Friday, 2 March, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி)


உளறுதல்,
என் உள்ளத்தின் வேலை மட்டுமே.
அதனால் தான்
தப்பி ஓடுகின்றன
வார்த்தைகள்
என் மொழியில் அகப்படாமல்.

வாசலை திறந்து
காத்துக்கொண்டிருந்தேன்
உன் வரவிற்காக,
உன் காலடிதடங்களையே
என் வீட்டு கோலமாக்க.

இதோ கேட்கின்றது
காலடி ஓசை
என் இதயத்துடிப்பின்
காதல் ஓசை.

முகத்தில் சிரிப்பை சுமந்து
உள்ளே நுழைந்ததும் கேட்கிறாயே
நான் எங்கே என்று.
இன்னும் தெரியவில்லையா?
நான் என்றோ
உன்னுள் நுழைந்தது.

உன்னோடு பேசுகையில்
வாயிலிருந்து வரும் வார்த்தைகள்
தடுமாறுகின்றன
வழி தெரியா
குழந்தையைப் போல்.

நீ மெல்ல
வார்த்தைகளின்
கைப்பிடித்து செல்கிறாய்
உன் இதய வாசலுக்கு.

சொல்லொண்ணா வார்த்தைகளும்
சொல்லாத ஒன்றை
சொல்லிக்கொண்டிருக்கிறது
உன் சிரிப்பு.

ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்.

38 comments:

Bharani said...

//வாசலை திறந்து
காத்துக்கொண்டிருந்தேன்
உன் வரவிற்காக,
உன் காலடிதடங்களையே
என் வீட்டு கோலமாக்க//...kalakalungo :)

//இன்னும் தெரியவில்லையா?
நான் என்றோ
உன்னுள் நுழைந்தது//...aaha..aaha..ennanu solradhu...

Bharani said...

//உன்னோடு பேசுகையில்
வாயிலிருந்து வரும் வார்த்தைகள்
தடுமாறுகின்றன
வழி தெரியா
குழந்தையைப் போல்.

நீ மெல்ல
வார்த்தைகளின்
கைப்பிடித்து செல்கிறாய்
உன் இதய வாசலுக்கு//....ennama uvamai ellam potu thakareenga...tamizh aasaan-na summavandren :)

Bharani said...

//உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்.//...idhu top :)

Bharani said...

Aduthathu yaaru continue panna poraanga....sollungappa

ஜி said...

intha topicla ezuthunavanga ellaarume scene potturukkaanga...

athe maathiri neengalum asathirukeenga

ஜி said...

intha vilayaattu kooda nalla irukkuthe... aana enakkuthaan kavithaiye vara maatenguthu :((

kathaiyaa ezuthidalaam... enna solreenga....

SKM said...

//உன் காலடிதடங்களையே
என் வீட்டு கோலமாக்க...
வார்த்தைகள்
தடுமாறுகின்றன
வழி தெரியா
குழந்தையைப் போல்.....
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்//
wow!wow!ivvalo indha speed la kavidhai ezhudha mudiyuma?superb.
yeppididhan ippdi yellam think saiveengalao? arumai Vedha.

SKM said...

aduthu yaru?
MK ,Bharani,neenga...aduthu namma Dreamzz a? illa Z a?

மு.கார்த்திகேயன் said...

ஒவ்வொரு வரிகளும் புதுமை.. அருமை வேதா..

மு.கார்த்திகேயன் said...

//தப்பி ஓடுகின்றன
வார்த்தைகள்
என் மொழியில் அகப்படாமல்//

அழகான வார்த்தை விளையாட்டு, தப்பி ஓடும் வார்த்தைகளை வைத்தே.. உங்கள் காட்டில் தமிழ் மழை வேதா

மு.கார்த்திகேயன் said...

//உன் வரவிற்காக,
உன் காலடிதடங்களையே
என் வீட்டு கோலமாக்க.
//

அவன் கண்ணன்.. உள்ளம் கவர்ந்த கள்ளன் என்பது இது தானோ வேதா

மு.கார்த்திகேயன் said...

/நீ மெல்ல
வார்த்தைகளின்
கைப்பிடித்து செல்கிறாய்
உன் இதய வாசலுக்கு.//

என்ன ஒரு சூப்பரான உவமை, வேதா

மு.கார்த்திகேயன் said...

