Tuesday, 18 July, 2006

அவன் என்னை மறுத்ததை
களையற்ற முகத்தைக் காட்ட மறுக்கும் நிலைக்கண்ணாடி,
நேரம் கரைவதை உணர்த்த மறுக்கும் கடிகாரம்,
வாட மறுக்கும் சூடியப் பூச்சரம்,
இமைக்க மறுக்கும் கண்கள்,
சிணுங்கலை நிறுத்த மறுக்கும் கால் கொலுசுகள்,
நெகிழ்வதை தடுக்க மறுக்கும் இதயம்,
இவை அறியுமோ,
அவன் என்னை மறுத்ததை.

20 comments:

srishiv said...

அருமையான வரிகள்,
மனதைத்தொட்டன....மென்மையான பெண்மையின் உணர்வுகளை கவிதையில் வடித்தமைக்கு நன்றிகள் வேதா..
ஸ்ரீஷிவ்.

logic said...

Veda..i read this in a time where i was all down with my personal probs..truely speaking tears ran out fo me..beautiful lines..am not able to withstand emotional jerks in life..but slowly learning to.

An awesome one.

வேதா said...

@ஷிவ்,
தங்களுடைய வருகைக்கும்,பாராட்டுக்கும் நான் தான் நன்றி சொல்ல வேண்டும்:)

@லாஜிக்,
உங்களுடைய மன வருத்தங்கள் மறைந்து மகிழ்ச்சி திரும்ப கடவுளிடம் என் பிரார்த்தனைகள்.
மனதை தளர விடாதீர்கள்:)
btw, did u read my latest post in the english blog:)

கைப்புள்ள said...

என்ன சொல்றதுன்னே தெரியலை வேதா. சூப்பர். உணர்வுகளை அழகாக வார்த்தைகளில் வடிக்கிறீர்கள். பாராட்டுகள்.

krk said...

Ullathai maraikum...Mugam...
Evarukku veendum...
Anbai pagirvadhukku...Vayadhu...
Evarukku vendum...

Urir attra poocharam...
Evarukku vendum...
Uyirai unara marukkum...idayam...
Evarukku vendum...

Enai marutha unakku...
Evai mattum podhuma...??!!

Gopalan Ramasubbu said...

This poem explicitly explains the pain of rejection.Excellent one veda.

நாகை சிவா said...

//என்ன சொல்றதுன்னே தெரியலை வேதா. //
என்ன சொல்றதுனு தெரியாட்டி பேசமா போக வேண்டியது தானே. தல நீ பல இடத்துல இதே டயலாக் அடிச்சு மக்கள ஏமாத்திகிட்டு இருக்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அவங்க எம்புட்டு கஷ்டப்பட்டு இது மாதிரி பீல் பண்ணி இருக்காங்க. நீ என்னடானா.....

நாகை சிவா said...

நல்லா இருக்கு வேதா, அழகான வார்த்தைகள்.
மறுக்கப்படுவது ஒரு மிக பெரிய வலி தான். வலி என்பதை விட ஆறாத ரணம் என்று கூட சொல்லாம்.

கைப்புள்ள said...

//தல நீ பல இடத்துல இதே டயலாக் அடிச்சு மக்கள ஏமாத்திகிட்டு இருக்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அவங்க எம்புட்டு கஷ்டப்பட்டு இது மாதிரி பீல் பண்ணி இருக்காங்க. நீ என்னடானா.....//

வேதா! நீங்களும் இதே மாதிரி உணர்ந்திருந்தீங்கன்னா வருந்துகிறேன். சும்மா வெறுமனே நல்லாருக்குன்னு சொல்ல வேணாம்னு தான் அப்படி சொன்னது. அதுக்குள்ள புலி என் பின்னாடியே மோப்பம் பிடிச்சு வந்து மாட்டி விட்டுருச்சு.
:)

உண்மையிலேயே கவிதை நல்லாருக்குங்க.

shanmugappriya said...

wooow as usual toooooo goodma.

Few superb lines saying everything about Love pain.

வேதா said...

