skip to main |
skip to sidebar
குத்திக் கிழித்தன உன் வார்த்தைகள்,என் இதயத்தில் இறங்கிய கத்தியாய்.புரிதல் என்பது,புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுதுகண்களில் நிரம்பி,என் கன்னங்களில் வழிந்து,வலியின் சுவடுகளை விட்டுச் சென்றது,என் கண்ணீர் துளிகள் அல்ல,கிழிந்த என் இதயத்தின்,ரத்த துளிகள்...

உன் நினைவுகளை,
என்னில் சுமந்து,
நான் கடந்த பாதையெல்லாம்,
உன் காலடிச் சுவடுகள்.
உனக்கான என் கணங்கள்கரைந்துக் கொண்டிருக்க,உனக்கான என் வார்த்தைகள்வளர்ந்துக் கொண்டிருக்க,உனக்கான என் மனவெளிவிரிந்துக் கொண்டிருக்க,உனக்கான என் ஆசைகள்அலைந்துக் கொண்டிருக்க,உனக்கான என் எல்லாம்இருந்துக் கொண்டிருக்க,உனக்கான நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கான உன் வருகை நோக்கி!