Wednesday, 20 June, 2007

எதுவும் சொல்லி விடாதே !


சோம்பல் முறித்த என் வார்த்தைகள்
நிமிர்ந்து எழுந்தன,
உன்னை பற்றி நான் எழுதும் கணங்களில்;

உனக்கான என் நேசத்தின் வார்த்தைகளை,
எழுத, எழுத,
அட!
எழுத்துக்களுக்கு கூட நாணம் வந்து விட்டது
என் பெண்மையைப் போல;

நிரம்பவும் யோசித்து,
வார்த்தைகளை யாசித்து,
நாணத்தில் தோய்த்து,
நான் எழுதியதை விடவும்
அதி வேகமாய்,
அதி ஆழமாய்,
என் விழிகளே சொல்லிவிட்டனவே,
உனக்கான என் தவிப்பை!

இது புரியாமல் நான் எழுதியதில்
நீ இன்னுமா தேடுகிறாய்
நேசத்தின் வார்த்தைகளை?

இனியவனே!
ஒவ்வொரு காதலிலும்
சொல்லாத வார்த்தைகளில் தான்
சொல்லப்படுகின்றது நேசம்;
எனவே,
எதுவும் சொல்லி விடாதே!

24 comments:

G3 said...

aaha.. enakku pottiya neengalum vandhuteengala ennavan kavidhaiyaa poda? asathunga.. padikkara makkal paavam.. yaaradhunnu kelvi kettae nondhu poga porranga :P

ஜி said...

Firstaa.. irunga paditchuttu varren :))

ஜி said...

//எனவே,
எதுவும் சொல்லி விடாதே!//

சூப்பர் வேதா... ஓடிக்கிட்டே யோசிப்பீங்களோ?? (உக்காந்து யோசிக்கிறது பழைய டையலாக் ஆகிப் போச்சு...)

உங்கக்கிட்டத்தான் டியுசன் படிக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லுறீங்க??

நாகை சிவா said...

ஹய்யோ ஹய்யோ எப்படி எல்லாம் பீல் பண்ணுறாங்கய்யா...

என்னத்த சொல்ல... நல்லா இருந்தா சரி தான்....

நாகை சிவா said...

எதுவும் சொல்லாதே என்பதை சொல்லவே இம்மாம் பீலிங்கா இருந்தா சொல்ல சொல்வதற்கு எம்மாம் பெரிய பீலிங்கா இருக்கும்...

G3 said...

//எதுவும் சொல்லி விடாதே//

Veda unga kitta oru kostin.. solladha kaadhal selladhungaraangalae.. adhai patri thangal karuthu ennavo??

வேதா said...

@காயத்ரி,
உனக்கு முன்னாடியே இப்டி எழுத ஆரம்பிச்சுட்டேன் ஜி3, இப்ப தான் எல்லாருக்கும் தெரிய வருது அதான் மேட்டர் :)

@ஜி3,
ஹும் படுத்துக்கிட்டே யோசிச்சேன்(நெசமாலுமே தான் சொல்றேன்).
ட்யூஷனா? பீஸ் எவ்ளோன்னு தனியா மயில் அனுப்பி விசாரிச்சக்கோங்க:) இதெல்லாம் ஓவரா இல்ல ஜி, நீங்க எழுதறத விடவா நான் எழுதிட்டேன்? :)

@சிவா,
/அய்யோ ஹய்யோ எப்படி எல்லாம் பீல் பண்ணுறாங்கய்யா.../

ஆமா பீல் தான் பண்றோம் அதுக்கு நீங்க ஏன் இவ்ளோ பீலிங்?:)

/சொல்ல சொல்வதற்கு எம்மாம் பெரிய பீலிங்கா இருக்கும்... /
வெரி குட் அடுத்த கவிதைக்கு ஐடியா கொடுத்துட்டீங்க புலி:)

வேதா said...

ஆமா காயத்ரி சொல்லாத காதல் செல்லாது தான். அதாவது கடைசி வரை நம் மனதிலிருந்து வெளியில் செல்லாது:)

G3 said...

//அதாவது கடைசி வரை நம் மனதிலிருந்து வெளியில் செல்லாது:) //

Adra... adra.. orey stmtla century adikkaradhu na idhu dhaana? Super..

சிங்கம்லே ACE !! said...