ஓ.. இது ஒரு தொடர் கவிதையாக போகிறதே.. ரசிக்கிறேன் வேதா

Arunkumar said...

//
இதோ கேட்கின்றது
காலடி ஓசை
என் இதயத்துடிப்பின்
காதல் ஓசை.
//

சூப்பருங்க வேதா..

//
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்
//
அட அடா.. இது டாப்பு !!!

Arunkumar said...

//
aana enakkuthaan kavithaiye vara maatenguthu :((
//
ROTFL :-)
அநியாயத்துக்கு காமெடி பண்றிங்க ஜி

கல்லறை தீபம் இப்போதான் மறுபடியும் படிச்சுட்டு வந்தேன் !!!

Dreamzz said...

//முகத்தில் சிரிப்பை சுமந்து
உள்ளே நுழைந்ததும் கேட்கிறாயே
நான் எங்கே என்று.
இன்னும் தெரியவில்லையா?
நான் என்றோ
உன்னுள் நுழைந்தது.
//
நாளுக்கு நாள் உங்கள் கவிதைகள் மெருகு கூடிட்டே போகுது! இது அட்டகாசம்!

Dreamzz said...

//நீ மெல்ல
வார்த்தைகளின்
கைப்பிடித்து செல்கிறாய்
உன் இதய வாசலுக்கு/

அழகான ரசனை உங்களுக்கு! கவிதை top. வேற சொல்ல வார்த்தை இல்ல!

priya said...

Crawled thru' brani's blog.

உளறுதல்,
என் உள்ளத்தின் வேலை மட்டுமே.

-Just loved these lines coz we all feel when things make us happy.

வேதா said...

பாராட்டின அனைவருக்கும் நன்றி:) இந்த ரிலே கவிதையை யார் வேண்டுமானாலும் தொடரலாம்.

Syam said...

அட்றா சக்கை...கவிதை தொடர்ச்சி கலை கட்டுது போல.... :-)

Syam said...

//முகத்தில் சிரிப்பை சுமந்து
உள்ளே நுழைந்ததும் கேட்கிறாயே
நான் எங்கே என்று.
இன்னும் தெரியவில்லையா?
நான் என்றோ
உன்னுள் நுழைந்தது//

என்னமா யோசிக்கர போ...இதுக்கு தான் அவ்வளவு சீரியஸா உக்காந்து இருந்தியா...கவிதை டாப்பு டக்கர்...:-)

Syam said...

நெக்ஸ்ட் யாரு?

மணி ப்ரகாஷ் said...

//நெக்ஸ்ட் யாரு?//

வேற யாரு .அடியேன் தான்..


ஆனா எல்லாரும் இம்பூட்டு அழகா எழுதி இருக்காங்க, கண்ணு பட்டுடும்..அதுனா ஐயா இங்க ஆஜர்
நான் எழுத போறத கவிதைனு நினைச்சு வாசிச்சீங்க அப்படின அது கவித ..இல்லாட்டி ...அது உங்கள் சாய்ஸ்...

மணி ப்ரகாஷ் said...

கவித ய எழுதிட்டு வந்து இங்க கமெண்டுரேன்...

மணி ப்ரகாஷ் said...

//இந்த ரிலே கவிதையை யார் வேண்டுமானாலும் தொடரலாம்//

தொடர்ந்தாச்சு...

//http://mani-vilas.blogspot.com/2007/03/blog-post.html///

கவித மாதிரினு நினைச்சு படிக்க சொல்லுங்க து.முதல்வரே...

மணி ப்ரகாஷ் said...

இப்பத்தான் பார்த்தேன். கவிதைய படிச்சுட்டு ஒரு பதிவ போட்டுடு இங்க வந்துட்டேன்..

(நிதியமைச்சரே கோவிச்சுகாதீங்க இந்த வந்துடுரேன் உங்க பக்கத்துக்கும்)

மணி ப்ரகாஷ் said...

//
உளறுதல்,
என் உள்ளத்தின் வேலை மட்டுமே
அதனால் தான்
தப்பி ஓடுகின்றன
வார்த்தைகள்
என் மொழியில் அகப்படாமல்//

வண்டிய ஸ்டார்ட் பன்னின உடனே டாப் கியரா..

