Sunday 27 August 2006

எடுக்க வா(?) தொடுக்க வா(?)















ஏதோ சொல்ல வந்து
பின் சொல்லாமலே
கால்களை வருடிச் செல்லும்
கடலலைகள் போல்,
உன் முகம் கண்டவுடன்
பின் வாங்குகின்றன,
மன அலைகளாய் எழுந்த
என் ரகசியங்கள்.

சொல்லாத ரகசியங்கள்
என் மனக் கடலில்
புதைந்து கிடக்கின்றன
முத்துக்களாய்.
அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)

13 comments:

Shuba said...

mmm gud........too gud...gud interplay of words.....
//சொல்லாத ரகசியங்கள்
என் மனக் கடலில்
புதைந்து கிடக்கின்றன
முத்துக்களாய்.
அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)//

yaaridam....situation ithellam paathu mudivu pannanum!!!!!guru ethavathu doubtnaa kelungaaa..im there to clear doubts!!!!

indianangel said...

பின்னிட்டீங்க! கவிதை கவிதை! அலைகளை உவமை படுத்தி மனதின் ரகசியங்கள் - ரொம்ப நல்லா இருந்தது! நமக்கு முத்து மாலையெல்லாம் வேண்டாம்! அதென்னது "Diamond"-ன்னு எதோ சொல்வாங்களே, அத கொஞ்சம் courier'la anuppungalen! :)

வேதா said...

@சுபா,
//guru ethavathu doubtnaa kelungaaa..im there to clear doubts!!!! //
ஆஹா குருவுக்கே பாடம் சொல்லும் என் அருமை சிஷ்யையே, கண்டிப்பாக ஏதாவது சந்தேகம் என்றால் உன்னிடம் வந்து உபதேசம் பெற்றுக் கொள்கிறேன்:)


@இந்திய தேவதை,
நன்றி:)

//நமக்கு முத்து மாலையெல்லாம் வேண்டாம்! அதென்னது "Diamond"-ன்னு எதோ சொல்வாங்களே, அத கொஞ்சம் courier'la anuppungalen! :) //

ஆஹா, எத்தனை பேருப்பா இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க:)

krk said...

kadalil karaintha uppaiii...

அனுசுயா said...

கவிதை நிஜமா நல்லாயிருக்குங்க

வேதா said...

கார்த்திக்,
நான் கடலில் விளையும் முத்தென்கிறேன், நீங்கள் கரையும் உப்பென்கிறீர்களே:)

@அனுசயா,
நன்றி:)
நீங்க நல்லா இருக்குன்னு சொல்லியிருந்தாலே நான் நம்பியிருப்பேன், ஏன் நிஜமான்னு சொல்றீங்க?:)

Ravi said...

read your "EDHIRPAARPU ... !" that was wonderfull !!

you are right !! Veda .. but .. the truth is that .. we belive in present things ... thus we support the sayings ... "known devil is better than the unknow one .." ... sollamal .. anubavikum inbam .. solliyapin thunbamagha marividumo enra bayam ... athuthaan naam manathin edhirparpugalai mudakirathu !!

வேதா said...

//sollamal .. anubavikum inbam .. solliyapin thunbamagha marividumo enra bayam ... athuthaan naam manathin edhirparpugalai mudakirathu !! //
correct ravi, actually when i read the comment i din understand that u commented my first post. appuram thedi kandupudichen. thanks:)

நாகை சிவா said...

//ஏதோ சொல்ல வந்து
பின் சொல்லாமலே
கால்களை வருடிச் செல்லும்
கடலலைகள் போல்,//

அடிக்கடி நான் யோசித்த அனுபவித்த உவமை, ஆஹா அருமை என்று வந்தால் மறுபடியும் ஒரு காதல் கவிதை. As usual.... :)

வார்த்தைகளில் கனம் தெரிகின்றது. உங்களின் கடைசி வரி சற்று என்று புரியவில்லை. மீண்டும் படித்ததில், மிக அருமையாக அந்த வார்த்தைகளில் விளையாடி உள்ளீர்கள். ஒரு விதமான அழைப்பே அந்த வரிகள் என்று படிக்கின்றது.

வா என்பதற்கு அருகில் ஏன் கேள்விக்குறி போட்டு உள்ளீர்கள். வரவானா(வரவாளா) என்ற அச்சத்தின் வெளிப்பாடா?

மொத்தில் கவிதை சூப்பர். கடல் அலையும் சூப்பர். என் அலையை விட ஆக்ரோஷம் சற்று அதிகமாவே உள்ளது ;)

வேதா said...

//வா என்பதற்கு அருகில் ஏன் கேள்விக்குறி போட்டு உள்ளீர்கள்.//
இந்த வரிகளை இரண்டு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம், கேள்விக்குறியில்லாமல் 'எடுக்க வா, தொடுக்க வா' என்பது
காதலிப்பவருக்கு விடுக்கும் அழைப்பு.
கேள்விக்குறியுடன் 'எடுக்கவா? தொடுக்கவா?' என்பது என் ரகசியங்கள் என்னும் முத்துகளை எடுத்து,தொடுத்து உனக்கு மாலையாக்கவா என காதலிப்பவரிடம் கேட்பது போல் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

//மொத்தில் கவிதை சூப்பர். கடல் அலையும் சூப்பர். என் அலையை விட ஆக்ரோஷம் சற்று அதிகமாவே உள்ளது ;) //

நன்றி:)

Sasiprabha said...

Manam alaipolathaan.. Ennangalai vaari konduvandhu karai kadakka muarchi seidhuvittu, pin eno thalarndhu pinvaangi vidum.. Karai thaandum thunivu eppoludhum alaigalukku varvadhe illai..

Seenu said...

kavithai arumai.

வேதா said...

@சசி,
// Karai thaandum thunivu eppoludhum alaigalukku varvadhe illai.. //
அந்த துணிவு வந்துவிட்டால் பின் கடலே இல்லை:)

@சீனு,
நன்றி:)