//எனவே,
எதுவும் சொல்லி விடாதே!//

நச்சுனு முடிச்சிருக்கீங்க.. சூப்பர் கவிதை

சிங்கம்லே ACE !! said...

//அதி வேகமாய்,
அதி ஆழமாய்,//

"அதி" ரிப்பீட் அடிச்சிட்டீங்க.. மிக ஆழமாய்??

Bharani said...

superb one guru....unga permission-oda indha kavidhaya konja maathi....thevai padum podhu use pannikaren :)

Bharani said...

//ஒவ்வொரு காதலிலும்
சொல்லாத வார்த்தைகளில் தான்
சொல்லப்படுகின்றது நேசம்//....wow....my fav lines....innama ezhadhareenga....yaarupa adhu aarudhal parisu kuduthadhu....first prize-a kudungappa...

வேதா said...

@காயத்ரி ,
ஹிஹி தேங்க்ஸ் :)

@ஏஸ்,
/நச்சுனு முடிச்சிருக்கீங்க.. சூப்பர் கவிதை /

நன்றி :)

/"அதி" ரிப்பீட் அடிச்சிட்டீங்க.. மிக ஆழமாய்??/
எல்லாம் ஒரு பில்டப் தான் :)

@பரணி,
u/nga permission-oda indha kavidhaya konja maathi....thevai padum podhu use pannikaren :) /

சிஷ்யா உனக்கில்லாத உரிமையா? :)

/yaarupa adhu aarudhal parisu kuduthadhu....first prize-a kudungappa.../
வேண்டாம் அப்புறம் முதல் பரிசு வாங்கினவங்க வந்து என்ன மொத்திடுவாங்க :) ஏனிந்த கொல வெறி பரணி? :)

manipayal said...

இருவிழி கவிதை தினசரி படித்தேன்
பொருளதை அறிய வழியேதும் இல்லை
புது புது வார்த்தை தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடித்தாள்

இது டி.ராஜேந்தர் எழுதிய - "மூங்கிலிலே பாட்டிசைக்கும்" பாடலில் சில வரிகள்
உங்கள் கவிதை இந்த வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. காதலும் ஏக்கமும் சொட்ட சொட்ட எஸ்.பி.பி பொழிந்த ஒரு அமுத மழை.

கவிதை அருமை.வாழ்த்துக்கள்

saravansivan said...

azhagazhaga ezhudhreenga vedha..vazhthukkal..

Dreamzz said...

கவிதை அசத்தல்!

Dreamzz said...

//இனியவனே!
ஒவ்வொரு காதலிலும்
சொல்லாத வார்த்தைகளில் தான்
சொல்லப்படுகின்றது நேசம்;
எனவே,
எதுவும் சொல்லி விடாதே! //

இது டாப்!

அதே மாதிரி ஆரம்பித்த இரு வரிகள் சூப்பர்!

Known Stranger said...

hi
supera kavithai eluthuringa..keep it up
TC

Raji said...

Supernga Veda :-)

Raji said...

@ji
//உங்கக்கிட்டத்தான் டியுசன் படிக்கலாம்னு இருக்கேன்//
Ethanai paeru kitta indha dialogue adipeenga..Idhulaam kaetka aalae illyaaaaaaa

வேதா said...

@மணி,
உங்க பேரை முதல்ல படிச்சவுடன சின்ன பயலா இருப்பீங்கன்னு நினைச்சேன் :) அப்புறம் உங்க வலைப்பக்கம் போனப்புறம் தான் தெரிஞ்சுது நீங்க மணிப்பயல் இல்ல மணிஐயான்னு :)
நன்றி :)


@saravansivan,
நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள் :)

@ட்ரீம்ஸ்,
ரொம்ப நன்றி நண்பரே :)

@ராஜி,
உங்க கவிதையை படிச்சுட்டு அங்க கமெண்ட் பண்ணிட்டு வந்தேன், நீங்க வந்துட்டீங்க :)
நன்றி :)

'ஜி' இப்டி தான் ஒவ்வொரு தடவையும் சொல்லுவாரு கண்டுக்காதீங்க :)

Chandravathanaa said...

nallayirukku

LakshmanaRaja said...

//ஒவ்வொரு காதலிலும்
சொல்லாத வார்த்தைகளில் தான்
சொல்லப்படுகின்றது நேசம்;
எனவே,
எதுவும் சொல்லி விடாதே!//

அழகான வார்த்தைகள்.