Friday 18 May 2007

இருளின் கரம் பிடித்து..






















இருளின் கரம் பிடித்து
நான் எடுத்து வைத்த காலடித்தடங்கள்
ஓடத்துவங்கின
வெளிச்சம் நோக்கி;

திகைத்து நின்ற பொழுதினிலே
மெல்ல தென்றல் என் காதுகளில்
ரகசியமாய் கதைத்தது
வெளிச்சத்தின் வழித்தடத்தை;

கண்களையும் மீறி
மறைந்து இருக்கும்
ஏதோ ஒரு ஒற்றையடிப்பாதையில்
துணையோடு
காத்துக்கிடக்கின்றன
என் காலடித்தடங்கள்;

துணை சேர்ந்த களிப்பில்
என்னை எள்ளி நகையாடும்
என் காலடித்தடங்களும் அறியவில்லை,
என் மனதின் தடங்கள்
என்னவனின் இதய வாசலை
என்றோ சென்றடைந்த ரகசியத்தை;

12 comments:

சிங்கம்லே ACE !! said...

என்னங்க நீங்களூம், g3 மாதிரியே என்னவன்னு ஆரம்பிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்

சிங்கம்லே ACE !! said...

காலடிதடங்கள் தான் ஓட ஆரம்பிசிடுச்சே அப்புறமா வந்து தென்றல் வழி சொல்லுது.. முதல்லயே வந்து சொல்லி இருக்கலாம்... :D :D

சிங்கம்லே ACE !! said...

அலோ.. உங்க காலடிதடம், முதல் பத்தில ஓடுது.. ஆனா 2வது பத்தில தான் வழியே தெரியுது.. 3 வது பத்தில காத்து கிடக்குது.. வழி தெரியாம ஓடுது.. வழி தெரிஞ்சப்புறம் நிக்குது.. ஹ்ம்ம்ம்..

சும்மா தான் சொன்னேன்.. (just kidding)

மனதின் வேகத்துக்கு ஈடு எதுவுமே இலலை தான்.. கற்பனை அருமையா இருக்கு.. மீதி கவிதைகளையும் படிக்கறேன்..

Arunkumar said...

கவிதை சூப்பர் எனக்கு தான் புரியல :(

நான் கேக்க வந்தத சிங்கலம் ஏஸ் கேட்டுட்டாரு.. நீங்களாவது யாருன்னு சொல்லலாம் !!!

G3 said...

//g3 மாதிரியே //

En ace? enga ponaalum enna vambukizhukalana yaarukkum thookam varaadhu pola ;-)) NALLA IRUNGA :-)

Kavidhai super.. Asathiteenga Veda :-))

gils said...

:D g3 amriye ezthutharenga...aana purila :(

gils said...

huh i mean..athan puriala :D

மணி ப்ரகாஷ் said...

படிச்சுட்டு வரேன்....

மணி ப்ரகாஷ் said...

//.. உங்க காலடிதடம், முதல் பத்தில ஓடுது.. ஆனா 2வது பத்தில தான் வழியே தெரியுது.. 3 வது பத்தில காத்து கிடக்குது.. வழி தெரியாம ஓடுது.. வழி தெரிஞ்சப்புறம் நிக்குது//

@சிங்கம்லே

கவிதைய எல்லாம் இம்பூட்டு ஆழமா படிக்கீறீங்களே... அது எல்லாம் தப்பு....

:)))

மணி ப்ரகாஷ் said...

அழகு.

பத்திகளை கொஞ்சம் மாற்றி அமைத்து இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்குமோ.. ?!!?


//என் மனதின் தடங்கள்
என்னவனின் இதய வாசலை
என்றோ சென்றடைந்த ரகசியத்தை//


ம்ம்ம்ம்..ஓளியை விட வேகமாக செல்லகூடியதல்லவோ மனசு..

சேதுக்கரசி said...

அன்புடன் கவிதைப் போட்டியில் படக்கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள் வேதா! (அந்த உஷா நீங்கள் தானே? :-))

சேதுக்கரசி said...

அட, உங்களுக்கு இன்னொரு பரிசு! வேதா கவிதைகள் என்றால் சும்மாவா?

அன்புடன் கவிதைப் போட்டியில் இயல்கவிதைப் பிரிவின் நடுவர் "திசைகள்" ஆசிரியர் எழுத்தாளர் மாலனின் ஊக்கப் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!