Friday 26 January 2007

உண்மையின் உண்மை..




















விரல்களின் ஊடே வடியும் வார்த்தைகள்
என்றும் தொட்டதில்லை
உண்மையின் விளிம்பை;

நாவில் பழகும் இனிய சொற்கள்
என்றும் சொன்னதில்லை
உண்மையின் சொல்லை;

முகத்தில் தெரியும் குறிப்புகள்
என்றும் காட்டியதில்லை
உண்மையின் உருவத்தை;

தேங்கி நிற்கும் உண்மைகளை
வழிய விட்டால்
கன்னத்து கோடுகளும் சாட்சியாகிவிடுமென
நீ
கண்களை மூடியதை
என் கண்கள் கண்டுக்கொண்டன;

கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை.

26 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா உண்மையின் விளிம்பை, சொல்லை, உருவத்தை, உன்மையை பல்வேறு கோணங்களில் காட்டியதற்கு நன்றி. அருமையான கவிதை.

Syam said...

என்ன சொல்ல...இத படிச்சிட்டு சொல்லுவதற்கு வார்த்தை இல்லை என்பதுதான் உண்மை :-)

Anonymous said...

@வேதா

அருமையான கவிதை. மத்தவங்களுக்கெல்லாம் என்ன புரிஞ்சது என்று தெரியல.. ஆனா எனக்கு ஒரு கதையே சொன்னாப்புல இருக்கு.

Anonymous said...

ம்ம்ம்... இத படிச்சதும் எனக்கு ஒரு கவிதை நியாபகம் வருது.. நிறைய நாள் முன் ஒரு தோழிக்கு நான் எழுதியது.

"என் கவிதையும் குழந்தை தான்
என்னிடம் விட்டு விட்டு
நீ சென்று விட்டாய்..
வாடகைத்தாய் தேடி
நான் அலைகின்றேன்...
இதோ.. அது அழுகின்றது"

Anonymous said...

//கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை.//

சில நேரம் உண்மை தெரிந்தாலும், நாம தாங்க நம்ப மறுக்கின்றோம்!

Arunkumar said...

வழக்கம்போல கலக்கலான ஒரு கவிதை வேதா..

//
கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை.
//
ரொம்ப ரசிச்சது இந்த கடைசி வரிகள்தான்...

Anonymous said...

is it only comment to be left in tamil scripts ? nalla irukku veda your poem after a long time i am peeping out into in this world

Anonymous said...

//விரல்களின் ஊடே வடியும் வார்த்தைகள்
என்றும் தொட்டதில்லை
உண்மையின் விளிம்பை/

இந்த வரிகள் முரணாய் அமைந்துவிட்டதே...ஆம் உண்மையினை சொல்லிவிட்டனவே,
இந்த வரிகள்...

சில விரல்கள் விதிவிலக்கு என்பதை மறந்துவிட்டேன்...

அப்பாட கவிதை பக்கத்தில் மீண்டும் கவிதை... சூப்பர்...

Anonymous said...

@ட்ரீம்ஸ்...

//என் கவிதையும் குழந்தை தான்
என்னிடம் விட்டு விட்டு
நீ சென்று விட்டாய்..
வாடகைத்தாய் தேடி
நான் அலைகின்றேன்...
இதோ.. அது அழுகின்றது///

வாவ் நல்ல கவிதை...என்ன செய்ய போகிறீர்கள் இப்படி அழும் எல்லா குழந்தைகளையும்?

veerakumar said...

கவிதையும் நன்றாக எழுதுகிறீர்கள்

shree said...

wow! nice one! poramaiya irukkupa.
Ace of base song onnu idhe madhiri irukum :)

கீதா சாம்பசிவம் said...

அது என்ன உண்மை சொல்றது முன்னே எல்லாரையும் பயமுறுத்தி வச்சிருக்கீங்க? :D
எப்போ மாத்தினீங்க தெரியலை டெம்ப்ளேட்டை? ஒரு நிமிஷம் அசந்துட்டேன். புது ப்ளாகுக்கு மாறியாச்சா?
உண்மை என்னைச் சுடுகின்றது.அது தான் உண்மையும் கூட.

கீதா சாம்பசிவம் said...

அது என்ன உண்மை சொல்றது முன்னே எல்லாரையும் பயமுறுத்தி வச்சிருக்கீங்க? :D
எப்போ மாத்தினீங்க தெரியலை டெம்ப்ளேட்டை? ஒரு நிமிஷம் அசந்துட்டேன். புது ப்ளாகுக்கு மாறியாச்சா?
உண்மை என்னைச் சுடுகின்றது.அது தான் உண்மையும் கூட.

கீதா சாம்பசிவம் said...

mmmmm, No approval from the blogger for my comments. I doubt whether it will come or not. Again "வேதாளம்" முருங்கை மரம் ஏறிட்டதுன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, ஒண்ணு மாத்தி ஒண்ணு.

