Wednesday, 13 December, 2006

காத்துக் கொண்டிருக்கிறான்...























சர்வ அலங்கார ரூபனாய்
கடவுளை காண
கைக்கூப்பி
திரை விலக
காத்துக் கொண்டிருக்கிறான்
பக்தன்;


கடவுளோ,
உபயதாரரின் வருகைக்கு.

16 comments:

Priya said...

சூப்பர் வேதா. நம்ம கோவில்கள்ல, கடவுள் சன்னிதானத்துல கூட மனிதர்களுக்குள்ள ஏற்ற தாழ்வு பாக்கறது எனக்கு எப்பவுமே மனச உருத்தும். நல்லா சொல்லி இருக்கிங்க.

SKM said...

//திரை விலக
காத்துக் கொண்டிருக்கிறான்
பக்தன்;

கடவுளோ,
உபயதாரரின் வருகைக்கு. //
அழகான உண்மையான வரிகள்.

G3 said...

Summa nachunnu irundhuchu kavidhai :)

வேதா said...

@ப்ரியா,
நன்றி ப்ரியா இது உண்மையாக நான் அனுபவித்தது. அபிஷேகத்திற்கு பணம் கட்டிய உபயதாரர் வராததால் எல்லாரையும் காக்க வைத்து விட்டார்கள்,கடவுள் உட்பட:)

@skm,
நன்றி, இது உண்மையும் கூட.

@ஜி3,
நன்றி:)

Anonymous said...

unga bloga a eppadi miss pannen enru theriyala
chance a illa kavidhai's super!

Anonymous said...

unga bloga a eppadi miss pannen enru theriyala
chance a illa kavidhai's super!

Arunkumar said...

அழகான வார்த்தைகள்
அருமையான சிந்தனை
சூப்பர் கவிதை

Ravi said...

en ..intha deep sinthanai ..
concept deep'a iruthalum .. chumma varthaigalla scene podarreenga ponga ..

super'a irukunga !!!

krk said...

veda..enakku idhu puriyla???can u pls explain me the last 2 lines??

surya said...

வேதா
மிக மிக சரியான வார்த்தைகள்..

சூர்யா
துபாய்

வேதா said...

@ட்ரீம்ஸ்,அருண்,
ரொம்ப நன்றி:)

@ரவி,
வார்த்தைகளா சீனா?ஹாஹா:)நன்றி ரவி.

@krk,
அதாவது கோவிலில் கடவுளுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடக்கும் போது திரை போட்டு சந்நிதியை மறைத்து விடுவார்கள். பின் திறக்கும் போது அன்று அபிஷேகத்திற்கு உபயதாரர் அதாவது பணம் கட்டியவர் தான் முதலில் வணங்க முடியும்,சில சமயங்களில் அவர்கள் வரும் வரை திரையை விலக்காமல் கடவுளையே காக்க வைப்பார்கள். அதை தான் இந்த கவிதையில் சொல்கிறேன்.

@சூர்யா,
மிக்க நன்றி:)

தி. ரா. ச.(T.R.C.) said...

இதைத்தான் தியாகராஜரும் "திர தீயகராதா நா மனசுலேனி திர தீயகராதா.....திரையை விலக்குவாய் ராமா என் மனதிலுள்ள மதம், மாத்ச்சர்யம், ஏழை பணக்காரன் என்றதிரையை நீக்கி எல்லாரும் உன்னைப் பார்க்கும்வண்ணம் செய் என்கிறார். உங்களது கவிதையும் நல்ல கருத்தை எதிரொலிக்கிறது.

வீட்டுக்கு வந்துவிட்டேன் போதுமா.நானா வருவதில்லை. உங்கள் கவிதை வீட்டில் தங்கி இருந்து அவ்வப்போது கவிதை விளக்கிற்கு தூண்டி விட்டு ,எண்ணை குறையும் போது எண்ணை ஊற்றி பிராகசிக்கச்செய்யும் என்னை இப்படிச் சொல்லிவிட்டீர்களே இது தகுமோ? இது முறையோ? இது தர்மம்தானோ?

Anonymous said...

இதுக்குத்தான் நான் இப்ப கோவிலுக்கே போறது இல்ல.. அப்படியே போறத இருந்தாலும் நம்மள கவனிக்கிற ,
நம்பவீதி கோவிலுக்கு போய் ஹாய் சொல்லிட்டு வந்தறது...

அது ஏன் நம்பளும் காசுக்கார கடவுள போய் தேடுறோம்.

Anonymous said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..


அருமையான கவிதை புனைந்துள்ளீர்கள்.

ரசிகா.

Ravi said...

naangalum kaathu kondu irukirom ungal adutha post'ku ..

... kaal valikirathu .. kaaka vekkatheenga ...

சேதுக்கரசி said...

நச்!!

சரி, அலைன்மெண்டை ஜஸ்டிஃபைடிலிருந்து மாற்றி left aligned-ஆக மாற்றுங்கள். Firefox-இல் சரியாகத் தெரியவில்லை.