Wednesday 1 November 2006

கடவுள் தரிசனம்..

























சிரிக்கும் உன் விழிகளில்
வழியும் அன்பு;
சிறு சிணுங்கலிலும்
தெறித்து விழும் நேசம்;
கைகட்டி நிற்பவரையும்
தொடத் தூண்டும் மென்மை;
மனம் கனமாகி
விழிகள் குளமாகி
எண்ணங்கள் உறையும் பொழுது,
உன்னை ஆரத் தழுவி
உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.



11 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.
அதனால்தான் சொல்லுகிறார்களோ "குழந்தை தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறக்கும் மனத்தால் ஒன்று" என்று.

தாரிணி said...

நான் சொல்ல வந்ததை தி.ரா.ச ஸார் சொல்லிவிட்டார்.

அப்பாடா.. இப்போதாவது உங்கள் மௌனம் கலைத்தீர்களே.. இனி தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்.

மணி ப்ரகாஷ் said...

ம்மா,அம்மா
என்று நீ அழைத்துவிட்டால்
கிடைத்துவிடுகிறது
(வரப்) பிரசாதம்...
-

நன்று..

indianangel said...

arumai!

வேதா said...

@திராச,
ஆமாம் சரியாக சொன்னீர்கள்:)

@தாரிணி,
நன்றி, பயணம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் மெளனங்களுக்கு இடையில்:)

@மணிப்ரகாஷ்,
சிறப்பாக சொன்னீர்கள்:)

@ப்ரசன்னா,
நன்றி:)

Seenu said...

arumaiyeaana kavithai...nalla irukkunga...

krk said...

Good one

indianangel said...

வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கு - அப்படின்னு சொல்லி தப்பிச்சுக்க வேண்டியதுதான் உஷா! :) அதனாலதான் உங்க எல்லாரோடைய blog பக்கம கொஞ்சம் நாளா வரலை! அடுத்தா வாரமும் இதே மாதிரிதான் நிறைய வேலை இருக்கு :( சரி உங்களோடதும் அம்பியோட mailid அனுப்புங்களேன், நான் என்னோட கதையின் அடுத்த பகுதியை அனுப்பறேன்! :)

sruthi said...

ரொம்ப ரொம்ப அருமைங்க
ஸ்ருதீ

வேதா said...

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்ருதி:)

Raji said...

chanceless kavidhais..ellamae superbaa irukkunga Veda:)