Anonymous said...

அருமையான கவிதை.

வேதா said...

@திராச,
ரொம்ப நன்றி:)

@ச்யாம்,
இந்த கவிதை உங்களையே பீல் பண்ண வச்சுடுச்சா..அவ்வ்வ்வ்வ்வ்வ்.:)

@ட்ரீம்ஸ்,
/ ஆனா எனக்கு ஒரு கதையே சொன்னாப்புல இருக்கு. /

கவிதையே கதையின் சிறு வடிவம் தான:)

/வாடகைத்தாய் தேடி
நான் அலைகின்றேன்...
இதோ.. அது அழுகின்றது/
எதற்கு வாடகை தாய்? நீங்களே தாயின் இடத்தை எடுத்துக் கொள்ளலாமே ஒரு தாயுமானவராக:)

/சில நேரம் உண்மை தெரிந்தாலும், நாம தாங்க நம்ப மறுக்கின்றோம்!/
ஹும் இதுவும் உண்மை தான்:)

வேதா said...

@அருண்,
நன்றி நண்பரே எனக்கும் அந்த கடைசி வரிகள் தான் ரொம்ப பிடித்திருந்தது:)

@வைஷ்ணவ்,
வாங்க என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?:)

@ப்ரகாஷ்,
/இந்த வரிகள் முரணாய் அமைந்துவிட்டதே...ஆம் உண்மையினை சொல்லிவிட்டனவே,
இந்த வரிகள்...
/
ஒளித்து வைத்த உண்மையை கண்டு கொண்டீர்களா?:)முரண்பாடுகளும் சில சமயங்களில் அழகு தானே?:)

/அப்பாட கவிதை பக்கத்தில் மீண்டும் கவிதை... சூப்பர்.../
இனி இது தொடரும் ஆதரவுக்கு நன்றி நண்பரே:)

@வீரக்குமார்,
நன்றி, உங்க கவிதைகளையும் படித்தேன் அருமையாக எழுதினீர்கள் ஏன் எடுத்து விட்டீர்கள்?

Anonymous said...

@veda
//எதற்கு வாடகை தாய்? நீங்களே தாயின் இடத்தை எடுத்துக் கொள்ளலாமே ஒரு தாயுமானவராக:)
//
athu sari! apparam ethukku ponnunga :P

Anonymous said...

Haai Vedha,

//தேங்கி நிற்கும் உண்மைகளை
வழிய விட்டால்
கன்னத்து கோடுகளும் சாட்சியாகிவிடுமென
நீ
கண்களை மூடியதை
என் கண்கள் கண்டுக்கொண்டன;//

excellent...really its excellent..

Anonymous said...

ஹாய் வேதா,

இன்னைக்கு தான் உங்கள் கவிதை பக்கம் பத்தி தெரிஞ்சுது.என்னத்த சொல்ல? நான் கொஞ்சம் கவிதை பயித்தியம் னு கூட சொல்லலாம்.நல்ல கவிதைகளை ரசிக்கிர ஜாதிங்க..என்ன...எனக்கு அவ்வளவா திருப்பி எழுத தான் முடியாது.ஆனா ஒரு நல்ல ரசிகை..

உங்க கவிதை எல்லாமே SIMPLY MARVELLOUS..SUPERB..

Anonymous said...

adhe thaan, nattamaiye peel pannitaru na adhu epperpatta kavidhai :-) awwwwwwwwwwwwwwwwwwwww! kavidhai arumai vedha, unmaiyin unmai thedi nanum alaigindren. :-)

Syam said...

ஆனா இந்த பேக்ரவுண்டு கலர் கண்ணே அவிஞ்சுடும் போல இருக்கு :-)

Anonymous said...

Idhu allavo kavidhai...pramaadham...besh besh..romba nanna iruku :)

வேதா said...

இந்த ப்ளாக்கர் என்னை புது ப்ளாகருக்கு மாறலேன்னா உன் வலைப்பதிவே வராதுன்னு சொல்லி மாத்த வச்சுடுச்சு, இப்ப பார்த்தா யார் யார் பின்னூட்டம் கொடுத்துருக்கீங்கன்னு புரியவே இல்ல:) அதனால் மொத்தமா எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்:)

வேதா

மணி ப்ரகாஷ் said...

நீங்களும் புது பிளாக்கருக்கு மாறியாச்சா.. ம்ம்

என்சாய்ய்ய்ய்ய்ய்

veda said...

@ப்ரகாஷ்,
என்னத்த என்சாய்? நான் வேண்டாம் வேண்டாம்னு தான் சொன்னேன் ஆனா இந்த ப்ளாக்கர் தான் என்னைய இதுல இழுத்து விட்டுடுச்சு:( இப்ப பாருங்க என் ப்ளாக்கர் பெயரை தமிழில எழுத முடியல, பல வலைப்பதிவர்களின் பெயர்கள் அனானியாகிடுச்சு:(