Wednesday 25 July 2007

காத்திருப்பின் அவசியமற்று...





























தனிமையில்
தவங்கிடக்கிறது
என் கவிதை
இது வரை வரையப்படாத
வார்த்தைகள் வேண்டி!

காத்திருப்பின் இடைவெளியில்
மெல்ல எட்டிப்பார்க்கிறது
மறைந்திருந்த என் சோகம்

எட்டிப்பார்த்த சோகமோ
விட்டுச்சென்றது
கனமான விழித்துளிகளை

கண்ணீர் சொல்லாத காவியத்தையா
செதுக்கப்போகின்றது வார்த்தைகள்?

காத்திருப்பின் அவசியமற்று
கலைந்துப்போனது
என் கவிதை
கண்ணீர் திவலைகளின்
சுவடுகள் வரைந்து!

14 comments:

Anonymous said...

vanten!

-kodi

Anonymous said...

ennathuku soga kavidhai :-( vaazhkaila irukra sogam pathaadhunu kavidhailayuma...! nalla irukku unga vaarthai jaalam :-)

-kodi

Bharani said...

guru....thirumba thirumba sonnalum.....unga kavidhaya adichika yaarum illa....super-a ezhudhareenga :)

Bharani said...

//காத்திருப்பின் இடைவெளியில்
மெல்ல எட்டிப்பார்க்கிறது
மறைந்திருந்த என் சோகம்
//....superb...real-a nadakaradhu dhaane idhu....

Bharani said...

//கண்ணீர் சொல்லாத காவியத்தையா
செதுக்கப்போகின்றது வார்த்தைகள்?//.....adhaane....lakhsham vaarthagalaal solla mudiyaadha unarvugalai....oru thuli kanner sollividugiradhu....

Bharani said...

//என் கவிதை
கண்ணீர் திவலைகளின்
சுவடுகள் வரைந்து//.....kavidhai pirapadan kaaraname idhu dhaane guru....asathal....

Bharani said...

thirumbhavum solren...naan kudutha pattam sema apt :)

கீதா சாம்பசிவம் said...

தனிமையை உணர வைத்த வரிகள்? விளம்பரம் எல்லாம் கொடுத்துமா "குண்டர் படை" சீச்சீ, தொண்டர் படை வந்து கலக்கலை? ஆச்சரியமா இருக்கே?

Dreamzz said...

அருமையான கவிதை!

Dreamzz said...

நான் தான் பர்ஸ்டா?

சிங்கம்லே ACE !! said...

arumayana kavithai veda.. Vazthukkaal..

வேதா said...

@கேடி,
/vaazhkaila irukra sogam pathaadhunu kavidhailayuma...!/
ஏன் சோகம் எதுக்கு சோகம்? என் கவிதை சோகம் உன்னை தாக்கிடுச்சுன்னா என்னை மன்னிச்சுடு :)

@பரணி,
/....superb...real-a nadakaradhu dhaane idhu..../
உண்மை இங்கே எட்டிப்பார்க்கிறதே :)

/kavidhai pirapadan kaaraname idhu dhaane guru....asathal.... /
நன்றி சிஷ்யா :)

@கீதா,
தனிமையில் வளர்ந்த கவிதைன்னு சொல்லலாம் :)

@ட்ரீம்ஸ்,
நன்றி தத்துவ ஞானியே :)

@ஏஸ்,
வாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சு வரீங்க :) பாராட்டுக்கு நன்றி :)

Arunkumar said...

இது போன கவிதைல..
//
சுகமாய்
தூங்கிக்கொண்டிருந்த
உண்மைகள்
மெல்ல எட்டிப்பார்க்க,
//

இது இந்த கவிதைல..

//
காத்திருப்பின் இடைவெளியில்
மெல்ல எட்டிப்பார்க்கிறது
மறைந்திருந்த என் சோகம்
//

சோகம் எட்டிப்பாக்குதோ உண்மை எட்டிப்பாக்குதோ, உங்க
கவிதை மட்டும் எட்டிப்பிடிக்க முடியாத எடத்துல இருக்கு.
வார்த்தை அவளோ வெளையாடுது.. ரெண்டு கவிதையுமே
ரொம்ப ரசிச்சேன்...

ரசிகன் said...

வாழ்த்துக்கள்... கவிதை அருமையா இருக்கு:)