Thursday, 21 September, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்(1)

மரணத்தின் வாசலுக்கு துணைக்கழைப்பது தெரியாமல்
குழந்தையின் கைப்பற்றி செல்லும் தாய்.

கண்களில் கனவோடும் கைகளில் வாழ்க்கையோடும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்.

காத்திருக்கும் குடும்பத்தின் கவலை தீர்க்க
பணிக்கு செல்லும் தலைவன்.

நழுவும் நிமிடங்களை பிடித்திழுத்து
நிரந்தரமாக்க துடிக்கும் அன்பு காதலர்கள்.

கண்மூடி திறக்கும் முன்
கனவுகள் சிதறின ரத்த துளிகளாய்.

காலங்கள் மாறினாலும்,
தேசங்கள் மாறினாலும்,
யுகங்கள் தாண்டி மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு அரங்கேற,
ஒரே மெளன சாட்சியாய் இன்னும் இருக்கிறது ஆகாயம்,

என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்.

18 comments:

Syam said...

//யுகங்கள் தாண்டி மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு அரங்கேற,
ஒரே மெளன சாட்சியாய் இன்னும் இருக்கிறது ஆகாயம்,

என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்//

ரொம்ப நல்லா இருக்கு...அதிலும் அந்த கடைசி வரிகள்... :-)

Known Stranger said...

when the adam and eve was created -the fight started - it will end when the last adam and eve doesnt exists dont you knwo the sky observes the blood every evening
sevannam ?

பொற்கொடி said...

arumaiyaa irukunu solikradoda vaayai mudikonu en manasatchi solludhu :)

Gopalan Ramasubbu said...

World is Fragile என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

மு.கார்த்திகேயன் said...

//நழுவும் நிமிடங்களை பிடித்திழுத்து
நிரந்தரமாக்க துடிக்கும் அன்பு காதலர்கள்//

ovvoruvar unarvaiyum padam piduchchu kaatureenga vetha.. romba nalla irukku

Pavithra said...

Nalla kavithai. Excellent selection of words.
Life is so unpredictable. So live this moment as if its the last.

வேதா said...

@ச்யாம்,
ரொம்ப நன்றி:)

@வைஷ்ணவ்,
நீ சொல்றது சரி தான் ஆனாலும் விடியல்னு ஒன்னு இல்லாமையா போய்டும்?

@பொற்கொடி,
நன்றிம்மா:) வாய மூடிக்கற்தா? அதுவும் நீயா? உன்னால தாக்கு பிடிக்க முடியுமா?:)

@போப்ஸ்,
நன்றி:)

@கார்த்திக்,
யாரும் நோட் பண்ணாத வரிகளை கரெக்டா நோட் பண்ண்ட்டீங்க:)

@பவித்ரா,
நன்றி:) ஆமாம் அந்தந்த விநாடிக்காக வாழ்வதே சரி:)

krk said...

yutham... nalla concept..as usual good one

Known Stranger said...

vidiyal - the dawn is there - and it will dawn but - when none is alive.

Do you know the basis of all this war - it is only for three things wealth - land - woman - glory - religion.

till christ and prophet was born in the holy land in the kingdom of heaven - there were no fights on the name of god - now what is happening is the name of GOD- religion.

This will not stop - when the last adam and eve dies - and vidiyal varum - eppo ? manida pathar azhiyum pothu

வேதா said...

@வைஷ்ணவ்,
vidiyal varum - eppo ? manida pathar azhiyum pothu

அப்படி வரும் விடியலால் எந்த பயனும் இல்லை.

மா.கலை அரசன் said...

சோகத்தை சுமந்து
ஒரு சுகந்த கவிதை.

கைப்புள்ள said...

வேதா!
அழகான எதார்த்தமான கவிதை. இக்கவிதை தமிழ்ச் சங்கப் போட்டியில் பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

வேதா said...

@கைபுள்ள,
ரொம்ப நன்றி:) பரிசைப் பற்றி முதலில் தெரிவித்ததற்கும் நன்றி:)

மு.கார்த்திகேயன் said...

//மரணத்தின் வாசலுக்கு துணைக்கழைப்பது தெரியாமல்
குழந்தையின் கைப்பற்றி செல்லும் தாய்.
//

ஆரம்பமே அமர்க்களம் வேதா! ஒரு யுத்த முகில் படர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் நிலமையை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்! இதற்கு மேல் நானென்ன சொல்வது..

உலகமே கலாப மயிலை அழகு என்ற பிறகு, காக்கையும் அதையே சொல்வது போலத்தான் இருக்கும், இன்னும் நான் இந்த கவிதையின் அழகை சொல்லிக்கொண்டிருந்தேன் என்றால், வேதா.. அவ்வளவு ஆழமான வரிகள்!


கன்னத்தில் முத்தமிட்டல் படத்தில் வரும் வெள்ளைப் பூக்கள் பாடலும் இதே ஒரு களத்தை பற்றித் தான் சொல்லி இருக்கும்!

வாழ்த்துக்கள் கொ.ப.செ!

Bharani said...

super kavidhai...Naan indhai padichi irukene...unga blog-la padichena...or someone quoted it to me...

Bharani said...

//ஒரே மெளன சாட்சியாய் இன்னும் இருக்கிறது ஆகாயம்,

என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்//...simply superb...

Arunkumar said...

//என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்.
//
வாவ்.. அருமை. ரொம்ப ரசிச்சேன் இந்த வரிகள

krishna prabhu said...

நல்ல கவிதை. உங்கள் பணி தொடரட்டும்.

அன்புடன்,
கிருஷ்ணா,
http://my-travel-payanam.blogspot.com
சென்னை.