skip to main |
skip to sidebar
என் மனதில்
உள்ள எண்ணங்கள்,
வெறும் சலனமாய் வடிவிழந்து,
புகையாய் காற்றில் கலக்கும் முன்
வந்து சொல்வாயா?
அந்த வார்த்தைகளை,
"என்னை மணக்க சம்மதமா?".
உன் விழிகளும் என் விழிகளும்சந்தித்தன ;இரண்டு இதயங்கள் இடறி விழுந்தன;விழுந்த இதயங்களை எடுக்க நாம் முயல,அவை இரண்டும் ஒன்றாகி,நம்மை பார்த்துச் சிரித்தது,விழிகளை பிரிக்க முடிந்த நாம்,இதயங்களைப்பிரிக்க முடியாமல் திகைத்தோம்!!!!விழிகள் பொய் கதை சொல்லலாம்,ஆனால்,இதயம் என்றும் உண்மை விளம்பி!!!!
இரவு காட்சி முடிந்து,பகல் காட்சி ஆரம்பிக்கப்போகிறது.ரசிகர்களாகிய பனித்துளிகள்,இலைகள் என்னும் இருக்கைகளில் அமர்ந்திருக்க,அதோகதாநாயகனாகிய கதிரவன் வர,கதாநாயகியான தாமரையும் மலர,பாவம்,இந்த பனித்துளிகள் ஆர்ப்பரிக்கின்றன,தாங்கள் கரையப்போவது தெரியாமல்...