skip to main |
skip to sidebar
என் கனவுகளில் நீ புகுந்தாய்.பல இரவுகள் கடந்தன,
பல விடியல்கள் புலர்ந்தன,நான் இன்னும் கண்விழிக்கவில்லை.
தரையெங்கும் சிதறிக் கிடந்தன
விண்மீன்கள்!
வீதியில் இறங்கி நடந்த,
உன்னை,
நிலவென்றெண்ணி வரவேற்க!
வறண்டுப் போனபூமித் தாய்க்குவான மகள் போட்ட வைட்டமின் ஊசிகள்.
வானத்தில் மேகங்கள்,
பூமியில் பெண்கள்,
இரண்டுமே மாறும் இயல்புடையவை.
மேகம்,
மலராய்,புலியாய்,
மரமாய்,செடியாய்.
பெண்,
மகளாய்,மனைவியாய்,
தாயாய்,தோழியாய்.
உருவங்கள் மாறலாம்,
உணர்வுகள் மாறலாம்,
ஆனால் நீ?
வானில் மேகங்கள் உருமாறி கலைவது போல்,
நீயும் உருமாறிக் கொண்டே,
இறுதியில்,
உன்னை அறிந்து கொள்ளாமல் ,
கலைந்து விடாதே.
கொஞ்சம் நீயாகவும் இரு!
மாறும் இயல்பில்,
உன் இயல்பை மறக்காதே,மறைக்காதே.
மாறும் இயல்புடைய
மேகமாய் இல்லாமல்,
என்றும் அழியா வானமாய் இருந்து விடு.
இருளில் அலைந்தேன்,
நீரில் மிதந்தேன்,
பயமில்லாமல்,
உன்னுள் இருக்கும் வரை.
என் உடல்,
என் உயிர்,
என் உணவு,
எல்லாம் கொடுத்தாய்,
நான் பெண் என்று அறியும் வரை.
எல்லாம் கொடுத்துவிட்டு,
என்னையே விலையாக கேட்கிறாயே!
நீயும் பெண் என்பதை மறந்தாயோ?
சமூகம் கேட்கும்,'ஆயிரம் கேள்விகள்'
அனைத்தும் பதில் சொல்லத் தகுதியற்றவை!
உன்னால் உருவாகி,
உன்னுள் வடிவாகி,
உன்னிடம் பிறப்பதால்
நான்,
உன்னுடையவள் அல்ல,
என் உயிர்
என் உரிமை மட்டுமே.
உன் கருவறை,
என் கல்லறையாகி விட வேண்டாம்.
தூணிலிருந்து வெளிபட்ட தர்மம்
அதர்மத்தை அழித்ததுப் போல்,
உன்னிலிருந்து வெளிப்பட்டு
நான் அழிப்பேன்
இந்த சமூக அவலங்களை.
என்னை பிறக்க விடு.சமீபத்தில் படித்த வாஸந்தியின் "கடை பொம்மைகள்" பெண் சிசு கொலையை கதை களமாகக் கொண்டது. கருவிலிருக்கும் ஒரு பெண் குழந்தை , தன் தாயிடம் பேசுவது போல அமையும் ஒரு கவிதையை முயற்சி செய்தேன். தங்களின் மேன்மையான , உண்மையான கருத்துக்களை பதிவு செய்யலாம்.