Monday, 13 August, 2007

சீக்கிரம் கேட்டு விடு எனக்கான கேள்வியை!..


கண்களை மறைத்த
விரல்களின் ஊடே
குறும்புத்தனமாய் எட்டிப்பார்த்து
கண்ணாமூச்சி விளையாடும்
சிறார்களைப் போல்,
இத்தனை நாட்களும்
நம் தொலைப்பேசி
உரையாடல்களில்
உண்மையின் பின் ஒளிந்துக்கொண்டு
ஓடி விளையாடின சொற்கள்
என்றாவது சந்திக்கும் போது
எங்குச் சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்!

கிழக்கை சந்தித்த ஆதித்யனாய்
இன்று நீ என்னை
சந்தித்த போது
திகைத்த நம் சொற்கள்
ஒலியை காற்றுக்கு தாரை வார்த்து
மெளனவெளியில்
நம்மை மேடையேற்றி
கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றன
ஒரு சாட்சியாக!

இமைகள் துடிக்கும் பொழுதினிலும்
மறையாத என் கர்வம்
உன் மீசை முறுக்கினில்
சிக்கிக்கொண்டு படப்படக்க,
வெட்கத்தை துறந்து
மெல்ல
என் இதழ்கள் விரிய
உத்தரவு கிடைத்ததென
புன்னகை புரிந்தன
உன் இதழ்கள்!

மழையென வார்த்தைகளுடன்
சில பல சீண்டல்கள்
மின்னலாய் வந்திறங்கினாலும்,
ஏனோ
உன் சீண்டல்கள் மட்டும்
சிறிதும் தூண்டவில்லை
இம்மென்ற கணத்திலும்
வெடிக்கும் சாத்தியக்கூறுகள்
கொண்டிருந்த
என் எரிமலையை!

அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விட்டன!

உனக்கான ஆயிரம் பதில்களுடன்
அலைகின்றேன் நான்,
சிறிதாகிலும் விலகத்தொடங்கிய
நம்மிடையேயான திரையின்
இடைவெளிக்குள்
சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!

17 comments:

G3 said...

enakku idha vida neenga draftla onnu kaamcheengalae adhuvae romba pudichirundhudhu :)

Arunkumar said...

//
உனக்கான ஆயிரம் பதில்களுடன்
அலைகின்றேன் நான்,
சிறிதாகிலும் விலகத்தொடங்கிய
நம்மிடையேயான திரையின்
இடைவெளிக்குள்
சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!
//
சூப்பர்

Dreamzz said...

//நம் தொலைப்பேசி
உரையாடல்களில்
உண்மையின் பின் ஒளிந்துக்கொண்டு
ஓடி விளையாடின சொற்கள்
என்றாவது சந்திக்கும் போது
எங்குச் சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்!
//
நீங்க மட்டும் எப்படி இப்படி நிஜம் மாதிரி கவிதையா எழுதறீங்க!

Dreamzz said...

//நம் தொலைப்பேசி
உரையாடல்களில்
உண்மையின் பின் ஒளிந்துக்கொண்டு
ஓடி விளையாடின சொற்கள்
என்றாவது சந்திக்கும் போது
எங்குச் சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்!
//
சூப்பர்!

Dreamzz said...

கவிதை முடிவும் அருமை!

Dreamzz said...

சீக்கிரம் கேளுங்கப்பா!

நந்தா said...

//அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விட்டன!//

இதற்குப் பேருதான் வெட்கமோ???

இது ஒரு அருமையான ஃபீலிங். புரிந்து கொள்ள முடிகிறது.

கலக்கலா வந்திருக்குங்க வேதா. கடைசி வரிகள் லக்ஷ்மி சமீபத்தில் எழுதிய கவிதையை ஞாபகப் படுத்துகின்றன.

வேதா said...

