Thursday, 5 October, 2006

யார் விரலும் தீண்டியிராத என் வீட்டு அழைப்பு மணி


தனிமையின் கரங்கள் என்னை அணைத்துக் கொண்டன
தன்னுலகத்துள்.

நிதம் விழித்தவுடன்
வெறுமையின் தரிசனம்.

யாருக்காகவும் காத்திர வேண்டியதில்லாத
கணங்களின் கனம்.

விரல்களே உண்ணும் வண்ணம்
பசியிருந்தும்
தட்டில் வைத்தவுடன்
கை போடுகின்றது கோலம்.

தன்னையும் நினைப்பவர் யார் என்று
புரையேறுகையில் தேடுகிறது மனம்.

என் நிலை எண்ணி
தானே சிணுங்கிறது என் தொலைப்பேசி

தனிமையுலகத்தின் வாயில் வழியே
உள்ளே வழியும் வார்த்தைகளுக்கு காத்திருக்கிறோம்
நானும்,
யார் விரலும் தீண்டியிராத என் வீட்டு அழைப்பு மணியும்

22 comments:

Prashant said...

hey dont u want all of us to read your blog. I kant understand the language.

வேதா said...

@prashant,
i have written in my mother tongue tamil. jus bcos u cant understand the language doesnt mean that no one speaks it. anyway thanks for the visit.

indianangel said...

@ Veda: porumai! porumai! sila peru ippadi dhaan kadupadikkardhukkunne varuvaanga! ennoda post'ayum oruthar kizhi kizhinnu kizhichuttar - aana idhellam jaaliyave eduthukkavendiyadhudhaan! :) vazhakkam pola kavidhai amarkalam, unga perumbalana kavidhaigalla oru sogam izhaigiradhe adhu yen??? appuram innoru vizhayam yen ellarum indha comment moderation enable panniyirukeenga?

Sandai-Kozhi said...

arpudham.romba azhaga ezhudi irukeenga.I have read all your payana uraigal,but this is first time commenting.Thanimaiyin kodumai uvamaigal too good.--SKM

வேதா said...

@ப்ரசன்னா,
porumai! porumai! sila peru ippadi dhaan kadupadikkardhukkunne varuvaanga
அட நீங்க வேற இந்த கவிதையை எழுதினவுடனே ஒரு கமெண்ட் வந்தது என்னடா படிச்சு பாத்தா இப்படி ஒரு கமெண்ட் போட்டு கடுப்பேத்திட்டான், அதான் பொங்கி எழுந்திட்டேன்:)

ellarum indha comment moderation enable panniyirukeenga?
அதை ஏன் கேக்குறீங்க? ரொம்ப நல்ல வார்த்தைகள் எல்லாம் போட்டு கண்ணுல ரத்தம் வர அளவுக்கு கமெண்ட் வர ஆரம்பிச்சதனால தான் இந்த மட்டுறுத்தல் செய்தேன்:)

அது என்னமோ சோகம் இழையோடும் கவிதைகள் தான் எனக்கு எழுத வருது:)

@skm,
ரொம்ப நன்றிங்க:) நான் கூட நேத்து தான் உங்க பதிவையெல்லாம் படிச்சேன்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

தனிமையுலகத்தின் வாயில் வழியே
உள்ளே வழியும் வார்த்தைகளுக்கு காத்திருக்கிறோம்
நானும்,
யார் விரலும் தீண்டியிராத என் வீட்டு அழைப்பு மணியும்
ஏம்மா வேதா நாங்க இவ்வள்வுபேர் இருக்கோம் அப்பறம் எப்படி தனிமை வரும்.உங்களது இந்த "சான்னெட்" கவிதைகள் மிகவும் நன்று.முன்பு சொன்ன மாதிரி பேரையே கவிதான்னு மத்திரலாம்.நிறைய கவிதை எழுதுங்கள்

வேதா said...

தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி:) நம்ம நண்பர்கள் நிறைய பேர் குடும்பத்தை விட்டு வேலை பொருட்டு தனியே தங்கி இருக்கிறார்கள்.அவர்களின் தனிமையைப் பற்றி பதிவெல்லாம் போட்டாங்க சரின்னு அதை நான் கவிதையா முயற்சி செய்தேன்:)

நாகை சிவா said...

தனிமையை மிக அருமையாக சொல்லி உள்ளீர்கள் வேதா. கொஞ்சம் மிகைப்படுத்தியே, மிகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் அதை அனுபவிப்பீர்களுக்கு தான் தெரியும், அதன் வலி. சில சமயம் நம் மேலயே வெறுப்பு வந்து விடும்.

மூன்றாவது மற்றும் நான்காவது பத்திகள் நான் மிகவும் ரசித்த பத்திகள்.

கடைசி பத்திகளில் வார்த்தைகளில் அதிகம் கவனம் செலுத்தி போட்டு இருக்கின்றீர்கள். நன்று.

கடைசியாக, தலைப்பு தான் கொஞ்சம் சரி வராத மாதிரி உள்ளது. ரொம்ப பெரிதாக இருப்பதாலா?

வேதா said...

@சிவா,
சில இடங்களில் மிகைப்படுத்தியிருந்தாலும் அனுபவம் உண்மை தான்(கேள்விப்பட்டவை). எனக்கும் மூன்றாவது பத்தி தான் மிகவும் பிடித்தது. நான்காவது சரியாக அமையவில்லையோ என எனக்கு சந்தேகம்.
//கடைசியாக, தலைப்பு தான் கொஞ்சம் சரி வராத மாதிரி உள்ளது. ரொம்ப பெரிதாக இருப்பதாலா? //
தலைப்பு சற்று நீளமாக இருப்பதால் அப்படி தோன்றுகிறது:)

கடல்கணேசன் said...

