Thursday 15 February 2007

உன்னில் நுழைய..





















சேமித்து வைத்த மெளனங்கள்,
என்னை கேலி செய்ய,
நான் தாளை எடுத்தேன்,
என் நேசத்தை வார்த்தைகளாய் பிரசவிக்க;

எழுதிய வார்த்தைகளை விடவும்,
எழுதப்படா மெளனங்கள் அதிகரிக்க,
அவற்றை கோர்த்து மாலையிட்டேன்,
உன் நிழலுக்கு.

உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை;

வானத்து சூரியனாய்
நீ இருக்க,
சுட்டெரித்தாலும்
நிழல் தேடா உயிராய் நான்;

உன் நினைவுகள் என்னை எரித்து,
பிடிசாம்பலாய் மாறினாலும் காத்திருப்பேன்,
காற்றோடு கலந்து,
உன் சுவாசமாய்
உன்னில் நுழைய..

19 comments:

மணி ப்ரகாஷ் said...

first?

a ..

muthala?

ஜி said...

ம்ம்ம்ம்....

பன மரத்துல வௌவாளா வேதாவுக்கு சவாலா?

அருமையா எழுதியிருக்கீங்க...

எப்படித்தான் இப்படி உருகி உருகி காதல எழுத்துல படைக்கிறீங்களோ????

மு.கார்த்திகேயன் said...

அருமை அருமை வேதா.. ஒவ்வொரு வரியும் காதல் மையினால் தோய்த்து எழுதப்பட்டிருக்கிறது..

//உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை//


எனக்கு தெரிந்தவரை, காதலை உண்டோரை விட, காதலை எட்டி நின்று ரசித்தோருக்கே கவிதைகள் பிரவாகம் எடுக்கிறது போல, இப்படி தேன் ஆற்றாய்..

அன்பர்கள் தின வாழ்த்துக்கள் வேதா!

பொற்கொடி said...

kaadhal kavidhaiya?? ippodaikku aajar guruve!

Bharani said...

கலக்கறீங்க ஆசானே :)

//எழுதிய வார்த்தைகளை விடவும்,
எழுதப்படா மெளனங்கள் அதிகரிக்க//...பின்னி பெடலெடுக்கறதுன்னா இதுதானா :)

Bharani said...

//காத்திருப்பேன்,
காற்றோடு கலந்து,
உன் சுவாசமாய்
உன்னில் நுழைய//....சூப்பர்...and my fav lines :)

Dreamzz said...

இந்த கவித சூப்பர் அழகான வரிகள்

கவிதல அழகா flow இருக்கு...

Dreamzz said...

//சேமித்து வைத்த மெளனங்கள்,
என்னை கேலி செய்ய,
நான் தாளை எடுத்தேன்,
என் நேசத்தை வார்த்தைகளாய் பிரசவிக்க;
//
ஆரம்பம் அட்டகாசம்

Dreamzz said...

//வானத்து சூரியனாய்
நீ இருக்க,
சுட்டெரித்தாலும்
நிழல் தேடா உயிராய் நான்;

உன் நினைவுகள் என்னை எரித்து,
பிடிசாம்பலாய் மாறினாலும் காத்திருப்பேன்,
காற்றோடு கலந்து,
உன் சுவாசமாய்
உன்னில் நுழைய.. //

அவ்ளொ அழகான கவித! காதலர் தினத்தில் நான் படித்ததில் இதுவே முதல் இடம்.. எனக்கு!

முடிவு.. உணர்ச்சி குவியல்!

வேதா said...

@ப்ரகாஷ்,
ஆமா நீங்க தான் பஸ்டு:)

@ஜி,
நீங்க அருமையா கதை எழுதலையா? அது மாதிரி தான்:)

@கார்த்தி,
/காதல் மையினால் தோய்த்து எழுதப்பட்டிருக்கிறது.. /

என்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி உவமை சொல்ல முடியுமா தலைவரே:)

/காதலை எட்டி நின்று ரசித்தோருக்கே கவிதைகள் பிரவாகம் எடுக்கிறது போல, இப்படி தேன் ஆற்றாய்../

சரியா சொன்னீங்க கார்த்திக், வெயிலில் நிற்பவருக்கு தான் தெரியும் நிழலின் அருமை:)

/அன்பர்கள் தின வாழ்த்துக்கள் வேதா!/
நன்றி தலைவரே உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)

வேதா said...

@பொற்கொடி,
வருகை பதிவு செய்யப்பட்டது:)

@பரணி,
/கலக்கறீங்க ஆசானே :)/

நன்றி ஹை!:)

/பின்னி பெடலெடுக்கறதுன்னா இதுதானா :) /

ஓ அது இது தானா?:) நீங்க சொன்னா சரி தான்(ஹிஹி எல்லாம் ஒரு தன்னடக்கம்தேங்)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
கவிதல அழகா flow இருக்கு...
நன்றி:)

/காதலர் தினத்தில் நான் படித்ததில் இதுவே முதல் இடம்.. எனக்கு!/
அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதா ட்ரீம்ஸ் நன்றி:)

தி. ரா. ச.(T.R.C.) said...

அவற்றை கோர்த்து மாலையிட்டேன்,
உன் நிழலுக்கு.

நினைவிலே வாழ்பவனுக்கு நிஜமாலை இல்லாமல் நிழலுக்கு மாலை
நல்ல கவிதை. நல்ல கற்பனை.

Gayathri Chandrashekar said...

Nice poem veda!..ungaladhu uruvagangal arumai..

Ravi said...

..hmmm
good lines .. great meaning !!

//உன் நினைவுகள் என்னை எரித்து,
பிடிசாம்பலாய் மாறினாலும் காத்திருப்பேன்,
காற்றோடு கலந்து,
உன் சுவாசமாய்
உன்னில் நுழைய.. //

really good stanza ..

Nandha said...

//எழுதிய வார்த்தைகளை விடவும்,
எழுதப்படா மெளனங்கள் அதிகரிக்க,
அவற்றை கோர்த்து மாலையிட்டேன்,
உன் நிழலுக்கு.

உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்//

கவிதை படம் காமிக்குது. என்னன்னு சொல்ல? அருமையான கவிதை வேதா. வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

வாழ்த்துக்கள்...ஓ.. இது போன வருஷம் எழுதியதா?.. நல்லா இருக்கே:)...

நாகு said...

அருமையான கவிதைகள் என்று வெறுமனே பாராட்டுதல் மிகவும் குறைவான வார்த்தைகளாகும். ஆனால் வேறு வார்த்தைகளை தேட முடியவில்லை....மெய்மறந்து ரசிக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

//எழுதிய வார்த்தைகளை விடவும்,
எழுதப்படா மெளனங்கள் அதிகரிக்க,
//


//உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்//
//எழுதிய வார்த்தைகளை விடவும்,
எழுதப்படா மெளனங்கள் அதிகரிக்க,
//

மிகவும் ரசித்த வரிகள்.

வாழ்த்துகள் வேதா..!