Wednesday, 26 July, 2006

உன்னை நேசிக்க துவங்கினேன்




















விண்மீன்களை எண்ணத் துவங்கினேன்,
வண்ணத்துப் பூச்சிகளை வியக்க துவங்கினேன்.

மழைச் சாரலில் நனையத் துவங்கினேன்,
மனதினுள்ளே பேசத் துவங்கினேன்.

(நீ)சொன்னதை செய்யத் துவங்கினேன்,
செய்தவுடன் சொல்லத் தயங்கினேன்.

காலைகளைத் துரத்த துவங்கினேன்,
இரவுகளை அழைக்கத் துவங்கினேன்.

தூக்கத்தை விற்கத் துவங்கினேன்,
கனவுகளை வாங்கத் துவங்கினேன்.

துவங்கியதை நிறுத்த தயங்கினேன்,
தயங்கியதை செய்யத் துவங்கினேன்.

என்னிலிருந்து என்னை துரத்த துவங்கினேன்,
உன்னை என்னுள் அழைக்கத் துவங்கினேன்.

துவக்கத்திற்கெல்லாம் முடிவில்லாமல் போனால் என்ன?
என நினைக்கத் துவங்கினேன்,
உன்னை நேசிக்கத் துவங்கினேன்.

14 comments:

Shuba said...

WOW WOW WOW WOW WOW WOW.................i JUS LOVEEEEEEEEEEEEEEEEE IT...ARUMAIYAANA KAVITHAI...VEDAAAAA soooooooooooooper every inch of a girls feeling girls will enjot it a lot!!!!!naan sonna maadiriyeee eluthinathukku thankssss ini ella kavithaiyum ippdi than irukkanum...jollyaa touchingaaa cheeerfulla enakku pudicha maadiri ...gud gud gud

நாகை சிவா said...

வேதா! என்னடா கவுஜல (கவிதை நாங்க அப்படி தான் சொல்லுமோம்) ஏதோ மிஸ் ஆன மாதிரி இருக்கேனு பாத்தேன். அதுக்கு இப்ப காரணம் கிடைத்து விட்டது. சுபா எங்க எங்க இப்படி. இவங்க ஏதோ கவுஜ பெயரில் எழுதிக்கிட்டு இருந்தாங்க. அதையும் கெடுக்கனும் என்று முடிவு கட்டு வீட்டீர்கள் போல... சரி நடப்பது நடக்கட்டும்.

நாகை சிவா said...

ஒ.கே வேதா, போன பின்னூட்டம் வழக்கமான பின்னூட்டம். இந்த பின்னூட்டம் உங்க கவுஜ திறனாய்வு செய்யும் பின்னூட்டம். பொறுத்துக் கொள்ளவும்.

ஆரம்ப வரிகள் எல்லாம் எல்லாரும் எழுதுவது போல சதாரணமாக இருந்தாலும்,

//துவங்கியதை நிறுத்த தயங்கினேன்,
தயங்கியதை செய்யத் துவங்கினேன்.

என்னிலிருந்து என்னை துரத்த துவங்கினேன்,
உன்னை என்னுள் அழைக்கத் துவங்கினேன்.//

இந்த இரண்டு வரியில் எல்லாத்தையும் அடித்து எறிந்து வீட்டீர்கள். அதிலும் துவங்கியதை..... செய்ய துவங்கினேன் ரொம்பவே டாப்.

பிறகு, இந்த வரிகள்
//துவக்கத்திற்கெல்லாம் முடிவில்லாமல் போனால் என்ன?//
கொஞ்சம் ஒட்ட மறுக்கின்றதே. பல முறை படித்து பார்த்தேன். இந்த வார்த்தைகள் தனியாக தான் நிற்கின்றது.
துவக்கத்திற்கெல்லாம் என்பதற்கு பதில் துவங்கியெதற்கெல்லாம் என்ற வார்த்தை போட்டால் சரியாக இருக்கோமோ.

வேதா said...

