Wednesday, 22 November, 2006

எனக்கான காதல் துளிகள்..

























கண்ணோடு கண் சேரவில்லை;
கனவுகள் நாம் காணவில்லை;
யாருமற்ற வெளிகளில்,
நீயும் நானும்,
எல்லாமாக திரியவில்லை.

கைத்தலம் பற்றி,
காதலாகி,
கசிந்துருகி,
நீ,
என்றும் சொன்னதில்லை,
உன் நேசத்தை.

எனினும்,
நான் நிதமும் கண்டுக்கொள்கிறேனடா,
இமைகள் தடுத்தும் இயலாமல்
உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை.

11 comments:

தாரிணி said...

வேதா, ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பின் ஆழம் தெரிகிறது.
நினைவுகளை எங்கேயோ கரம்பற்றி அழைத்துச் சென்று விட்டது..

/நீ,
என்றும் சொன்னதில்லை,
உன் நேசத்தை./

சொல்லாத நேசமே இவ்வளவு உணர்வுகளை தூண்டி விட்டிருக்குமானால், சொல்லி விட்டிருந்தால்..

மிக அழகான கவிதை.. அடிக்கடி எழுதாமல் இருந்தால், இப்படியெல்லாம் அருமையாக எழுத முடியுமானால் நீங்கள் அடிக்கடி எழுத வேண்டாம்.. ஆனால் நல்ல கவிதகளை அடிக்கடி படிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடுமே.. அதனால் நீண்ட இடைவெளி விடாமல் எழுதுங்கள்..

இந்த கவிதை மிக நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

வேதா said...

நன்றி தாரிணி, அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.:)

தி. ரா. ச.(T.R.C.) said...

உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை

ஐம்பதிலும் ஆசைவரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்,உங்களிடமிருந்துதான் கற்றேன் கண்ணீர்த்துளிகலிலும் காதல் வரும் என்று. அருமையான கவிதை. என் கருத்துக்கும் வேண்டுகோளுக்கும் மதிப்பு அளித்ததற்கு நன்றி.

Ravi said...

\\யாருமற்ற வெளிகளில்,
நீயும் நானும்,
எல்லாமாக திரியவில்லை.\\

... manathu velli paduthum .. penmayin kadhal .. unmayana kaadhal .. simply superb !!!

\\நான் நிதமும் கண்டுக்கொள்கிறேனடா,
இமைகள் தடுத்தும் இயலாமல்//

WOW !!! ... ipdi ..scene a kavidhai ezhuda ungala maathiri aal irukum varikum .. am certainly going to luv that ..

மணி ப்ரகாஷ் said...

சொல்லப் படாமல்
உணர்ந்து உருகிடும்
காதலை

எனக்கான காதல் துளிகள்..

//உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை//
சொல்லியது
சொல்லப் படாமல்
உணர்ந்து உருகிடும்
காதலை

nice !!!

பல பேரின் வேண்டுகோளுக்கு நிறைவேற்றி வந்த கவிதையா!!!
good..

வேதா said...

@திராச,
உங்களை மாதிரி ஊக்குவிப்பவர்கள் இருக்கும் வரை என் கவிதைகளுக்கு கவலையே இல்லை, வந்துக் கொண்டே இருக்கும்:)

@ரவி,
வாங்க வாங்க:) முதல் வருகைக்கு நன்றி:)

@ப்ரகாஷ்,
ஆமாம் , நான் ரொம்ப இடைவெளி கொடுத்து எழுதுவதால் எல்லாரும் கேட்கிறார்கள். நன்றி:)

sruthi said...

/*உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை*/
அருமை ,உண்மை.
ஸ்ருதீ

Arunkumar said...

ரொம்ப அழகான கவிதை :)

surya said...

இது கவிதையா?? வேதமா??

இல்லை...

வேதா சொன்ன கவிதையே...

தூள்...

சூர்யா
துபாய்.

Anonymous said...

//கண்ணோடு கண் சேரவில்லை;
கனவுகள் நாம் காணவில்லை;
யாருமற்ற வெளிகளில்,
நீயும் நானும்,
எல்லாமாக திரியவில்லை.
//

அற்புதமான வரிகள்!
kavidhai super!

Anonymous said...

Haai vedha,

//கண்ணோடு கண் சேரவில்லை;
கனவுகள் நாம் காணவில்லை..//

//எனினும்,
நான் நிதமும் கண்டுக்கொள்கிறேனடா,
இமைகள் தடுத்தும் இயலாமல்
உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை..//

காதலை அனுபவிச்சா தான் இது புரியும்...அவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க வேதா, உண்மையாகவே நான் கசிந்துருகித் தான்
போனேன் வேதா உங்கள் கவிதையில்...