
ஏதோ சொல்ல வந்து
பின் சொல்லாமலே
கால்களை வருடிச் செல்லும்
கடலலைகள் போல்,
உன் முகம் கண்டவுடன்
பின் வாங்குகின்றன,
மன அலைகளாய் எழுந்த
என் ரகசியங்கள்.
சொல்லாத ரகசியங்கள்
என் மனக் கடலில்
புதைந்து கிடக்கின்றன
முத்துக்களாய்.
அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)
நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை,உன் மனதுக்கு நான் - கிருஷ்ணர்
