
கருமை படர்ந்த இரவொன்றில்
கனவுகள் சூழ்ந்த
என் காத்திருப்பின் வரமாய்,
விழிகள் நோக்கி
நீ செலுத்திய மெளனங்கள்
வந்தமர்ந்தன
வெற்றுத்தாளாய் படபடத்த
என் இதயப்புத்தகத்தில்;
விழிகளின் மொழி விளங்காமல்
பேச வந்த உன் நேசம்
திக்குத்தெரியாமல்
தொலைந்துப்போனது
என்னுள்;
மெளனமாய் நீ எழுதிய
நேசக்கவிதையை
நான் வாசித்ததறியாமல்
மெல்ல பின்னடைந்தாய்
இரவின் நிழலுள்;
நேசத்தின் பூரணத்தில் கரைந்து
என்னையும் இழுத்துக்கொண்ட
நீ,
அறியாமல் இருந்துவிட்டாய்
உன் உயிரினில்
என்றோ ஏகிய
என் இருப்பை;
சூலடைந்த நேசத்தின்
வலி தாங்காமல்
கதறிய உன் மனம்
அறியாமல் இருந்து விட்டது,
நேசத்தை சுமந்தது
நானும் தான் என்று!
மறைத்த வார்த்தைகளை
உடனழைத்து நீ மறைந்தாலும்
நிசப்தமுற்ற இரவுகளின்
நீண்ட நீழல்களுள்
நித்தமும் தேடிச்செல்கிறேன் உனை;
வழிதோறும் மணம்பரப்பி
முகிழ்ந்துக்கிடக்கின்றன
சொல்லாமல் மறைத்த
எனக்கான நேச சொற்கள்,
விழிநீரை பனித்துளியாய் தாங்கி!
மொத்தமாய் அள்ளியெடுத்து
தொடுத்துவைத்த
உனக்கான பூச்சரத்தை
கையிலேந்தி
காத்திருக்கிறேன்,
இன்னும் இரவு மிச்சமிருக்கிறது,
கனவுகள் இனியும் வரக்கூடும்,
கிழக்கில் எனக்கான கிரணங்களை சுமந்தபடி!

16 comments:
அற்புதம். கலக்கிட்டீங்க.
இன்னும் நிறைய எழுதுங்க.
நன்றி பொற்கொடி தொடர்ந்து வருகை தாருங்கள் :)
//வழிதோறும் மணம்பரப்பி
முகிழ்ந்துக்கிடக்கின்றன
சொல்லாமல் மறைத்த
எனக்கான நேச சொற்கள்,
விழிநீரை பனித்துளியாய் தாங்கி!
//
Guru asathi puteenga.. this is my fav :)
//மறைத்த வார்த்தைகளை
உடனழைத்து நீ மறைந்தாலும்
நிசப்தமுற்ற இரவுகளின்
நீண்ட நீழல்களுள்
நித்தமும் தேடிச்செல்கிறேன் உனை;
//
கவித கலக்கல்ஸ்!
//இன்னும் இரவு மிச்சமிருக்கிறது,
கனவுகள் இனியும் வரக்கூடும்,
கிழக்கில் எனக்கான கிரணங்களை சுமந்தபடி//
சூப்பர்ர்!
@காயத்ரி,ட்ரீம்ஸ்,
நன்றி :)
ரிப்பீட்டு!
அருமையான கவிதை, நல்லா வ்ருது, ஆனால் குடத்து விளக்காய் இருக்கீங்களேன்னு நினைச்சால் வருத்தம் வருது!
மறுபடி மறுபடி வாழ்த்துக்கள்!
padichen.. comment podra alavukku namakku kavidai nyanam illa.. adhaan vedikkai mattum paakuren.
guru...enna solradhunu theriyala...idhu varaikum neenga ezhudhinadhula idhu sema super-a iruku...eppadi padikum podhum kidaikum santhosatha solradhunu theriyala...
ennaikaachum oru naal idhu maadhiri oru kavidhai ezhudhanum....mostly adhu dhaan ennoda kadaisi kavidhaya irukum....
//idhu varaikum neenga ezhudhinadhula idhu sema super-a iruku...//
Repeatu.. varthaikallaam super-a use panni irukeenga.. vaazthukkal..
மொத்தமாய் அள்ளியெடுத்து
தொடுத்துவைத்த
உனக்கான பூச்சரத்தை
கையிலேந்தி
காத்திருக்கிறேன்,
இன்னும் இரவு மிச்சமிருக்கிறது,
கனவுகள் இனியும் வரக்கூடும்,
கிழக்கில் எனக்கான கிரணங்களை சுமந்தபடி
இது உள்மனத்தில் வெளிப்பாடா எப்படி இருந்தாலும் அருமையான கவிதை வேதா...
@கீதா,
நன்றி உங்க வார்த்தைகளுக்கு :)
@பரணி,
என்ன இப்டி சொல்ட? நீயெல்லாம் நிறைய எழுதணும் இதெல்லாம் ஒன்னுமே இல்ல :)
@ஏஸ்,
ரொம்ப நன்றிங்க :)
@திராச,
ஹிஹி நீங்க வேற புதுசா ஏதாவது கிளப்பி விடாதீங்க :)
நன்றி :)
arumai
//கருமை படர்ந்த இரவொன்றில்
கனவுகள் சூழ்ந்த
என் காத்திருப்பின் வரமாய்,
விழிகள் நோக்கி
நீ செலுத்திய மெளனங்கள்
வந்தமர்ந்தன
வெற்றுத்தாளாய் படபடத்த
என் இதயப்புத்தகத்தில்;//
//விழிகளின் மொழி விளங்காமல்
பேச வந்த உன் நேசம்
திக்குத்தெரியாமல்
தொலைந்துப்போனது
என்னுள்;//
//மறைத்த வார்த்தைகளை
உடனழைத்து நீ மறைந்தாலும்
நிசப்தமுற்ற இரவுகளின்
நீண்ட நீழல்களுள்
நித்தமும் தேடிச்செல்கிறேன் உனை;//
அருமை.மிக அருமை.
Post a Comment