
நெருக்கமான இரவுகளின்,
நெருப்பான கணங்களில்,
நான் உன்னை சேர்ந்திருந்த போது,
என் கண்களில் தோன்றி மறைந்தது,
நீ என் கைப்பிடித்து,
காதல் சொன்ன கணங்கள்;
மெல்லச் சிரித்தப்படி,
நான் உன் புறம் திரும்ப,
நீயோ வெகு நாள் தாகம் தீர்ந்த பாவனையில்,
மறுபுறம் திரும்பினாய்.
திடிக்கிட்ட நான்,
தேட ஆரம்பித்தேன்,
கட்டிலில் தொலைந்த நம் காதலை.

11 comments:
oru aaanai(boy) pathi pen(girl) ezhutheyeaa kavithaiyeaa ethu?...neraiyeaa pennai pathi ezhuthuratha
padichittu ethaa pidikum poothu different-ta irukku...I didnt understand it at 1st time...
Very good! Nalla Varigal! பெண்கள் எதிர்பார்க்கும் அன்பு இதுதானோ! அதுபோல ஆண்கள் எதிர்பார்பது என்னனு யோசிச்சி பார்த்தேன் - இதுதான் தோன்றியது!
"நீ - என் கனவுகளை பகிர்ந்தபொழுது,
என் மகிழ்ச்சியில் கிளர்ந்தபொழுது,
என் துயரங்களை சுமந்தபொழுது - வராத காதல்!
என் தோளின்மீது பக்கபலமாய் சாய்ந்தபொழுது நினைவில் நிலைத்ததேனோ??!!"
Are guys so mean!!!!!!!!!!!!!!!!!!!!!!
Beautiful kavithai veda:)
@seenu,
yes these lines are views of a woman. but it can also be considered as viceversa:)
@indian angel,
//பெண்கள் எதிர்பார்க்கும் அன்பு இதுதானோ! //
சரியாக சொன்னீர்கள்:)
//நீ - என் கனவுகளை பகிர்ந்தபொழுது,
என் மகிழ்ச்சியில் கிளர்ந்தபொழுது,
என் துயரங்களை சுமந்தபொழுது - வராத காதல்!
என் தோளின்மீது பக்கபலமாய் சாய்ந்தபொழுது நினைவில் நிலைத்ததேனோ??!!" //
அது தான் உண்மையான நேசம் வெளிப்படும் கணங்கள்:) அருமை:)
@shuba,
no it cannot be generalised. but mostly they dont understand the real expectations of women.
@jeev,
welcome here and thanks:)
//mostly they dont understand the real expectations of women.//
i am strongly condemning ur words veda. Its not true.
நல்ல வரிகள். இருந்தாலும் இரவுகளின், கணங்களில் என்று பல நாட்கள் போல் சொல்லிவிட்டு ஒரு நாள் சுகம் என்று சொல்லி முடிப்பது சரியாகப்படவில்லை எனக்கு.
@siva,
i havent pointed out that all men are like that, i have even told that it cannot be generalised. pls read comments have given to seenu.
//இருந்தாலும் இரவுகளின், கணங்களில் என்று பல நாட்கள் போல் சொல்லிவிட்டு ஒரு நாள் சுகம் என்று சொல்லி முடிப்பது சரியாகப்படவில்லை எனக்கு. //
இங்கே ஒரு நாள் சுகம் என பொருள் பட நான் எழுதவில்லை. பொதுவாக சில பேரின் குணத்தை குறிப்பிட்டுள்ளேன். மேலும் அது ஆணா, பெண்ணா எனவும் குறிப்பிடவில்லை.
நீங்கள் உங்க கவிதை வரிகளில் ஆண் என்று பெண் என்று குறிப்பிடவில்லை. அதை நான் ஒத்துக் கொள்கின்றேன். நான் மறுப்பு, எதிர்ப்பு தெரிவித்தது சுபாவிற்கு நீங்கள் கொடுத்த பதிலுக்கு தான்.
veda,
kavithai romba arumai.. idhu ungal karpanaiyaal vandha kavithainnu nenachaa rombavee nalla irukku!!
@சிவா,
தங்கள் மறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது:)
@ப்ரியா,
நன்றி:)
Aanukku kannilum, pennukku nenjilum thaan kaadhal..
Post a Comment