இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.
அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.
தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.
உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.
அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"
Thursday 21 September 2006
Subscribe to:
Post Comments (Atom)

9 comments:
தங்கச்சி என்னமா எழுதி இருக்கமா...அருமை :-)
hmm...agayam vasapatum
enna vedha ipdi ellam kalakki naatamaiyum serndhu azha vekringa :) nalla irunga.. unarchi poorvama iruku 2 kavidhaiyume :)
Annai thozhiyaanaal.. Annaiyin anbai azhagaaga sollum kavidhai..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆகாயத்துடன் அன்பை ஒப்பிட்டதன் மூலம் நிருபித்துவிட்டீர்கள்.:)
மரணத்தின் வாசலுக்கு துணைக்கழைப்பது தெரியாமல்
குழந்தையின் கைப்பற்றி செல்லும் தாய்.
அருமையான வரிகள் தாயன்பையும் அதற்கு எமனான யுத்தத்தையும் இதைவிட விவரிக்க முடியாது
அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்
அந்தப் பாடலில் ஆகாயத்தை அழியாததாகக் காட்டிவிட்டு இங்கே அழியாத அம்மாவின் அன்பை இணையாக காட்டிவிட்டீர்கள்.தாங்கள் வேதாவா கவிதாவா?
Very nice poem Friend! There is no border for Love.
nalla kavithaigal
@ச்யாம்,
பின்ன உங்க தங்கச்சியாச்சே:)
@வைஷ்ணவ்,
என்ன சொல்ல வர?
@பொற்கொடி,
அது அப்படித்தான் நீ சொல்ற டயலாக்கையே சொல்றேன் 'நாங்க ஒரு கொடியில் பூத்த மலர்கள்':)
@சசி,
நன்றி, என் அன்னைக்கான சமர்ப்பணம் இது:)
@கோப்ஸ்,
சரியா சொன்னீங்க:)
@திராச,
ரொம்ப நன்றி:) நான் கவிதா இல்லை, வேதா தான்:) உங்கள் திறமைக்கு முன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை:)
@ஜீவ்,
ஆமாம் ஜீவ், அன்பே உலகம், அன்பே சிவம்:)
@பாலா,
நன்றி:)
Post a Comment