@கைப்புள்ள,
சிவா சொன்னத பத்தி எல்லாம் கவலப்படாதீங்க, அவருக்கு பொறாமை. நீங்க சொல்ல வந்தது எனக்கு புரியுது:)


@சிவா,
வலி என்பது ஆறாத ரணம் அதுக்கான மருந்து கிடைக்கும் வரை:)

@கார்த்திக்,
அழகான ஆழமான வரிகள்:)

@கோபாலன்,
அப்பாடி எவ்ளோ பெரிய கமெண்ட்:)

@ஷண்முகப் ப்ரியா,
நன்றி:)

கீதா சாம்பசிவம் said...

யாருங்க அது? :-)

கீதா சாம்பசிவம் said...

வேதா,
கவிதை simply superb.

வேதா said...

@கீதா,
யாருமில்லீங்கோவ்:)
நன்றி:) அதுவும் வெத்தலைபாக்கு வச்சு அழைக்காமலே வந்ததுக்கு;)(jus kidding)

நாகை சிவா said...

//யாருங்க அது? :-) //
இது உங்களுக்கு இல்ல, வேற ஒருத்தருக்கு, அப்படி தானே கீதா!

//அதுக்குள்ள புலி என் பின்னாடியே மோப்பம் பிடிச்சு வந்து மாட்டி விட்டுருச்சு. //
உண்மைய சொன்ன நீ ஒத்துக்கவே மாட்டியே. அவங்க ஏதும் தப்பா எடுத்தக்க மாட்டாங்க. அவங்களும் நம்ம செட்டு தான்.

//வலி என்பது ஆறாத ரணம் அதுக்கான மருந்து கிடைக்கும் வரை//
இல்லங்க, காலம் ஒரு சிறந்த மருந்து. காலத்தை தவிர பல மருந்துகளும் உண்டு. ஆனால அந்த வலியால், காயத்தால் ஏற்பட்ட வடு என்றும் மறையாது. மறையவும் கூடாது. என்ன சொல்லுறீங்க.

//அவருக்கு பொறாமை.//
ஹூக்கும் , அப்படியே பொறாமை பட்டுடாலும்.... சும்மா காமெடி பண்ணாதீங்க வேதா!

வேதா said...

//ஆனால அந்த வலியால், காயத்தால் ஏற்பட்ட வடு என்றும் மறையாது. மறையவும் கூடாது. என்ன சொல்லுறீங்க. //
வடு மறையாது என்பது உண்மைத் தான். ஆனால் மறையவும் கூடாது என்றால் அது அவரவர் குணத்தைப் பொறுத்து என்பேன். சில பேர் நிஜமாகவே மறந்து விடுவார்கள்.

//ஹூக்கும் , அப்படியே பொறாமை பட்டுடாலும்.... சும்மா காமெடி பண்ணாதீங்க வேதா! //
இதிலென்ன காமெடி அதான் அழகா கதையெல்லாம் எழுதறீங்க ஒரு கவிதை எழுத முடியாதா என்ன?;)

நாகை சிவா said...

//ஆனால் மறையவும் கூடாது என்றால் அது அவரவர் குணத்தைப் பொறுத்து என்பேன். சில பேர் நிஜமாகவே மறந்து விடுவார்கள்.//
மறையக் கூடாது என்பது ஆழ் மனதில் தங்கி இருக்கும். மிக அரிதாக எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அது வெளிப்படும் என்பது என் கருத்து.


//அதான் அழகா கதையெல்லாம் எழுதறீங்க ஒரு கவிதை எழுத முடியாதா என்ன?;)//
பாத்திங்களா, நம்மள் கிண்டல் பண்ணிட்டீங்க அழகா கதை எழுதுவேன் என்று. பதிவுலகில், எழுத்துலகில் இப்ப தாங்க தவழ தொடங்கி உள்ளேன்.
கவிதை எழுதும் எண்ணம் ஏதும் கிடையாதுங்க.

Priya said...

romba romba creative kavithai... arumai...

Priya said...

kavithai sama arumai!!!

Sasiprabha said...

Nee aludhadhaal nanaindha selai thalippu ariume...