@காயத்ரி,
ஹும் அது எனக்கு அவ்ளோ திருப்தி தரல அதான் கொஞ்சம் மாத்திட்டேன் :)

@அருண்,
ஹிஹி உங்களுக்கு கவிதை புரிஞ்சுடுச்சா?:) நன்றி :)

@ட்ரீம்ஸ்,
/நீங்க மட்டும் எப்படி இப்படி நிஜம் மாதிரி கவிதையா எழுதறீங்க!/
ஆகா இப்டி உள்குத்து வச்சே கேள்வி கேட்கறீங்களே :)
நன்றி :)

/சீக்கிரம் கேளுங்கப்பா! /
ஹிஹி விவிசி :):)

@நந்தா,
/இதற்குப் பேருதான் வெட்கமோ???/
தயக்கம் என்று கூட சொல்லலாம் :)

/இது ஒரு அருமையான ஃபீலிங். புரிந்து கொள்ள முடிகிறது./
நன்றி நந்தா :)


/கலக்கலா வந்திருக்குங்க வேதா. கடைசி வரிகள் லக்ஷ்மி சமீபத்தில் எழுதிய கவிதையை ஞாபகப் படுத்துகின்றன. /
அப்டியா? நான் அவங்க கவிதைகள் படிச்சதில்லையே:)

சரவணா..! said...

என்றாவது சந்திக்கும் போது
(நாம் ! )எங்கு சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்

உண்மை பொதிந்த வரிகள்

சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!

வார்த்தைகள் அருமை.

கீதா சாம்பசிவம் said...

யாருங்க அது? கேட்டுட்டேன் உங்களுக்கான கேள்வியை! :))))))))))))

அருமையான கவிதை நடை, எளிமையான சொல்லாடல்! திருப்பதி போனதும் வந்த கவிதையா இது? பக்திக் கவிதையா இருக்குமோன்னு நினைச்சேன்! :))))

Manasa said...

Arputhamaana kavithai ...
Kadaisi varikaL manathai rompavae baathithu vittathu :)

உனக்கான ஆயிரம் பதில்களுடன்
அலைகின்றேன் நான்,
சிறிதாகிலும் விலகத்தொடங்கிய
நம்மிடையேயான திரையின்
இடைவெளிக்குள்
சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!
//

Anonymous said...

மழையென வார்த்தைகளுடன்
சில பல சீண்டல்கள்
மின்னலாய் வந்திறங்கினாலும்,
ஏனோ
உன் சீண்டல்கள் மட்டும்
சிறிதும் தூண்டவில்லை
இம்மென்ற கணத்திலும்
வெடிக்கும் சாத்தியக்கூறுகள்
கொண்டிருந்த
என் எரிமலையை!


Vetha, engayo poiteenga! Athanaiyum arumai.

வேதா said...

@சரவணா, கீதா,
ரொம்ப தாமதமாக நன்றி சொல்கிறேன் :)
நன்றி :)

@மானஸா,
ரொம்ப நன்றி :)
நீங்க என்ன அதுக்கப்புறம் எந்த பதிவும் போடவேயில்ல?

@ரனிஷா,
யாரும் கவனிக்காத வரிகளை சரியா பார்த்துருக்கீங்க நான் ரொம்ப அனுபவிச்ச எழுதின வரிகள் இவை தான் :)
நன்றி :)

Viji said...

WOW! You are really talented veda(lam)... kallakkittinga! :)

LakshmanaRaja said...

//ஓடி விளையாடின சொற்கள்
என்றாவது சந்திக்கும் போது
எங்குச் சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்!
//

//நம்மை மேடையேற்றி
கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றன
ஒரு சாட்சியாக!//

//இமைகள் துடிக்கும் பொழுதினிலும்
மறையாத என் கர்வம்
///
//சிறிதும் தூண்டவில்லை
இம்மென்ற கணத்திலும்
வெடிக்கும் சாத்தியக்கூறுகள்
கொண்டிருந்த
என் எரிமலையை!//

//இடைவெளிக்குள்
சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!//


முழு கவிதையும் அருமை. மேல் சொன்ன வரிகளில் கவித்துவம் நிறம்பிஉளது..

வேதா said...

@விஜி,
நன்றிம்மா :)

@lakshmanraja,
முதல் தடவை வர்ரீங்கன்னு நினைக்கறேன், நன்றி :)

Anonymous said...

This poem is dedicated to Guna