கலக்குங்க வேதா..
//உன் காலடிதடங்களையே
என் வீட்டு கோலமாக்க//


கோலத்த போட்டாச்சு.ரோட்டுல நடக்கலாமா..

இல்ல து,முதல்வர் வேற நீங்க புதுசா எதாச்சும் சட்டம் ????????

ambi said...

superrrrrrrrrr! oru krishnar padam pottu irunthaa innum superra irukkum instead of that eye.

sokkaa intha neram paarthu namakuu paat ezhutha varala paatu ezhutha varala! :)

ஜி said...

//Arunkumar said...
ROTFL :-)
அநியாயத்துக்கு காமெடி பண்றிங்க ஜி

கல்லறை தீபம் இப்போதான் மறுபடியும் படிச்சுட்டு வந்தேன் !!! //

நான் சொன்னது காதல் கவிதை அருண்.... :))))

வேதா said...

@ச்யாம்,
/என்னமா யோசிக்கர போ...இதுக்கு தான் அவ்வளவு சீரியஸா உக்காந்து இருந்தியா...கவிதை டாப்பு டக்கர்...:-) /
ஹிஹி அதுக்கு முன்னாடியே இதை எழுதிட்டேன்:)

/நெக்ஸ்ட் யாரு?/

வேற யாரு நம்ம காலண்டர் கவிஞர் தான்:)

வேதா said...

@ப்ரகாஷ்,
என்ன கவிஞரே இப்டி சொல்றீங்க என்ன தான் எழுதினாலும் உங்க ரேஞ்சுக்கு நம்மளால வர முடியல:)
இதோ இப்பவே போய் படிக்கறேன்:)

/கோலத்த போட்டாச்சு.ரோட்டுல நடக்கலாமா../
இது ரோட்டில் போட்ட கோலமல்ல என் மனதில் போட்டது:)

@அம்பி,
அட யாருப்பா இது? என்ன கவிதை பக்கமெல்லாம் வந்துக்கிட்டு? அதுவும் பாராட்டு வேற இது தான் எட்டாவது அதிசயமோ?:)

@ஜி,
காதல் கவிதை எழுதி என்ன பிரயோஜனம் ஜி? உங்கள மாதிரி சமூக கவிதைகள் எழுதணும், அதை தான் நம்ம அருணும் சொல்றார்:)

Priya said...

kalakkalo kalakkal Veda. Quote panna mudiyadhu. ovvoru variyum arumai.

கீதா சாம்பசிவம் said...

கொஞ்சம் நிதானமா வந்து படிக்கிறேன். கூட்டமா இருந்தது முதல்லே. அதான். வார்த்தைகள் வெகு அழகாக பொருட்செறிவுடன் வந்திருக்கிறது.
"உன் காலடித் தடங்களையே
என் வீட்டுக் கோலமாக்க" சிம்ப்ளி சூபர்ப்! வாழ்த்துக்கள்.

Ram said...

Hey, superb.!! 'uvamai' 'uvamaanangal' sooper.

தி. ரா. ச.(T.R.C.) said...

நீங்கள் எப்போதெல்லாம் கவிதை ஜன்னலை திறக்கிறீர்களோ அப்போதெல்லாம் மனம் லேசகிறது. ஜன்னலை மூடினால் மன்மும் மூடிவிடுகிறது. வாழ்த்துக்கள்.

சுப.செந்தில் said...

அதெப்படி தொடர் உளறலில் கூட உங்கள் எல்லோரின் மனமும் காதலைப் பற்றி மட்டும் உளறுகின்றது
:-)

Ravi said...

//முகத்தில் சிரிப்பை சுமந்து
உள்ளே நுழைந்ததும் கேட்கிறாயே
நான் எங்கே என்று.
இன்னும் தெரியவில்லையா?
நான் என்றோ
உன்னுள் நுழைந்தது.//

WOW .. manathai purintha (of course pisaintha !!) vaarthaigal ....

athu seri .. naan epdi ipdi kavidhai ezhudarathu .. suttu pottalum .. (tamizh cinema maathiri kaadhalicha kuda varathu pola irukae ... LOL !!!)

ராஜி said...

Really superb...

Ahaha unga kavidhai yellam paarthurundha naan poturukkavae maataen...
Avasara pattu unga pakkam yellam varama pottutaenoo?