Saturday 24 September 2005
எதிர்பார்ப்பு
மனம் தான் நம் அனைவருடைய உண்மையான முகம். அது என்னை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது.நான் சொல்ல நினைத்த,நினைக்கிற எண்ணங்கள் என் மனதுள்ளே புதைந்து போகின்றன.எங்கே,என்னிடம் உள்ள ரகசியங்களை வெளியே சொல்ல முடியுமா உன்னால்? என்று என்னை பார்த்து அது நகைக்கின்றது.ஓவ்வொரு முறையும் நான் சொல்ல நினைத்து,சொல்லாமல் விடுகின்ற எண்ணங்கள் என் மனதோடு சேர்ந்து என்னை பார்த்து சிரிக்கின்றன. என் எண்ணங்களை,சொல்ல வேண்டியவர்களிடம், சொல்ல வேண்டிய நேரத்தில் தயங்காமல்,நான் சொல்ல போவதை ஆவலுடன் என்னுடன் சேர்ந்து என் மனமும் எதிர்பார்க்கின்றது.
Subscribe to:
Posts (Atom)