வேதா,
இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்.. வேகமாக சில கவிதைகள் படித்தேன்.. அது உங்கள் கவிதைகளுக்கு செய்யும் நியாயம் இல்லை.. ரசித்து, நன்றாக படித்தபின்பு மறுபடியும் உங்களுக்கு எழுதுகிறேன்..

"எடுக்க வா(?) தொடுக்க வா(?)"- கவிதை எடுத்தவுடனேயே பிடித்து விட்டது.. முழுதும் படித்துவிட்டு கண்டிப்பாக எழுதுகிறேன்.

வேதா said...

@கணேசன்,
தங்கள் வருகைக்கு நன்றி:) கண்டிப்பாக என் கவிதைகளை படித்து தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்:)

Bala.G said...

edhukku veda thanimaila irukeenga??....2nd time padicha apuram thaan purinjudhu

வேதா said...

நான் தனிமையில் இல்லை பாலா, தனிமையில் உழல்பவர்களின் உணர்ச்சிகளை பற்றி எழுதியிருக்கிறேன் அவ்வளவு தான்:)

krk said...

Thanimai- enbadhu oru thani thanmai...
Thanaimayil ni thanniraivu petral...
Tharaniyil unakku oru thani idam undu...

Andha idam...

Kilpakkam...

Very nicely written poem...I enjoyed. I suggest you compile your peoms and try to publish it...Its a pain worth taking...

தாரிணி said...

//விரல்களே உண்ணும் வண்ணம்
பசியிருந்தும்
தட்டில் வைத்தவுடன்
கை போடுகின்றது கோலம்//

அழகு வார்த்தைகள்.. தனித்து இருப்பவர்கள் பசித்து இருப்பதில்லையோ என்னவோ..

எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறன் படைத்த எழுத்துக்கள் உங்கள் கவிதைகளில்.. இன்னும் நிறைய எழுதுங்கள்.

வேதா said...

@krk,
தொகுத்து வெளியிடும் அளவுக்கு என் கவிதைகள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பது என் கருத்து,ஆனாலும் தங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே:)

@தாரிணி,
/திறன் படைத்த எழுத்துக்கள் உங்கள் கவிதைகளில்.. இன்னும் நிறைய எழுதுங்கள்./
ரொம்ப நன்றி தோழியே:)

Anonymous said...

reallyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy suberrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb kavithaikal.
i would subscribe if u there is subs sysytem

Sandai-Kozhi said...

வேதா,என்னங்க,இன்னும் அடுத்த கவிதை எழுத மனம் வரவில்லையா?தீபாவளீ எப்படி இருந்தது?அண்ணன் மகளுடன் நேரம் போவதே தெரிய வில்லை என்று நினைக்கிறேன்.உங்கள் டேக் போஸ்ட் படித்தேன்.மிக அருமை.--SKM

மணி ப்ரகாஷ் said...

வேதா,
வணக்கம். இப்போதுதான் உங்களின்
"உண்மை முகத்தை "பார்த்திட நேர்ந்தது.. அழகு கவிதைகள்..

மேலோட்டாமாய் எல்லா கவிதைகளையும் வாசித்து விட்டு உங்களின் தனிமையில் மட்டும் என்னவோ மூழ்கிப் போனதால்...இந்த பின்னூட்டம்... எல்லா கவிதைகளையும் படித்த பிறகு திரும்பவும் தனித்தனியாய்...

//என் நிலை எண்ணி
தானே சிணுங்கிறது என் தொலைப்பேசி//

missed call -ம் அழகாய்..

//விரல்களே உண்ணும் வண்ணம்
பசியிருந்தும்
தட்டில் வைத்தவுடன்
கை போடுகின்றது கோலம்//

சிறு குழந்தை யேனும்
தவறுதலாய் கூட மிதித்து விட்டு
போகட்டுமே என்
இன்றைய கோலத்தை...

நானும் தனித்து விடப்பட்டவன் தான்..
இப்போது எல்லாம்
என் தனித்து இருத்தல்
தவிர்க்கப் படுகிறது
நானே வலியப்போய் அழைத்திடும்
எதிர் வீட்டு அழைப்பு மணியில்...

nice poet. enakku peditha onru..

வேதா said...

@bio,
ரொம்ப நன்றி:)

@skm,
கூடிய விரைவில் எழுதுவேன்:)

@மணி,
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி:)

//என் தனித்து இருத்தல்
தவிர்க்கப் படுகிறது
நானே வலியப்போய் அழைத்திடும்
எதிர் வீட்டு அழைப்பு மணியில்...//
அருமையான சிந்தனை நண்பரே:)

supersubra said...

வெகு நாட்களாக அலுவலக வேலையினால் ப்ளாக் பக்கமே வரவில்லை - சரி இன்று வரலாம் என்று ஒரு உலாவந்தவனை உலுக்கி எடுத்தது உங்கள் கவிதையின் ஒரு வரி
//யார் விரலும் தீண்டியிராத என் வீட்டு அழைப்பு மணியும்//
எங்கள் வீட்டில் கூட நேற்று இருவரும் அலுவலகத்திலிருந்து வரும்பொழுது என் மனைவி அழைப்பு மணியின் பொத்தானை அமுக்க ஹலோ நாங்க வறோம் என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்தோம்.

Have you read Paulo coelho's Alchemist novel?

Anonymous said...

//நிதம் விழித்தவுடன்
வெறுமையின் தரிசனம்.

யாருக்காகவும் காத்திர வேண்டியதில்லாத
கணங்களின் கனம்//

Super a eludhareenga!