசியங்கள்..
உயிர்விடுத்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..
மெல்ல இறங்கிவந்தேன்
முழுமதியாய்..

14 comments:
டெம்ப்ளேட் நல்லாருக்குங்க
:)) Super... Asathiteenga :D
//முகில் திரைகளை விலக்கி
நான் பார்த்த புவியெங்கும்
வியாபித்திருந்தது
என் இருப்பிற்கான அவசியங்கள்..//
Elimaiyaana vaarthaigal.. padikka karpanai panna easya irukku :)
//அய்யனார் said...
டெம்ப்ளேட் நல்லாருக்குங்க //
பீல் பண்ணி எழுதினா கவிதை பற்றி எதுவும் சொல்லாம போனா என்ன அர்த்தம் அய்ன்ஸ்...
//:)) Super... Asathiteenga :D //
அசந்துட்டேன்... ;-)
@அய்யனார்,
ரொம்ப நன்றி ஆனா இந்த பாராட்டு டெம்ப்ளேடை வடிவமைச்சவருக்கு தான் போய் சேரனும் :)
@காயத்ரி,
/Elimaiyaana vaarthaigal.. padikka karpanai panna easya irukku :) /
ஹிஹி இப்ப தான் என் கவிதைகள் புரியற மாதிரி இருக்குன்னு சொல்றியா :)
நன்றி :)
@சிவா,
முதல்ல கவிதையை படிச்சுட்டு அப்புறம் கமெண்ட் போடுங்க ;)
/எதுவும் சொல்லாம போனா என்ன அர்த்தம் அய்ன்ஸ்.../
எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லன்னு அர்த்தம் :)
//உயிர்வாழ்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்//
அப்படி என்னங்க சோகம்?
//விரலிடுக்கில்
விரைந்தோடும் தண்ணீராய்
என் கடைசி இரவின்
கண்ணீர் கணங்கள்..
///
பீலிங்க்ஸ்...........
//மூடிய விழிகளுக்குள்
தோற்றலுக்கான காரணங்கள்
செந்தழலாய் நடனமாட..
சாட்சியாய் நின்ற நிலவு
இறங்கி வந்து
முகம் துடைத்தது..//
ஆகா!!!! வார்த்தைகள் விளையாடுது...
//பன்னீர் துளிகளின்
சில்லென்ற தொடுகையில்
விழி திறந்தேன்
நிலவில் பிரதிபலித்தது
என் முகம்..
விண்மீன்கள்
வழி காட்ட
வானம் ஏறினேன்..
//
அப்படியே அனுபவிச்சு எழுதியிருக்கிங்க போல????
//நிலவாய் நான்..
முகில் திரைகளை விலக்கி
நான் பார்த்த புவியெங்கும்
வியாபித்திருந்தது
என் இருப்பிற்கான அவசியங்கள்..
உயிர்விடுத்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..
மெல்ல இறங்கிவந்தேன்
முழுமதியாய்..//
Wowwwwwwwwwwwwwwwww Superbbbbbbbbbb
Nenga aezhuthinatha, Illa suttatha?????
வாவ்! கவிதை different line of thnkingla சூப்பரா இருக்கு!
@மஹா,
/அப்படி என்னங்க சோகம்? /
இது என்னுடைய சோகம் இல்லீங்க எல்லாம் ஒரு கற்பனை தான் :)
/Wowwwwwwwwwwwwwwwww Superbbbbbbbbbb
Nenga aezhuthinatha, Illa suttatha?????/
அட நீங்க வேற ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதியிருக்கேன் சுட்டதான்னு கேட்கறீங்க? :) நான் எழுதினது தான் :)
@ட்ரீம்ஸ்,
சரியா கண்டுப்பிடிச்சிட்டீங்க எப்பவும் எழுதற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சுருக்கேன் :) ஏதோ நல்லா இருந்தா சரி :)
enna thangachi!!
enna peelings ippadi!!!!
supera iruku kavithai
எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
இடையில் இருக்கும் நிலவாய் நீ
என்ற வரியை எடுத்துவிடலாம் என தோன்றுகிறது.
என்ன சொல்றது?
yet another wonderful expression..keep it up
CU
Post a Comment