Tuesday, 3 April, 2007

எங்கோ நீயும்..

அன்றொரு நாள்
என் தனிமையின் பக்கங்களை
புரட்டிக்கொண்டே வந்தேன்.
திருப்பிய பக்கங்களெல்லாம்
பறைசாற்றின
நான் அறியா உன் இருப்பை.

வானம் வெறித்து
நான் மீன்களை வியத்தபோது
காணாமல் இருந்துவிட்டேன்
ஓரத்தில் நின்று
மீன்களோடு சேர்த்து
நீ என்னை வியந்ததை.

தறிகெட்ட எண்ணங்களை
கோர்த்திழுத்து
கனம் தாங்காமல்
என் மனம் பதறுகையில்
கவனிக்க தவறிவிட்டேன்
தாங்க துடித்த
உன் தோள்களை.

விழிகளைத் தாண்ட முயன்ற
என் கவலைகளை
நீர்த்திவலைகளை
மீண்டும் புதைத்தேன்
என் விழிகளுக்குள்
துடைக்க காத்திருந்த
உன் விரல்களை அறியாமல்.

புரட்டிய பக்கங்களெல்லாம்
சொல்லியன,
என் தனிமையின் கணங்களில்
நான் மூழ்கும் போதெல்லாம்
என் விழிப்பார்வையின்
எல்லைக்கப்பால்
எங்கோ நீயும்..

22 comments:

நாகை சிவா said...

புரிந்த மாதிரியும் இருக்கு புரியாதா மாதிரியும் இருக்கு... அப்பால வந்து திறனாய்வு செய்யுறேன்....

Anonymous said...

புரிந்த மாதிரியும் இருக்கு புரியாதா மாதிரியும் இருக்கு... அப்பால வந்து திறனாய்வு செய்யுறேன்//


ripitee.........

Dreamzz said...

//அன்றொரு நாள்
என் தனிமையின் பக்கங்களை
புரட்டிக்கொண்டே வந்தேன்.
திருப்பிய பக்கங்களெல்லாம்
பறைசாற்றின
நான் அறியா உன் இருப்பை./

அட்ரா சக்கை! ஆரம்பமே கலக்கல்

Dreamzz said...

//தறிகெட்ட எண்ணங்களை
கோர்த்திழுத்து
கனம் தாங்காமல்
என் மனம் பதறுகையில்
கவனிக்க தவறிவிட்டேன்
தாங்க துடித்த
உன் தோள்களை.///

என்னென்னமோ சொல்ல தோணுது! எண்ணத்த சொல்ல!

Dreamzz said...

//விழிகளைத் தாண்ட முயன்ற
என் கவலைகளை
நீர்த்திவலைகளை
மீண்டும் புதைத்தேன்
என் விழிகளுக்குள்
துடைக்க காத்திருந்த
உன் விரல்களை அறியாமல்.//

வலியிலும் கண்டிப்பா ஒரு சுகம் இருக்குங்க வேதா.

Dreamzz said...

அருமையான கவித!

Ramesh said...

விழிகளைத் தாண்ட முயன்ற
என் கவலைகளை
நீர்த்திவலைகளை
மீண்டும் புதைத்தேன்
என் விழிகளுக்குள்
துடைக்க காத்திருந்த
உன் விரல்களை அறியாமல்.

Best of the best....

வேதா said...

@சிவா,

புரிஞ்சா அது கட்டுரை புரியாம இருந்தா தான் கவுஜ:) இனிமே தான் திறனாய்வா? அப்ப படிக்கவேயில்லையா?

@அனானி,
பேரு சொல்லிட்டு ரிபீட் பண்ண வேண்டியது தான? என்ன புரியல உங்களுக்கு?

@ட்ரீம்ஸ்,
/என்னென்னமோ சொல்ல தோணுது! எண்ணத்த சொல்ல!/
அதான் கவிதையா சொல்டீங்களே:)

@ரமேஷ்,
நன்றி:)

Bharani said...

Super guru....Padichitu, padicha kavidhai nalla irukunu solradhuku, "nalla iruku" solradha thavira edachum vaarthai iruka :)

Yenna...nalla irukunu sonna adhu edho pathoda pathinonna solra maadhiri iruke....

Bharani said...

so padithen, rasithen....indha maadhiri kavidhaigal padikum podhu dhaan ennakum ezhadhanumnu thonuthu :)

வேதா said...

/indha maadhiri kavidhaigal padikum podhu dhaan ennakum ezhadhanumnu thonuthu :) /
தோணுதா? அதான் அருமையா எழுதி கலக்குறியேப்பா அப்டியே அத மெயிண்டன் பண்ணி கவிதை போட்டி கவிதை எழுதி அனுப்பு. பரிசுக்காக மட்டுமில்ல பரணி அனுபவதுக்காக:)

காட்டாறு said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. கோர்வையா இருக்குது. தொடர்ந்து எழுதுங்க!

சேதுக்கரசி said...

அருமை வேதா...

"Anamikaa" Meyyappan said...

அருமை

Sree's Views said...

hello Veda..
Neenga romba famous..ella bloglayum unga peru paapen :)
nice kavidhai..
adhukku artham..
namakkaaga support kodukka oruthanga irundhu kooda, adha namba realise pannama varutha padarom...idhu dhaaney?
nalla irukkunga :)
indha maathiri ellam ezhudha mudiyalaiyennu oru varutham irukku .

வேதா said...

@காட்டாறு,சேதுக்கரசி,மெய்யப்பன்,
தாமதமாக பதிலளித்ததற்கு மன்னிக்கவும், தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்:)

@ஸ்ரீ,
வாங்க வாங்க உங்கள நானும் பல பக்கங்களில் பார்த்திருக்கிறேன். இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே நன்றி ஸ்ரீ:) உங்க பக்கத்திலும் நான் வந்து படித்திருக்கிறேன் ஒரு மெளன ரசிகையாய் நல்லா எழுதறீங்க ஸ்ரீ:)

மணி ப்ரகாஷ் said...

nan ithukku comment podalaiya.padichenae...


//புரட்டிய பக்கங்களெல்லாம்
சொல்லியன,
என் தனிமையின் கணங்களில்
நான் மூழ்கும் போதெல்லாம்
என் விழிப்பார்வையின்
எல்லைக்கப்பால்
எங்கோ நீயும்..//

arumai vedha..

wat to say..neriya yoicka vaikuthu...

Ravi said...

..edpi .. ipdi ellam ... ovovuru vaati varum bothu ellam ... kavidhai'la pini pedal edukareenga ..

cha .... vazhkaya ..silaru'ku rasika theriyum ..aana oru sillar'ku thaan rasichatha varthaigalal ezhuttha theriyum .. naan .. oru kavidhai ezhudanum na oru maasam yosiakanum ..

... u r gifted nu solli .. am not going to place u on luck .. its u r .. talent .. and its .. so sweet ... !!!

Usha said...

enaku purinjiduthu, yaarai appadi ignore pannina veda? ;)

வேதா said...

@ப்ரகாஷ்,
யோசிக்க வைக்குதா?:)
நன்றி :)

@உஷா,
தாயே பரதேவதை வராதவ வந்துருக்க, வந்தவுடன இப்டி பத்த வைக்கணுமா?;)

கீதா சாம்பசிவம் said...

romba nal kazhichu varen. puthusa onnum illaiyennu parththaal athe kavithai than. Pulikku kavithai ellam enge puriyum? uruma than theriyum. enakku puriyuthu. mmmmmm rombave busy pole irukku!

LakshmanaRaja said...

//நான் அறியா உன் இருப்பை//

ம்..ரொம்ப நல்லா இருக்கு.