Thursday 28 June 2007

முடிவில்லா பயணப்பாதையில்!












விழிகள் மூடி
மெளனித்திருந்த வேளையில்
விரிந்தன காட்சிகள்
மெல்ல ஒரு ரகசியமாய்.

ரகசியங்கள்
விரியத் தொடங்கிய கணத்தில்
உள்ளுக்குள் சுகமாய்
தூங்கிக்கொண்டிருந்த
உண்மைகள்
மெல்ல எட்டிப்பார்க்க,
கனம் தாங்காமல் விழிகள்
வழிய விட்டன
கண்ணீர் துளிகளை.

துளிகளுக்குள் பொதிந்திருக்கும்
உண்மையும் அறியுமோ?
அது புதைக்கப்பட்டதின் ரகசியத்தை!

ரகசியங்களின் ஆழத்திலும்
கிடைக்காத ஒன்றை
தேடிக்கொண்டு பயணிக்கினறன
என் கண்ணீர்துளிகள்
முடிவில்லா பயணப்பாதையில்!

14 comments:

நாகை சிவா said...

என்ன சொல்ல வறீங்க?

:-(((((

ரொம்ப பீல் பண்ணுறீங்க என்று மட்டும் தெரியுது...

நாகை சிவா said...

ஒரு வேளை அதா இருக்குமோ....

உங்களுக்குள இப்படி ஒரு சோகம் இருப்பது இது வரை எனக்கு தெரியாம போச்சே...

வேதா said...

@சிவா,
/இப்படி ஒரு சோகம் இருப்பது இது வரை எனக்கு தெரியாம போச்சே.../

தெரிஞ்சு என்னப்போறீங்க ? :)

G3 said...

Neenga dhaaralama maar thattikkalaam.. neengalum kavithaayininnu.. enna indha kavidhai enakku suthama puriyala ;)

Dreamzz said...

//விழிகள் மூடி
மெளனித்திருந்த வேளையில்
விரிந்தன காட்சிகள்
மெல்ல ஒரு ரகசியமாய்.
//
அழகு!

Dreamzz said...

//ரகசியங்களின் ஆழத்திலும்
கிடைக்காத ஒன்றை
தேடிக்கொண்டு பயணிக்கினறன
என் கண்ணீர்துளிகள்
முடிவில்லா பயணப்பாதையில்!
//

//கனம் தாங்காமல் விழிகள்
வழிய விட்டன
கண்ணீர் துளிகளை.
//

அருமையான கவித! சூப்பர்!

வேதா said...

@ஜி3,
உன் கவுஜக்கு முன்னாடி இதெல்லாம் தூசு கண்ணா அதான் உனக்கு புரியல ;)

@ட்ரீம்ஸ்,
நல்ல வேளை நீங்களாவது புரிஞ்சுக்கிட்டீங்களே :)

G3 said...

// உன் கவுஜக்கு முன்னாடி இதெல்லாம் தூசு கண்ணா அதான் உனக்கு புரியல ;)//

இருந்தாலும் நீ என்ன இவ்ளோ அசிங்கமா திட்டி இருக்க வேண்டாம் :-((

வேதா said...

சரி இனிமே கொஞ்சம் டீஜண்டா திட்றேன் ஜி3:)

Anonymous said...

Good

Kittu said...

vedha..superaa irundhudhu..kavidhai nadai ellam nijamaavae kavidhai maadhiri irundhadhu..

வேதா said...

@அனானி,
நன்றி உங்க பேரை சொல்லிட்டு போயிருக்கலாமே :)

@கிட்டு,
அண்ணே வாங்கண்ணே முதல்முதல்ல வரீங்க :)

/kavidhai nadai ellam nijamaavae kavidhai maadhiri irundhadhu.. /

இதுல ஏதும் உள்குத்து இல்லையே?:)

கீதா சாம்பசிவம் said...

இதுக்குக் கொடுத்த கமென்ட்ஸ் எங்கே? காணோம்?

ரசிகன் said...

வாழ்த்துக்கள்...கவிதை கலக்கலா இருக்குங்க:)...