@சுபா,
என் கவிதை தங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி:)

@சிவா,
என் கவிதைல ஏதோ மிஸ் ஆகுதுன்னு கண்டுபிடிச்சீங்களே அது வரைக்கும் மகிழ்ச்சி தான்.:)

//ஆரம்ப வரிகள் எல்லாம் எல்லாரும் எழுதுவது போல சதாரணமாக இருந்தாலும், //

நீங்க வேற இந்த ஆரம்ப வரிகள் தான் எனக்கு வரல:)

//இந்த இரண்டு வரியில் எல்லாத்தையும் அடித்து எறிந்து வீட்டீர்கள். அதிலும் துவங்கியதை..... செய்ய துவங்கினேன் ரொம்பவே டாப்.//

ரொம்ப நன்றிங்க:0
எனக்கு சாதாரணமாகவே எழுத வரல்லன்னு தோணுது அதான் ஆரம்ப வரிகள் அவ்ளோ சீக்கரத்துல வரல:)

//துவக்கத்திற்கெல்லாம் என்பதற்கு பதில் துவங்கியெதற்கெல்லாம் என்ற வார்த்தை போட்டால் சரியாக இருக்கோமோ. //

அப்படியும் போட்டுக்கலாம். ஆனால் எழுதின கவிதையை மாத்த முடியாது:)

அப்புறம் சுபா ரொம்ப கேட்டுக்கிட்டதால ஒரு தோழி என்ற முறையில் இந்த கவிதையை முயற்சி செய்தேன். ஆனால் முழு வெற்றி அடையவில்லை எனத் தோணுகிறது.

Gopalan Ramasubbu said...

நல்ல கவிதை வேதா.

முதல் சில வரிகள் எல்லாம் மற்ற கவிதைகளில் படித்தவைதான்.

/(நீ)சொன்னதை செய்யத் துவங்கினேன்,
செய்தவுடன் சொல்லத் தயங்கினேன்./

எதுக்கு தயங்கனும்.அதுவும் சொன்னதைத் தானே செய்தீர்கள். கேள்வி முட்டாள் தனமாக இருந்தால் லூசுல விட்டுவிடவும் .he hee:)

ஒரே வார்த்தயை( துவங்கினேன்) நிறைய உபயோகித்திருக்கிறீர்கள். இதற்கு இலக்கணத்தி ஒரு பெயர் இருக்கிறது. என்ன பெயர் என்று மறந்துவிட்டது.

Shuba said...

gopalan ramasubbu:


//
/(நீ)சொன்னதை செய்யத் துவங்கினேன்,
செய்தவுடன் சொல்லத் தயங்கினேன்./

எதுக்கு தயங்கனும்.அதுவும் சொன்னதைத் தானே செய்தீர்கள். கேள்வி முட்டாள் தனமாக இருந்தால் லூசுல விட்டுவிடவும் .he hee:)//

correct kelvi muttal thanama irukku...gopskku logic purila pola irukku veda!

வேதா said...

@கோப்ஸ்

//கேள்வி முட்டாள் தனமாக இருந்தால் லூசுல விட்டுவிடவும் .he hee:)//
அதான் நீங்களே ஒத்துக்கிட்டீங்களே, இனிமே நான் என்ன சொல்றதுக்கு இருக்கு:)


//ஒரே வார்த்தயை( துவங்கினேன்) நிறைய உபயோகித்திருக்கிறீர்கள். இதற்கு இலக்கணத்தி ஒரு பெயர் இருக்கிறது. என்ன பெயர் என்று மறந்துவிட்டது. //

ஒரு செய்யுளில் ஒரே வார்த்தை பல முறை ஒரே பொருளில் வந்தால் அது சொற்பொருள் பின்வருநிலையணி:)

@சுபா,
சில பேரைச் சொல்லித் திருத்தலாம், சில பேரை அடித்து திருத்தலாம், ஆனா சிலர் திருந்தாத கேஸ்:)

krk said...

As usual...a good one

வேதா said...

@krk,
as usual thanks:)

Seenu said...

gr8 poem...

Bala.G said...

Gud one....

Sasiprabha said...

Ennai vitru unnai vaangum vyaabaaram - Kaadhal

Anonymous said...

ஹும்... இந்தக் கவிதையில் தெரிவது வார்த்தைகளல்ல. உங்கள் உருவம். அதற்குபதில் நீங்கள் உங்கள் புகைப்படத்தையே போட்டிருக்கலாம்.

ச்ச்ச்சும்ம சொன்னேன் சார். நல்லா எழுதிருக்கீங்க. பிடிங்க பொக்கே..:)

veda said...

பொக்கேவிற்கு நன்றி அனானி:) நான் சார் இல்லை மேடம்:) உங்க பெயரை சொல்லியிருக்கலாமே:)